என் மலர்
நீங்கள் தேடியது "permission"
- 60 கனமீட்டர் மிகாமல் களிமண் இலவசமாக எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.
- மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்ட த்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கட்டுபாட்டில் உள்ள நீர்நிலைகளில் அமைந்துள்ள மண், வண்டல் மண் மற்றும் களிமண் போன்ற சிறு கனிமங்களை தூர்வாரி கட்டணமில்லாமல் பொது மக்களின் வேளாண்மை நோக்கம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு மண் எடுக்க விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வேளாண்மை அலுவலர்கள் சான்று/மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க சான்றுடன், கிராம நிர்வாக அலுவலர்களிடம் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
விவசாய பயன்பாட்டிற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 ஏக்கர் பரப்பளவுள்ள நஞ்சை நிலத்திற்கு 75 கனமீட்டர் மற்றும் 1 ஏக்கர் பரப்பளவுள்ள புஞ்சை நிலத்திற்கு 90 கனமீட்டர் வண்டல் மண் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள், மண்பாண்டங்கள் செய்வதற்கு 60 கனமீட்டர் மிகாமல் களிமண் இலவசமாக எடுத்து கொள்ள உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும்.
இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேலசெவலை சுற்றி 18-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
- போலீசார் வாரச்சந்தை அமைப்பதற்கு அனுமதி மறுத்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மேலசெவல் சனிக்கிழமை வாரச்சந்தை வியாபாரிகள் கூட்டமைப்பு பொறுப்பாளர் கமலக்கண்ணன் தலைமையில் வியாபாரிகள், பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வாரச்சந்தை
மேலசெவலை சுற்றி 18-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள வர்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்க நெல்லை டவுன், பாளை பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.
எனவே மேலசெவலில் சனிக்கிழமை வாரச்சந்தை அமைக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் சந்தை அமைப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் வாய்மொழி யாக உத்தரவை பெற்று சந்தை அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்தோம்.
இதற்காக கடைகளுக்கு முன் தொகை, மாத வாடகை பேசி சந்தையில் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளின் அவசர தேவைகளுக்காக கழிவறை, குடிநீர் வசதிகள், மின் விளக்குகள் பொருத்தி உள்ளோம். 50 கடைகள் அமைப்பதற்காக அனைத்து பணிகளும் நடை பெற்று உள்ளது.
மேலும் அந்த கடைகளில் விற்பனை செய்வதற்காக பழங்கள், மீன், கருவாடு, மளிகை சாமான்கள் உள் ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்று செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்து விட்டோம்.
இந்நிலையில் முன்னீர் பள்ளம் போலீசார் மேல செவலில் வாரச்சந்தை அமைப்பதற்கு அனுமதி மறுத்து வருகின்றனர். சந்தை அமைப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டதால் மேலசெவலில் சனிக்கிழமை தோறும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடை கள் செயல்பட அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 1351 நீர் நிலைகளில் மண்பாண்டத்திற்காக மண் எடுக்க அனுமதி
- கலெக்டர் கவிதா ராமு அறிவிப்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1351 கண்மாய் மற்றும் குளங்களில், விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர் கள், மண்பாண்டம் செய்யும் கூட்டுறவு சங்கம் ஆகியோர் கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண்ணை எடுத்து பயன்படுத்தலாம். வண்டல் மண் பெறும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வருவாய் கிராமத்திலோ அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்திலோ வசிக்க வேண்டும். விவசாயிகள் வண்டல் எடுக்க அடங்கல் மற்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநர் (கனிமம் மற்றும் சுரங்கம் பிரிவிற்கு ) அனுப்பி அனுமதி பெற்றுகொள்ளலாம்.நன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 75 கனமீட்டர், ஹெக்டேருக்கு 185 கனமீட்டர், புன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 90 கனமீட்டர் ஹெக்டேருக்கு 222 கனமீட்டர் , மண்பாண்டம் செய்ய 60 கனமீட்டர் என்ற அளவிற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.வண்டல் மண் எடுக்கும் போது கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். குளத்தின் கரையின் உயரத்தின் இரண்டு மடங்கு தொலைவில் சம்மந்தப்பட்ட பொறியாளர் களால் நிர்ணயி க்கப்பட்ட இடத்தில் வண்டல் மண் அள்ள வேண்டும். ஓரு மீட்டர் ஆழத்திற்கு மேல் மண் அள்ளக்கூடாது. மேலும் குளத்தின் கரையை பாதையாக பயன்படுத்தக்கூடாது. குளத்தின் கரையின் குறுக்கே குறுக்கு பாதைகள் ஏற்படு த்தக்கூடாது. வண்டல் மண்ணை எக்காரணம் கொண்டு சேமித்து வைக்க அனுமதி இல்லை. வண்டல் மண் எடுக்கும் போது கரை, மதகு அல்லது கட்டுமான வேலைப்பா டுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்த க்கூடாது. டிரக்டரில் மட்டுமே வண்டல் மண் எடுத்து செல்ல வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்து ள்ளார்.
