search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pensioners Welfare Association Meeting"

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • ஓய்வூதியர் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகரில் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் நலச்சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சங்கத்தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது.

    இக்கூட்டத்தில் மாநில தலைவர் ராகவன் கலந்து கொண்டு பேசினார். மாநில இணைச்செயலாளர் முத்துக்குமாரசாமி வாழ்த்தி பேசினார். மருத்துவ காப்பீட்டு திட்ட சந்தா தொகையை ரூ.300 ஆக உயர்த்தியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஓய்வூதியர் இறந்தால் ரூ.1½ லட்சம் நிதி வழங்க வேண்டும். 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். ெரயில் பயணத்தில் முதியோர்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த சலுகைகளை வழங்க வேண்டும்.

    அரசு பஸ்களில் 50 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும். முதியோருக்கு தனியாக அமைச்சரவை ஏற்படுத்துவதுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கலெக்டர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சரிடம் இருந்து விருது பெற்ற கலெக்டர் ஜெயசீலனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முடிவில் சங்க செயலாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.

    ×