என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plan"

    • தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
    • அதில் சேலம் மாநகரில் 54 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்படுகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் சேலம் மாநகரில் 54 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்படுகிறது.

    தொடக்க விழா

    சேலம் மாவட்டம் ஓம லூர் அருகே உள்ள காமலா பும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை காலை இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கார்மேகம், ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி, ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிர மணி, ரமேஷ், என்ஜினீயர் காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் செல்வி ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் பழனிகவுண்டர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டம் நாளை முதல் 1,418 பள்ளி களில் தொடங்கப்படுகிறது. இதனை அந்தந்த பகுதி எம்.பி., எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைக்கிறார்கள். இதன் மூலம் 1 லட்சத்து ஆயிரத்து 318 மாணவ-மாணவிகள் பயன் பெறு வார்கள். இதனால் இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக கொல்லி மலை வட்டாரத்தில் உள்ள 41 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான 1,588 மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் முதல் அமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    தற்போது முதல்-அமைச்சரின் காலை உண வுத் திட்டம் 15 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 673 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை யிலான 27,128 மாணவ-மாணவிகளும் மற்றும் 15 பேரூராட்சிகளில் உள்ள 59 பள்ளிகளில் படிக்கும் 3,751 மாணவ-மாணவிகளும் பயன்பெறும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 773 பள்ளிகளில் 32,497 மாணவ-மாண விகள் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் பயன்பெற உள்ளனர். முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல் பாட்டிற்கான சமையல் கூடங்களின் தயார் நிலை, உணவுப்பொட்களின் வினியோகம் மற்றும் கைபேசி செயலியில் தகவல் பதிவேற்றம் செய்வது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

    முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி டவும், கண்காணித்திடவும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர்.உமா கூறி உள்ளார்.

    • 1 கோடியே 45 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர்.
    • இரு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

    எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழு தலைவர்கள் நந்தினி ஸ்ரீதர், காமாட்சி மூர்த்தி, பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கிவைத்து, பயனா ளிகளுக்கு திட்டத்தின் வங்கி கணக்கு பற்று அட்டை வழங்கி பேசினார்.

    அப்போது அமைச்சர் பேசியதாவது: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடும் விதமாக, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1 கோடியே 6 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

    மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 உதவித்தொகை, நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், மகளிர் சுய உதவிக்குழு கடன் போன்ற பல திட்டங்கள் மூலம் பெண்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

    தமிழ்நாட்டில் 39 லட்சத்து 40 ஆயிரம் பேர் முதியோர் உதவித்தொகை, அமைப்புசாரா தொழி லாளர் உதவித்தொகை என மாதம் ரூ.1200 வழங்கப்பட்டு வருகிறது.

    இதனால் நேரடி யாக 1 கோடியே 45 இலட்சம் குடும்பங்கள் பயன்பெற்ற வருகின்றனர்.

    ஆகவே, சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் அரசுக்கு நீங்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என அமைச்சர் பேசினார்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் பேசியதாவது:

    நமது மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்திட்டம் விண்ணப்பங்கள் வழங்க இரு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அவ்விண்ணப்பங்களை ஆய்வு செய்யப்பட்டது.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி மேகலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், திமுக வினர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் கண்மணி நன்றி கூறினார்.

    • ஸ்ரீரங்கத்தில் கான்பரன்ஸ் ஹால், வணிக வளாகத்துடன் ரூ.11 கோடி செலவில் அமையும் புதிய பஸ் நிலையம் அமைய உள்ளது
    • விரிவான திட்ட அறிக்கை நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது

    திருச்சி, 

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமை க்க உத்தரவிட்டார். அதை த்தொடர்ந்து திருச்சி மாநக ராட்சி நிர்வாகம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் அருகாமையில் ஒரு ஏக்கர் இடத்தை தேர்வு செய்து அதில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க பெங்களூர் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்தது.பின்னர் அந்த நிறுவனம் திட்ட அறிக்கை தயாரித்து மாநகராட்சியிடம் ஒப்படை த்தது. பின்னர் அந்த அறி க்கையை மாநகராட்சி நிர் வாகம் நிதி அனுமதிக்காக நகராட்சி நிர்வாக இயக்குன ரகத்துக்கு ரஅனுப்பி உள்ள னர்.அதன்படி அங்கு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு ரூ. 11 கோடியே 10 லட்சம் செலவாகும் என மதிப்பி டப்பட்டுள்ளது.தரைத்தளத்தில் வணிக வளாகம் அமைக்கப்படு கிறது. அதில் 16 கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டு ள்ளது. முதல் தளத்தில் சிறிய நிகழ்ச்சிகளை நட த்தும் வகையில் கான்பரன்ஸ் ஹால் அமைக்க முன்மொ ழியப்பட்டுள்ளது.8 பஸ்களை நிறுத்தி வை க்கவும், பயணிகள் பஸ்களில் ஏறி இறங்குவதற்கு தனி வசதி அமைக்க ப்படுகிறது.ஒரு கேண்டீன் மற்றும் நேர கண்காணிப்பு அலுவ லகம், ஆண் பெண் இருபா லருக்கும் தனித்தனி கழி ப்பறைகள் அமைக்கப்பட உள்ளது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கும் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைக்கப்படும் இந்த பஸ்லயத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 80 பஸ்களை கையாள உள்ளன.நிதி ஒதுக்கியதும் டெண்டர் விட்டு பணிகளை தொடங்க உள்ளனர்.இது தொடர்பாக மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, தற்போது அனுப்பி உள்ள விரிவான திட்ட அறிக்கை முன்மொ ழிவுக்கு நிர்வாக அனுமதி கிடைத்ததும் தொழில்நுட்ப அனுமதிக்கு அனுப்பப்படும்.அதன் பிறகு மாநகராட்சி திட்டத்துக்கான டெண்டரை வெளியிடுவோம். அனேக மாக டிசம்பர் மாதத்தில் கட்டுமான பணிகள் தொட ங்கப்படும் என எதிர்பார்க்கி றோம் என்றனர்.

    • புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு காவிரி குடிநீர் வழங்க ரூ.2,195 கோடியில் புதிய திட்டம்
    • அமைச்சர் கே.என்.நேரு தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சிக்கு கடந்த 1994-ம் ஆண்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருச்சி ஜீயபுரம், காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதில் குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்த நிலையில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதனை சரி செய்யும் வகையில் குடிநீர் குழாய்கள் சீரமைத்து ரூ.75.06 கோடியில் குடிநீர் அபிவிரு த்தி திட்ட பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி திருவப்பூ ரில் நடைபெற்றது. நிகழ்ச்சி க்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 2195 கோடி மதிப்பீட்டில் 23 லட்சம் மக்கள் பயன்படக்கூடிய அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுக்க அனைத்து நடவடி க்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதியை தவிர தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அளவு குடி தண்ணீர் கொடுப்பதற்கு வடகிழக்கு பருவமழை மிக சிறப்பாக பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • பனை விதைகள் சேகரிக்கும் பணியில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகிறனர்.
    • இதுவரை 6 ஆயிரத்து 236 விதைகள் சேகரித்துள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உள்ள 38 ஊராட்சிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தை பாலம் தொண்டு நிறுவனம் முன்னெடுப்பில் டெல்டா பனை மர பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்துகிறது.

    இத்திட்டத்தை கடந்த வாரம் மாரிமுத்து எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதுவரை 22 ஆயிரத்து 640 பனை விதைகள் நடப்பட்டுள்ளது. இப்பணியில் சமூக ஆர்வலர்கள், சேவை அமைப்புகள் ஈடுபட்டு வருகிறனர்.

    தொடர்ந்து பனைவிதை சேகரிப்பும், நடவு பணியும் நடைபெற்று வருகிறது.இதில் பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் தனியாக சென்று இதுவரை 6 ஆயிரத்து 236 விதைகள் சேகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்கரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இரண்டு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
    • சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்தித்து பேசி, போரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது பற்றியும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இரண்டு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் ரஷ்யா எந்த சமரசமுமின்றி தொடர்ந்து போரை முன்னெடுத்து வருகிறது. உக்ரைனும், மேற்கு நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் சீன அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்திக்க சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அங்கு உரையாற்றுகையில், ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்தார்.

    மேலும் ரஷ்ய படை திட்டமிட்டபடி உக்ரைனுக்குள் தொடந்து முன்னேறி வருவதாகவும், கார்கிவை கைப்பற்றுவது தங்களின் நோக்கமில்லை என்றும் தெரிவித்தார். அதற்கு பதிலாக இரண்டு நாடுகளுக்கும் பொதுவானதொரு இடைப்பட்ட பாதுகாப்பு பகுதியை ( BUFFER ZONE) உருவாக்குவதே தங்களின் திட்டமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    மேற்கு நாடுகளின் ஒன்றிணைந்த நேட்டோ நாடுகளில் உக்ரைன் சேரும் பட்சத்தில் உக்ரைன் வழியாக எளிதில் ரஷ்யாவுக்குள் நேட்டோ படைகள் வந்துவிடும் என்ற அச்சுறுத்தல் இருப்பதாலேயே இந்த போர் நடந்து வருகிறது. எனவே இரண்டு நாடுகளுக்குமாக BUFFER ZONE உருவாகும் பட்ச்சத்தில் இந்த அச்சுறுத்தல் விலகும் என்பதாலேயே ரஷ்யா இந்த போரை அதை நோக்கி கொண்டு செல்வதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

    முன்னதாக சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்தித்து பேசி, போரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது பற்றியும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

    ராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் ரூ. 4 கோடியில் திருமண மண்டபம் அமைத்து கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    ராஜபாளையம்


    ராஜபாளையம் நகராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத்திட்டப்பணிகள்,  ெரயில்வே மேம்பாலப்பணிகள் குறித்து எம்.பி தனுஷ்குமார், எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தலைமையில் நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. 

    இந்த கூட்டத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் குறித்து பேசுகையில் குடியிருப்பு மற்றும் வணிகப்பயன்பாடுகளை சேர்த்து 48 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது. இதில் 39 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 


    மீதமுள்ள 9 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் ஆகஸ்டு மாததத்திற்குள் வழங்கப்படும் எனவும், குடிநீர் கட்டணம் சதுரஅடி கணக்கீடு செய்யப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் குடிநீர் கட்டணம் அதிகமாக உள்ளதாக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு, பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்ததால் அதனை குறைக்க நகராட்சியில்,  வீட்டுப்பயன்பாட்டிற்கு 100 ரூபாயாகவும், வணிக பயன்பாட்டிற்கு 200 முதல் 300 ரூபாயாகவும் கட்டணம்  நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றி சென்னையிலுள்ள நகராட்சிகளின் ஆணையாளர் அனுமதிக்கு அனுபி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ராஜபாளையம் நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் இந்தாண்டுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. 

    ராஜபாளையம் பச்சமடம் பகுதியில் செயல்பட்டுவரும் குப்பைகளை பிரித்து உரமாக மாற்றும் நுண்ணுர செயலாக்க மையத்தை வேறு இடத்திற்கு மாற்றிடவும், அந்த இடத்தில் ஏழை-எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எம்.பி. நிதியில் ரூ. 1 கோடியும், எம்.எல்.ஏ. நிதியில் ரூ. 1 கோடியும், பொதுநிதியில் ரூ. 2 கோடியும் ஒதுக்கீடு செய்து மொத்தம் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன திருமண மண்டபம் அமைக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. 

    அதுபோல் செட்டியார்பட்டி சேத்தூர் மற்றும் கிராமப்பகுதிகளிலும் இதுபோல் திருமண மண்டபம் அமைக்கப்படும் என எம்.எல்.ஏ. தெரிவித்தார். 

    இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி,  தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா,துணை சேர்மன் கல்பனாகுழந்தைவேலு, மேம்பாலப்பணி கோட்டப்பொறியாளர் லிங்குசாமி, நகராட்சி பொறியாளர் ராமலிங்கம்,  தாமிரபரணி திட்டப்பணி உதவி பொறியாளர் கற்பகம், பாதாளசாக்கடைத்தி ட்டப்பணி உதவி நிர்வாக பொறியாளர் காளிராஜன், வருவாய்த்துறை ஆய்வாளர் வேல் பிரியா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

    • சிங்கம்புணரி அருகே தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ெபரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • அதற்கு ஒரு மாணவி எழுந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் முசுண்டப்பட்டி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் ெதாடக்கவிழா நடந்தது.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு கிச்சடி, கேசரி பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன்,கலெக்டர் மதுசூதன்ரெட்டி, அரசு முதன்மை செயலர் அமுதா ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதுடன் மாணவர்களுடன் உரையாடினர்.