- விவசாயம், மண்பாண்ட தொழில்களுக்கு கண்மாய்களில் இருந்து வண்டல்- களிமண் எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- கலெக்டரின் ஒப்புதலுடன் பெற்றுக் கொள்ளலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்ட பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் இருந்து விவசாய நில மேம்பாடு மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு வண்டல், களிமண் எடுக்க தகுதி வாய்ந்த கண்மாய்களாக தேர்வு செய்யப்பட்ட விவரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு வெளியீடு விருதுநகர் மாவட்ட அனைத்து வட்டாட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நீர்வளத்துறை அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாடு பணிகளுக்கு அரசு அனுமதித்த வண்டல் மண், களிமண்ணை சிறப்பு அரசிதழில் வெளியீடு செய்யப்பட்ட கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக எடுத்துச் செல்ல விவசாய பணி செய்யும் விவசாயிகள் தங்களுடைய நில உடைமை ஆவணங்களான பட்டா, சிட்டா, அடங்கல் ஆகிய வற்றுடன் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சான்றிதழை இணைத்தும், மண்பாண்ட தொழில் செய்பவர்கள் மண்பாண்டத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற அங்கத்தினருக்குரிய சான்றிதழை இணைத்தும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி இயக்குநரிடம் மனு செய்து தேவையான வண்டல் மண், களிமண்ணை கலெக்டரின் ஒப்புதலுடன் பெற்றுக் கொள்ளலாம்.
விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றிற்கு 75 க.மீட்டரும், ஹெக்டேர் ஒன்றிற்கு 185 க.மீட்டருக்கு மிகாமலும், புஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றுக்கு 90 க.மீட்டரும், ஹெக்டேர் ஒன்றிற்கு 222 க.மீட்டருக்கு மிகாமலும் வண்டல் களிமண் எடுக்க அனுமதி வழங்கப்படும். மேற்கண்ட பயன்பாட்டிற்காக அளிக்கப்படும் இலவச அனுமதியினை வணிக நோக்கத்துடன் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நன்செய் நிலத்திற்கு 2 ஆண்டிற்கு ஒருமுறை 75 கன மீட்டருக்கு மிகாமல் எடுக்க அனுமதி.
- 2 ஆண்டிற்கு ஒரு முறை 30 கன மீட்டருக்கு மிகாமல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண், களிமண் போன்ற சிறுவகை கனிமங்களை விவசாயம், வீட்டு உபயோகம், மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
அரசாணைப்படி மாவட்டத்தில் 260 ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண், களிமண் போன்ற கனிமங்களை இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதன்படி தஞ்சை தாலுகாவில் 2 ஏரி, குளங்கள், ஒரத்தநாடு தாலுகாவில் 35, பூதலூரில் 2, பட்டுக்கோட்டையில் 160, பேராவூரணி தாலுகாவில் 61 ஏரி குளங்கள் என மொத்தம் 260 ஏரி, குளங்களில் வண்டல் மண், களிமண் எடுக்கலாம்.
எனவே தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இலவசமாக வண்டல் மண், களிமண் எடுத்துச்செல்ல கீழ்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் சம்மந்த ப்பட்ட வட்டாட்சியர்களது பரிந்துரையின்படி கலெக்டரால் (என்னால்) அனுமதி வழங்கப்படும்.
விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது விவசாய நிலம் வண்டல் மண், களிமண் எடுக்க, விண்ணப்பிக்கும் ஏரிகள் மற்றும் குளங்கள் அமைந்துள்ள அல்லது
அதனைச் சுற்றியுள்ள வருவாய் கிராமத்தில் அமைந்திருக்க வேண்டும். விவசாயப் பயன்பாட்டிற்கு ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள நன்செய் நிலத்திற்கு 2 ஆண்டிற்கு ஒருமுறை 75 கன மீட்டருக்கு மிகாமலும் மற்றும் புன்செய் நிலத்திற்கு 90 கன மீட்டருக்கு மிகாமலும் வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
பொதுமக்களின் சொந்த பயன்பாட்டிற்கு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை 30 கன மீட்டருக்கு மிகாமல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
எனவே, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்வோர் தங்களது சொந்த உபயோகத்திற்கு வண்டல் மண் , களிமண் போன்றவை தேவைப்படுவோர் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பித்து என்னிடம் அனுமதி பெற்று வண்டல் மண்,களிமண் எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுைர மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க 13 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
- மண்டலத்தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 336 இளைஞர்கள் மற்றும் தொழில் முனை வோர்களுக்கு இ-சேவை பயனர் குறியீட்டை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைச் செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு மின் முகமை ஆளுமையின் தலைமை நிர்வாக அலுவலர் பிரவீன் நாயர், கலெக்டர் அனீஸ் சேகர், வருவாய் அலுவலர் சக்திவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்சு நிகம், மாநக ராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங், துணை மேயர் நாகராஜன், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி, மிசா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த காளம்பாளையத்தில் அரசின் சார்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள கட்டிடம் பழுதடைந்து கீழேவிழும் நிலையில் உள்ளது.
- திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூலமாக நீர் நிரப்ப தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, ஊத்துக்குளி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு செயலாளர் அப்புசாமி அளித்த மனுவில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூலமாக நீர் நிரப்ப தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், தொரவலூர், மேற்குபதி, சொக்கனூர், பட்டம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளில் சீமை கரு–வேல மரங்கள், முட்புதர்களை அகற்றி, வண்டல் மண் எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு மண் அள்ளி தூர்வாரும்போது குளம் ஆழப்படுத்தப்படும்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்பட்டு வருவதால் வண்டல் மண் எடுத்து ஆழப்படுத்த விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இடைத்தரகர்கள் மண் அள்ளாமல் இருக்க அதிகாரிகள் கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த கூட்டத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த காளம்பாளையத்தில் அரசின் சார்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள கட்டிடம் பழுதடைந்து கீழேவிழும் நிலையில் உள்ளது. புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
- 50-க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.
- அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்கயம் :
காங்கயம் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிகளவில் விளம்பர பதாகைகள் உள்ளிட்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் காங்கயம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா, பழையகோட்டை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனரகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். இது குறித்து நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறியதாவது :- காங்கயம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் விளம்பர பதாகை, பிளக்ஸ் பேனர்கள் வைத்திட நகராட்சி ஆணையாளரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். தவறினால் நகராட்சி புதிய சட்ட விதிகளை மீறி வைக்கும் விளம்பர பதாகைகளால் ஏற்படும் விபத்துகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர் மற்றும் விளம்பரதாரரை முழு பொறுப்பாக்கி, அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி–னார்.
- நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் அறிவிப்பு வெளியானதும் சட்ட விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி தலைமை வன உயிரின காப்பாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களிடம் தன் பெயரை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூரிலுள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் 311 ஏக்கர் பரப்பளவு கொண்டது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளி தாலுகா எல்லையில் அமைந்துள்ளது. நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் அறிவிப்பு வெளியானதும் சட்ட விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சரணாலய பகுதிக்குள் வந்துசெல்லவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொது பணியாளர், சரணாலய எல்லையில் வன அலுவலர்களிடம் முன் அனுமதி பெற்ற பின்னரே சரணாலயத்துக்குள் செல்ல வேண்டும். சட்டவிதிகளின்படி எல்லை குறிகளை அழிக்கவோ மாற்றவோ கூடாது, வன உயிரினங்களை துன்புறுத்தக்கூடாது.
