என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pennadam"
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு பகுதியை சேர்ந்தது சோழன்நகர். இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள்.
நேற்று மாலை 5 மணி அளவில் இந்த பகுதியில் திடீரென்று உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் ஓடி கொண்டிருந்த டெலிவிஷன்கள், கிரைண்டர்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் தீயில் கருகி எரிந்து புகையாகின. இதையறிந்து வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
உயர்மின் அழுத்தம் காரணமாக 30 டி.வி.க்கள், 5 கிரைண்டர்கள், 2 மிக்ஷிகள், 10 செல்போன்கள், 15 மின்விசிறிகள் தீயில் கருகி எரிந்து நாசமானது. மேலும் சார்ஜில் போடப்பட்டிருந்த 5 செல்போன் வெடித்து சிதறின.
சேதமடைந்த டெலிவிஷன், கிரைண்டர், மிக்ஷி போன்றவற்றை அப்பகுதி பொதுமக்கள் சாலையில் வீசினர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் பழமையான மின்மாற்றி உள்ளது. இதன் காரணமாக இங்கு அடிக்கடி மின்அழுத்தம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்மின் அழுத்தம் காரணமாக வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமாகி வருகிறது. இனியும் இந்த மின்மாற்றியை மாற்றவில்லை என்றால் பெண்ணாடத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், பண்ருட்டி, பெண்ணாடம், திட்டக்குடி போன்ற பகுதிகளில் இரவு நேரத்தில் பலத்த மழை கொட்டியது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெண்ணாடம் அருகே சமுத்திரசோழபுரம் கிராமத்தில் வெள்ளாறு செல்கிறது.
இந்த வெள்ளாற்றின் குறுக்கே அரியலூர் கோட்டைகாடு கிராமத்தை இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக அரியலூர் மாவட்டம் முள்ளுக்குறிச்சி, ஆதானகுறிச்சி, முதுக்குளம், பாசிக்குளம் மற்றும் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்பட 60 கிராம மக்கள் சென்று வந்தனர். இருசக்கர வாகனங்களிலும் சென்று வந்தனர்.
கடந்த 3 நாட்களாக பெண்ணாடம் பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக ஆனை வாரி ஓடை, உப்புஓடை ஆகிய ஓடைகளில் இருந்து மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வெள்ளாற்றில் கலந்தது. இதனால் வெள்ளாற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடி தரைப்பாலம் நள்ளிரவு 12 மணியளவில் அடித்து செல்லப்பட்டது.
வெள்ளாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் தரைப்பாலம் மேலும் உடைந்தது.
தரைப்பாலம் உடைந்ததால் 60 கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அவர்கள் சுமார் 27 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் உடைந்த தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று காலை சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்பு உடைந்த தரைப் பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பெண்ணாடம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது வீடு மழையில் நனைந்து இருந்தது. இதன் காரணமாக அவரது வீட்டின் சுவர் நேற்று மாலை இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். #Rain #Flood
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த வடகரை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது45). விவசாயி. இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ராஜாவின் குடிசை வீட்டில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த ராஜாவையும் அவரது குடும்பத்தினரையும் சத்தம் போட்டு எழுப்பினர்.
சத்தம் கேட்டு எழுந்த ராஜா வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக வீட் டில் இருந்து வெளியே வந்தனர்.
பின்னர் அந்த பகுதி பொது மக்கள் உதவியுடன் ராஜா தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்து சிதறியது.
இதில் தீயின் வேகம் மேலும் அதிகரித்து அருகில் இருந்த ராஜாவின் தாய் ஞானாம்பாளின் குடிசை வீட்டிற்கும் தீ பரவியது.
இது குறித்து திட்டக்குடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ராஜாவின் வீட்டில் உள்ள 20 ஆயிரம் பணம் மற்றும் 8 பவுன் நகை மற்றும் 2 வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்தன.
இது குறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவின் வீட்டில் மின்கிசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது வேறு எதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார்குடிகாடை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் ஜெயா(வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இதில் ஜெயா தேர்ச்சி அடையவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைக்கு சென்று தூக்குப்போட்டார். இதைபார்த்த அவரது சகோதரர் சத்தம்போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
மயங்கிய நிலையில் ஜெயாவை மீட்டு இருந்த அவரை சிகிச்சைக்காக திட்டக்குடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்த்திரிக்கு அவர் அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்