    அரசு முதன்மை செயலர் அமுதா, உணவு எப்படி இருந்தது என்று கேட்டார். அதற்கு ஒரு மாணவி எழுந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். மாணவி பிரதீஷா பேசுகையில், காலை உணவை சாப்பிட்டால் தான் நன்றாக படிக்க முடியும். நான் மருத்துவராகி உடம்பு

    சரி இல்லாதவர்களை சரிசெய்வேன் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் வானதி, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் செல்லும் போது தண்ணீர் எளிதில் சென்று சேர்வதில் தடை ஏற்படுத்துகிறது.
    • ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டு பகுதியை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஆற்றில் 4வது முறையாக 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் தஞ்சாவூர் கீழ் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் கொள்ளிடம் அருகே உள்ள சந்தப்படுகை, நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, அளக்குடி உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    கொள்ளிடம் ஆற்றின் கரை அளக்குடியில்தண்ணீர் மோதி திரும்பும் இடத்தில் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட உடைப்பு தற்காலிகமாக சரி செய்ய ப்பட்ட பகுதியை ஆய்வு செய்தார்.

    பின்னர் கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் கூறுகையில், அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடு பகுதியில் மணல்மேடு உருவாகியுள்ளது.

    இதனால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் செல்லும் போது தண்ணீர் எளிதில் சென்று சேர்வதில் தடை ஏற்படுத்துகிறது.

    எனவே எளிதில் ஆற்றில் தண்ணீர் செல்லும் வகையில் ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டு பகுதியை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அளக்குடி, நாதல்படுகை, முதலைமேடுதிட்டு ஆகிய இடங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையை தற்போது தற்காலிகமாக சரி செய்யப்பட்டு தொடர்ந்து கரையை வலுவானதாகவும், உயர்த்தியும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு சமர்ப்பித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    மயிலாடுதுறை காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகு மார், உதவி பொறியாளர்கள் சிவசங்கர், வெங்கடேசன், கனகசரவணன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    • காலை உணவு திட்டத்தால் 63 அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெறுவர்
    • காலை உணவு வழங்க அதிகாரிகள் தீவிர ஏற்பாடு

    ஊட்டி:

    தி.மு.க. தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர் களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளி யிடப்பட்டது.

    இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருகிற 15-ம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட வுள்ளது.

    இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 63 பள்ளிகளில் பயிலும் 3415 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை குழந்தை களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும் நோக்கத் திலும், ஊட்டச்சத்து நிலை உயர்த்தவும், ரத்தசோகை குறைபாட்டை நீக்கவும், பள்ளிகளில் குழந்தைகளின் வருகையை அதிகரிக்கவும், பணிக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கிலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க ப்படும்.அதனடிப்படையில், முதற்கட்டமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 63 பள்ளிகளில் பயிலும் 3415 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் இயல்பான நிறம், மணம் உடையதாகவும், வேறு வெளிப்பொருட்கள் கலக்காமலும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். உணவு சமைக்க பயன்படுத்தப்படும் சமையல் பொருட்கள் தரமானதாகவும் , சுத்தமா னதாகவும் இருக்க வேண்டும். காய்கறிகள் தரத்தை உறுதி செய்வதுடன் அவற்றை சமைப்பதற்கு முன் தண்ணீரில் நன்கு கழுவி பயன் படுத்த வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் சுகாதார மாகவும், தரமானதாகவும் அட்ட வணைப்படி உணவு தயாரித்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.தினசரி உணவு இருப்புகளின் பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் என சுய உதவிக்குழுஉறுப்பினர் களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு உணவு வழங்கும் முன்பு பள்ளி மேலாண்மை குழு ஒவ்வொரு நாளும் உணவின் தரத்தை உறுதி செய்யும் வகையில் உணவை பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வேதாரண்யத்தில் வேளாண் பொறியியல் துறையின் அலுவலகம் தொடங்கி அந்த துறை சார்ந்த நலத் திட்டங்கள் கிடைத்திட வேண்டும்.
    • புகையிலைக்கான மாற்றுப் பயிர் சாகுபடிக்கு வழிகாட்ட வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம் நடந்தது.