சரணாலயத்தில் இருந்து அகற்றப்படும் பொருட்களை, சுற்றுப்பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தலாம். வணிக நோக்கத்தில் பயன்படுத்தக்கூடாது. சரணாலயத்துக்கு தீ வைக்க கூடாது. எழுத்துப்பூர்வ அனுமதியில்லாமல் எவ்வித ஆயுதத்துடனும் பிரவேசிக்க கூடாது.
தீங்கு விளைவிக்கும் வெடி மருந்து, ஆபத்தான ரசாயனங்களை உள்ளே எடுத்துவரக்கூடாது. தேசிய வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல், சரணாலயத்துக்குள் வணிக சுற்றுலா, ஓட்டல், லாட்ஜ் கட்ட முடியாது.தலைமை வன உயிரின காப்பாளர், வன உயிரினங்கள் நலனுக்கு ஏற்ப சரணாலயத்தை ஒழுங்குபடுத்தலாம். கட்டுப்படுத்தலாம்,தேவையெனில் தடை செய்யலாம்.
சரணாலயம் அறிவிக்கப்பட்ட 3 மாதத்துக்குள், 10 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் நபர்கள் ஆயுத உரிமம் வைத்திருந்தாலும், ஆயுதங்கள் வைத்திருந்தாலும், குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி தலைமை வன உயிரின காப்பாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களிடம் தன் பெயரை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
தலைமை வன உயிரின காப்பாளர் முன் அனுமதியின்றி, சரணாலயத்தை சுற்றி, 10 கி.மீ., சுற்றளவில் வசிப்பவருக்கு புதிய உரிமம் எதுவும் வழங்கப்படாது. ஆக்கிரமிப்பு இருந்தால் அவர்களை வெளியேற்றலாம்.
அத்துமீறி எடுத்துவரும் பொருட்கள், கருவிகளை பறிமுதல் செய்யலாம். பாதிக்கப்பட்டவருக்கு இதுகுறித்து அறிந்துகொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிக்குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
- ஆகஸ்டு 18- ந்தேதி முதல் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் முதற்க ட்டமாக திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க ப்படும்.
கடலூர்:
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிக்குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த நிலையில் சிங்கரிகுடி, பூவரசன்குப்பம், பரிக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் ஒரே நேர்கோட்டில் இருந்து வருவதால் ஒரே நாளில் 3 லட்சுமி நரசிம்மரை நேரில் சென்று தரிசனம் செய்தால் மக்களுக்கு துன்பம் நீங்கி கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் என்பதால், இக்கோவிலில் திருமணம் செய்து கொள்வதற்கு கோவில் நிர்வாகத்தினரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பா ட்டில் உள்ள கோவில் என்பதால் உரிய முறையில் அரசிடம் அனுமதி பெற்று, அதன் பிறகு கோவில் வளாகத்தில் திருமணம் நடைபெறுவதற்கு அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் அறிவித்து வந்தனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக அனுமதி கேட்டு வந்தனர். இந்த நிலையில் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருமணம் செய்வதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியிரு ப்பதாவது: - சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவிலில் திருமணங்கள் நடத்துவதற்கு உரிய அனுமதியை இந்து சமய அறநிலைத்துறையின் மூலம் பெறப்பட்டுள்ளது. ஆகஸ்டு 18- ந்தேதி முதல் திருமணங்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. எனவே கோவிலில் திருமணம் நடத்த விருப்பமுள்ளவர்கள் கோவில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்கள் வழங்கி முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டி திருமணம் நடத்துவதற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது அரசு, முதன்முறையாக திரும ணங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற ஆகஸ்டு 18- ந்தேதி முதல் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் முதற்க ட்டமாக திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க ப்படும். பின்னர் மக்களின் வரவேற்பு மற்றும் முன்பதிவு அதிக அளவில் நடைபெறுவதை ெபாறுத்து கோவில் வளாகப் பகுதியில் பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப திருமணங்கள் நடத்துவதற்கு அரசின் உரிய வழிகாட்டுதலின்படி என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பித்து திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்படும் என்பதனை அதிகாரிகள் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். இதன் மூலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி யதோடு அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதற்கு ஏதுவாக அமையும் என தெரிவித்தனர்.
