என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pen monument"
- மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
- பேனா நினைவுச் சின்ன திட்டத்தை ரத்து செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
புதுடெல்லி:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி கொடுத்துள்ளது. மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து விரைவில் கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். பேனா நினைவுச் சின்ன திட்டத்தை ரத்து செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற மனுக்களை பொதுநல மனுவாக ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
- பேனா நினைவு சின்னத்துக்கு எதிராக ராமநாதபுரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த நல்லதம்பி உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
- மீனவர்கள் கருத்துக்களை அறியாமல் தமிழக அரசு பேனா நினைவு சின்னம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி:
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவும் ஒப்புதல் அளித்து உள்ளது. இதையடுத்து விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.
இந்த நிலையில் பேனா நினைவு சின்னத்துக்கு எதிராக ராமநாதபுரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த நல்லதம்பி உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில் பொதுமக்கள் குறிப்பாக மீனவர்கள் கருத்துக்களை அறியாமல் தமிழக அரசு பேனா நினைவு சின்னம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது இயற்கை நீதிக்கு எதிரானது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கடல் வளமும் பாதிப்படையும். மேலும் கடலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள 32 மீனவ கிராமத்தினர் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். இதை கருத்தில் கொண்டு கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைக்க தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய் கிஷண்கவுல், சுதன்துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் வழக்கை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் மனுதாரர்கள் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியது.
- அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால் பணிகளை விரைவில் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை:
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டு. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
பேனா நினைவுச் சின்னம் தொடர்பான தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் வழங்கிய நிலையில், இப்போது மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியிருக்கிறது. சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு விதித்த அதே 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது.
தேவையான அனைத்து அனுமதியும் கிடைத்திருப்பதால் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான பணிகளை விரைவில் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
- பூங்காவில் இந்த பேனா சின்னம் வைப்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது.
- 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த பூங்காவில் 10 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக 10 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரே நகராட்சி சார்பில் ரூ.9¼ கோடியில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த பூங்காவில் 10 அடி உயரத்தில் பேனா சிலை வடிவத்தில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை சுற்றி நீரூற்று போன்றும், வட்ட வடிவில் நீரில் மீன்கள் காணப்படும் வகையில் அதன் மேல் சிறிய பாலம் போன்று அமைத்து பேனா அருகே மக்கள் சென்று பார்க்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
இந்த பேனா சின்னம் குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் பேனா ஒரு அடையாள சின்னமாகவும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் இந்த பேனா சின்னம் வைப்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது' என்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவு சின்னமாக சென்னையில் கடலில் பேனா நினைவுச் சின்னம் வைக்க திட்டமிட்டு அதற்கு ஆதரவும், எதிர்ப்பு இருந்து வருகிற நிலையில், தற்போது புதுக்கோட்டையில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- இந்த திட்டத்திற்கு பொதுமக்களின் கருத்தை கேட்க வேண்டும்.
- மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற வேண்டும்.
சென்னை மெரினாவில் அமைக்கப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு அருகில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது.
ரூ.80 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த நினைவுச் சின்னத்திற்கு சென்றடையும் வகையில் 290 மீட்டர் தூரத்திற்கு கடற்கரையிலும், 360 மீட்டர் தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு அனுமதி கோரி தமிழ்நாடு பொதுப்பணித்துறை சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தை கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் பரிசீலித்து ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு முதல் கட்ட அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுமக்களிடம் இந்த திட்டத்திற்காக கருத்துகளை கேட்ட பின்னர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்