என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "People enjoyed"
ஈரோடு:
சந்திர கரகணம் நேற்று நள்ளிரவு தமிழ் நாடு முழுவதும் மிக நன்றாக தெரிந்தது. 21-ம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணமாக நேற்று அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, சென்னிமலை, கவுந்தப்பாடி, அந்தியூர், ஆப்பக்கூடல், புஞ்சைபுளியம்பட்டி, பவானி, பவானிசாகர், கொடுமுடி, சிவகிரி என அனைத்து பகுதிகளிலும் சந்திர கிரகணம் மிக தெளிவாக தெரிந்தது.
நள்ளிரவு 12 மணிக்கு மேல் மெதுவாக பிடித்த கிரகணம் பிறகு போக போக சந்திரனை மெல்ல மெல்ல மறைத்தது. கருப்பு கலரில் மறைக்கப்பட்ட சந்திரன் பிறகு முழுவதும் மறைக்கப்பட்டு செம்மண் கலரில் தெரிந்தது.
ஈரோடு நகரில் பல பொது மக்கள் கண்விழித்திருந்து இந்த சந்திர கிரகணத்தை வீட்டின் மொட்டை மாடியில் நின்று பார்த்து ரசித்தனர்.
வெறும் கண்ணால் சந்திரகிரகணத்தை தாராளமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பயமின்றி மக்கள் கிரகணம் பிடிப்பதை ஆர்வத்துடன் பார்த்தனர்.
பள்ளி மாணவ- மாணவிகளும் நேற்று நள்ளிரவு வரை தூங்காமல் காத்திருந்து கிரகணத்தை பார்த்து மகிழ்ந்தனர். #Lunareclipse