search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parkur hills"

    • பர்கூர் மலைப்பகுதியில் மேற்கு மலை, கிழக்கு மலை என 2 பிரிவுகளாக உள்ளது.
    • இங்கு விளையக்கூடிய பொருட்களை வாங்க அந்தியூர் சந்தைக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த பர்கூர் ஊராட்சிக்கு 33 குக்கிராமங்கள் உள்ளது. மேலும் இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு இருந்து வருவதால் அப்பகுதி பசுமையாகவும், கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காட்சி அளிக்கின்றது.

    மேலும் பர்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட தாமரைக்கரை பகுதி மிகவும் உயரமான பகுதியாக இருப்பதனால் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு இணையாக இந்த பகுதியில் சில்லென ரம்மியமான காற்று அடிப்பதால் எப்பொழுதும் ஊட்டியில் இருக்கின்ற சீதோஷ்ண நிலை காணப்படும்.

    இதனால் அந்த பகுதிகளில் அதிக அளவில் தங்கும் விடுதிகள் கட்டப்ப ட்டு உள்ளது. ஊட்டி, கொடைக்கானல் செல்ல முடியாத சுற்றுலா பயணிகள் இந்த பகுதிக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தியூர், ஆப்பக்கூடல், பவானி, கோபி உள்ளிட்ட பகுதியிலி ருந்து அதிகளவில் பர்கூர் மலை பகுதிக்கு வந்து தங்கி செல்வது வாடிக்கையாக உள்ளது.

    இந்த பகுதிகளில் இயற்கையான காற்றும், மூலிகை கலந்த இயற்கை சூழ்நிலையை சுவாசிக்க முடிகிறது என்பதால் இங்கு வந்து தங்குவதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    நகர்ப்புறங்களில் வாகனங்களின் புகை மற்றும் ஹாரன் சத்தம் உள்ளிட்டவைகளால் உடலுக்கும் அதிகளவில் மன அழுத்தத்தை கொடுப்ப தனால் இங்கு வந்து வாரத்தில் 2 நாட்கள் தங்கினால் நல்ல நிலையில் மன அமைதி கிடைப்ப தாகவும் தெரிவித்தனர்.

    பர்கூர் மலைப்பகுதியில் விளையக்கூடிய தானிய வகைகளான ராகி கம்பு, பச்சைபயிறு, தட்டை ப்பயிறு, பலாப்பழங்கள் மிகவும் சுவையாகவும் இயற்கை உரங்களை பயன் படுத்தி விளைவதனால் இந்த பொருட்கள் மிகவும் சுவையாக கிடைக்கிறது.

    இங்கு விளையக்கூடிய பொருட்களை வாங்க அந்தியூர் சந்தைக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    பர்கூர் மலைப்பகுதியில் மேற்கு மலை, கிழக்கு மலை என 2 பிரிவுகளாக உள்ளது. மேற்கு மலை பகுதியில் மணியாச்சிபள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் மழைக்காலங்களில் பெய்யக்கூடிய நீர்பாலாற்றில் கலந்து மேட்டூர் அணையை சென்று அடைகின்றது.

    இந்த பகுதி எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும். யானை, மான், உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த பகுதியில் தண்ணீர் குடிப்பதற்கும், மூங்கில் தூர்களை உடைத்து சாப்பிட யானை கூட்டங்கள் அதிக அளவில் இந்த பகுதியில் முகாமிட்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேற்கு மலைப்பகுதியில் தாமரைக்கரையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் தம்பிரெட்டி பகுதியில் மிகவும் பிரசித்து பெற்ற மஞ்சு மாதேஸ்வரன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் தண்ணீருக்கு நடுவில் பாறையில் சாமி சிலைகள் அமைந்துள்ளது. தற்போது பர்கூர் மலைப்பகுதியில் மழை பெய்து வருதால் குட்டைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் தண்ணீரில் நீந்தி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ×