search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petition to the collector's office"

    • நாங்கள் 40 மாற்றுத்திறனாளிகள் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    ஈரோடு, 

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது குறைகளை குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    அப்போது தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச் சங்கம் கூட்டமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர்.

    நாங்கள் 40 மாற்றுத்திறனாளிகள் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என மனு வழங்கி காத்து இருக்கிறோம். 7 - 3 - 2019 -ம் ஆண்டு பட்டா வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

    பின்னர் 16.10.2019-ம் ஆண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த கவிதா எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதில் விரைவில் விட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

    அப்போது கொரோனா தொற்று காலமாக இருந்ததால் வீட்டு மனை பட்டா வழங்கப்படாமல் இருந்தது.

    தற்போது அரசாணை எண் 24-ன் படி தமிழக முதல்  அமைச்சர் அறிவித்தபடி வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாற்றுத்திறனாளி களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    ×