என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "People Grievance Day Meeting"
- 4 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்தப்படுகிறது.
- அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 26-ந் தேதி மாலை 4 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் யோசனை, புகார்களை ஏ.விஜயதனசேகர், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641601 என்ற முகவரிக்கு கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும். கடிதத்தின் மீது DAK ADALAT CASE என்று தவறாமல் குறிப்பிட்டு இருக்க வேண்டும். வருகிற 20-ந் தேதிக்குள் கடிதம் அனுப்பி வைக்கலாம் என்று திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.
- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- கலெக்டர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
புதுக்ேகாட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 178 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
- தொடர்ந்து 13 பயனாளிகளுக்கு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் துரை ரவிச்சந்திரன்
தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களி டமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
மேலும், கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்தி றனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 302 மனுக்கள் பெறப்பட்டது.
இந்தக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்க ளுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்க ளுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து 13 பயனாளிகளுக்கு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பி ரமணியன், தென்காசி தாசில்தார் ஆதிநாராயணன், உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அனைத்துத்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்
- மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
- மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 5 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 5 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி களை வழங்கினார். மேலும், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற நகராட்சி, பேரூராட்சி அளவிலான இலக்கியப் போட்டிகளில் கட்டுரை, கவிதை, ஓவியம் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 18 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை யும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.5,479 மதிப்பிலான மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் எந்திரங்களையும் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.
மேலும், கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 356 மனுக்கள் பெறப்பட்டது.
இந்தக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப் பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மகளிர் திட்ட இயக்குநர் குருநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாரா யணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் (பொ) மாரியப்பன், உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்