- 40 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்திய ஆதிதிராவிட மக்கள்
- கோர்ட் உத்தரவினால் அனுமதி
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மங்களநாடு கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் உட்பட 6 சமூகத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஸ்ரீ மங்களநாயகி அம்மன் ஆலயம் கிராம தெய்வமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அனைத்து சமூகத்தினரும் ஆலயத்திற்குள் சென்று வழிபட்டு வந்த நிலையில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் மட்டும் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் கதையாகி வந்த நிலையில் தற்போதைய இளைஞர்கள், பொதுமக்கள் தங்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை, வரி வசூல் செய்வதில்லையெனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கு விசாரணையில் கோவிலுக்குள் எந்த ஒரு திருவிழா நடத்தினாலும் ஆதிதிராவிடர் சமுதாய மக்களையும் சேர்த்து, அவர்களிடமும் வரி வசூல் செய்து விழா நடத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து நேற்று ஆடி வெள்ளி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் ஒன்றாக சேர்ந்து ஆலயத்திற்குள் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த தீண்டாமை பிரச்சனை நேற்று தீர்வுக்கு வந்தது.
- ஆடிப்பெருக்கையொட்டி நாளை பவானிசாகர் அணையின் மேற்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர்
- நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை யொட்டி 15 ஏக்கர் பரப்பள வில் பூங்கா உள்ளது. அணை மேற்பகுதியில் உள்ள நீர்த்தேக்க பகுதியை பொது மக்கள் பார்வையிட ஆண்டு தோறும் ஆடி 18 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்ட ங்களில் இருந்து ஆயிரக்க ணக்கானோர் பவானிசாகர் அணை மேற்பகுதியை பார்வையிட வருவது வழக்கம். பவானிசாகர் அணையை முழுவதுமாக நடந்தே பார்ப்பது ரம்மியமாக இருக்கும்.
இந்நிலையில் இந்த ஆண்டு அணையின் பாது காப்பு கருதி ஆடி 18 ஆம் தேதி (நாளை) பவானிசாகர் அணை மேற்பகுதியை பார்வையிட பொது மக்களுக்கு தடை விதிக்கப்ப ட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவி த்துள்ளனர். அதேசமயம் ஆடிப்பெருக்கு பண்டிகை நாளில் பவானி சாகர் பூங்கா வழக்கம் போல் திறந்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. இதுகுறித்து நீர்வள த்துறை அதிகாரிகள் கூறி யதாவது:- பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 84 அடியாக உள்ள நிலையில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டி உள்ளது.
மேலும் அணை மேற்பகுதி யில் உள்ள தேன் கூட்டில் தேனீக்கள் அதிகளவில் உள்ளன. ஆகவே பாதுகாப்பு கருதி ஆடி 18 ஆம் தேதி (நாளை) அணை மேற்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அணை மேல்பகுதியில் உள்ள நீர் தேக்கப் பகுதியை பொது மக்கள் பார்வையிட அனுமதி இல்லை அதே சமயம் பவானிசாகர் அணை பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும் என்றனர். இதேபோல் நேற்று பவானிசாகர் அணை மேற்பகுதியில் காட்டு யானை ஒன்று வனப்பகு தியை விட்டு வெளியேறி அணை மேற்பகுதி வழியாக பூங்காவுக்குள் நுழைந்து வெளியே சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக அந்த யானை மீண்டும் நீர்த்தேக்க மேற்பகு தியில் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பவானி சாகர் அணை மேற்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் அனுமதி க்கப்படும் என்று எதிர்பா ர்த்து காத்துக் கொண்டிருந்த பொது மக்களுக்கு இந்த தடை அறிவிப்பு ஏமாற்ற த்தை ஏற்படுத்தியுள்ளது.