search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People Stir"

    • பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • போக்குவரத்து பாதிப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராவரம் பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பூபதி என்பவர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார்.

    இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மற்றொரு ஊராட்சி செயலாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார். அருகில் உள்ள மல்லப்பள்ளி ஊராட்சி செயலாளர் ஒருவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

    கடந்த 2 மாதங்களாக பொறுப்பு அவர் அக்ரா வரம் ஊராட்சி அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லை இதனால் அப்பகுதியில் உள்ள பணிகள் பாதிப்பு ஏற்பட்டது.

    ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு நிரந்தர ஊராட்சி செயலாளரை நியமிக்க கோரி நேற்று காலை புதுப்பேட்டை நாட்டறம்பள்ளி செல்லும் சாலையில் அக்ரா வரம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியல் செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சிலர் நிரந்தரமாக ஊராட்சி செயலாளர் நியமிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்து பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×