search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "personal details"

    • மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் குறித்த விபரங்கள், பள்ளியின் கட்டமைப்பு குறித்த அனைத்து தகவல்களும் அவ்வப்போது பதிவேற்றப்படும்.
    • விஜயதசமி அட்மிஷன் தொடக்க வகுப்புகளுக்கு நடத்தியதால், மீண்டும் மாணவர் விபரங்களை அப்டேட் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்களின் விபரங்களை தொகுக்கும் வகையில், பள்ளிக்கல்வி மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளம் கொண்டுவரப்பட்டது. இதில், அரசுப்பள்ளிகளை பொறுத்தவரை மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் குறித்த விபரங்கள், பள்ளியின் கட்டமைப்பு குறித்த அனைத்து தகவல்களும் அவ்வப்போது பதிவேற்றப்படும். எமிஸ் புள்ளி விபர அடிப்படையில் தான் ஆசிரியர் காலியிடம் கணக்கிடுதல், மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்கள் கொள்முதல் செய்வது, புதிய பணியிடங்கள் தோற்றுவித்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

    வழக்கமாக கல்வியாண்டு தொடங்கும் போது ஆகஸ்டு மாதம் இறுதி வரை அட்மிஷன் நடப்பதால், அவ்வப்போது புதிதாக சேரும் மாணவர் விபரங்கள் உள்ளீடு செய்யப்படும். தற்போது விஜயதசமி அட்மிஷன் தொடக்க வகுப்புகளுக்கு நடத்தியதால், மீண்டும் மாணவர் விபரங்களை அப்டேட் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாணவரின் சுயவிபரங்கள் அனைத்தும், சரியாக இருப்பதை உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

    இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், எமிஸ் இணையதளத்தில் சர்வர் குளறுபடியால், உள்ளீடு செய்யப்படும் தகவல்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளது.மாதந்தோறும் இப்பணிகள் மேற்கொள்வதால், கற்பித்தலில் ஈடுபட முடியாத சூழல் நீடிக்கிறது. தொழில்நுட்ப குளறுபடிகளை சரிசெய்துவிட்டு, அப்டேட் பணிகள் மேற்கொண்டால் மட்டுமே இச்சிக்கலுக்கு தீர்வு காண முடியும் என்றனர். 

    • விரல் ரேகை பதிவு செய்யும் முறை புதிதாக கடந்த 1-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது.
    • நெல் காலதாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கடலூர் மண்டலத்தில் நடப்பு பருவத்துக்கு நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3-ம் பருவ நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களிலும் விவசாயிகள் தங்கள் நெல்லினை விற்பனைக்காக இணைய வழியில் பதிவு செய் யும்போது பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை புதிதாக கடந்த 1-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது.

    விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் நெல் வியாபாரிகள் உள் நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் நெல் காலதாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியும். பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலமும், ஆதார் எண்ணில் பதிவு செய்திருக்கும் செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. பெறு வதன் மூலமும் விவசாயி களின் விவரத்தை துல்லிய மாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த விரல் ரேகை பதிவு மூலம் விவசாயி களின் சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா? என கொள்முதல் நிலை யங்களிலேயே சரிபார்த்துக் கொண்டு நெல்லினை விற்பனை செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    பாதுகாப்பு குளறுபடி காரணமாக இங்கிலாந்து மந்திரிகள் தொலைபேசி எண்கள் கசிந்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #British #BritishMinister #PhoneNumber #Leaked
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் மாநாட்டையொட்டி மூத்த மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், எம்.பி.க்கள் ஆகியோரின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள், அந்தரங்க தகவல்களை கொண்டு ஒரு மொபைல் செயலி உருவாக்கி உள்ளனர்.

    ஆனால் அந்த செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் இப்போது சர்வ சாதாரணமாக எல்லோருக்கும் கிடைக்கிற நிலை உருவாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



    இதற்கு காரணம் மொபைல் செயலியின் பாதுகாப்பு குளறுபடிகள்தான் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    பொதுமக்கள் தங்கள் இ-மெயில் முகவரியை பயன்படுத்தி, கன்சர்வேடிவ் கட்சியின் அத்தனை பிரபலங்களின் அந்தரங்க தகவல்களையும் பெற முடிகிறதாம்.

    முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன், வாழ்க்கை குறிப்புகள், அவரது பதவி பெயர் அவமதிக்கும் விதத்தில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ‘டுவிட்டர்’ உபயோகிப்பாளர்கள் பலரும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    சுற்றுச்சூழல் மந்திரி மைக்கேல் கோவின் புகைப்படத்துக்கு பதிலாக ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோச்சின் படத்தை யாரோ மாற்றி வைத்துள்ளனர். இந்த ரூபர்ட் முர்டோச்சிடம் மந்திரி மைக்கேல் கோவ் பத்திரிகையாளராக பணியாற்றி இருக்கிறார்.

    பல எம்.பி.க்களுக்கு தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் வந்து, அவை இடையூறாக அமைந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

    இந்த பிரச்சினையை டான் பாஸ்டர் என்ற கட்டுரையாளர்தான் கண்டுபிடித்து அம்பலப்படுத்தி உள்ளார்.  #British #BritishMinister #PhoneNumber #Leaked 
    ×