    வேதாரண்யம் வட்டா ட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு கோட்டாட்சியர் ஜெய ராஜ பெளலின் தலைமை வகித்தர். வட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் பெரும்பா லான விவசாயிகள் முள்ளியாறு, மானங்கொ ண்டானாறு, போக்கு வாய்க்கால் நீர் நிலைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள வெங்காயத் தாமரைச் செடிகளை காலத்தில் அகற்ற வலியுறுத்தினர்.

    வேதாரண்யத்தில் வேளாண் பொறியியல் துறையின் அலுவலகம் தொடங்கி அந்த துறை சார்ந்த நலத் திட்டங்கள் கிடைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மின் இறைவைப் பாசனத் திட்டம், நீர் நிலைகள் பராமரிப்பு குறித்தும் விவசாயிகள் பேசினர்.விவசாயி காளிதாசன் கூறுகையில் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டவர்களுக்கும் குறுவை தொகுப்பு முழுமையாகக் கிடைக்கவில்லை.

    நெல் அறுவடைக் காலத்தில் அறுவடை எந்திரத்துக்கான வாடகையை அதிகமாக பெறுவதை தடுக்க காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஒளிச்சத்திரன்: எள் சாகுபடிக்கான இழப்பீடு இதுவரை கிடைக்கவில்லை. புகையிலைக்கான மாற்றுப் பயிர் சாகுபடிக்கு வழிகாட்ட வேண்டும்.

    பாலகிருஷ்ணன்: காந்திநகர் பகுதியில் மழைக்காலத்தில் வெள்ளம் தேங்குவதை தடுக்க வேண்டும்.குழந்தைவேலு: திருத்துறைப்பூண்டி - வாய்மேடு, தென்னடார், ஆயக்காரன்புலம், ஆதனூர் - வேதாரண்யம் வழித் தடத்தில் அரசு பேருந்து இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.கூட்டத்தில், மேகநாதன், காளிதாஸ், அகிலன், ஒளிச்சந்திரன், சிவஞானம் உள்ளிட்டோர் பேசினர்.

    • அதன் அடிப்படையில் மதுக்கூர் வட்டாரத்தில் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
    • உடனடியாக உழவன் செயலியிலும் பதிவேற்றம் செய்து வேளாண் உதவி இயக்குனர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர்.

    மதுக்கூர்:

    குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு தகுதியான விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி .ஏ .பி, அரை மூட்டை பொட்டாஸ் ஆவணங்களின் அடிப்படையில் மற்றும் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்து அதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

    இதற்காக தஞ்சை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் துறை, வேளாண் உதவி அலுவலர்களும், வருவாய் துறை கிராம நிர்வாக அலுவலர்களும் அனைத்து கிராமங்களிலும் முகாம் நடத்தி தகுதியான விவசாயிகளுக்கு அடங்கல் சான்று வழங்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

    அதன் அடிப்படையில் மதுக்கூர் வட்டாரத்தில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. சொக்கநாவூர் கிராமத்தில் வேளாண்உதவி இயக்குனர் திலகவதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி குறுவை சாகுபடிக்கான அடங்கல் வழங்கும் பணி யினை ஆய்வு செய்தனர்.

    சொக்கநாவூர் மற்றும் புளியங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் வேளாண் உதவி அலுவலர் தினேஷ்குமார் ஆய்வு செய்து உடனடியாக உழவன் செயலியிலும் பதிவேற்றம் செய்து வேளாண் உதவி இயக்குனர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர்.

    புளியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளை ஊக்கப்படுத்தி காலத்தை உரிய ஆவணங்களை வழங்கி பயன்பெற கேட்டுக் கொண்டார்.

    வேளாண் உதவி இயக்குனர் திலகவதி சொக்கநாவூர் கிராமத்தில் நடவு செய்யப்பட்டுள்ள ஏஎஸ்டி16 வயலினை ஆய்வு செய்து பதிவு செய்யாத விவசாயிகளை உடனடியாக பதிவு செய்து மானியத்தில் உரங்கள் பெற கேட்டுக் கொண்டார்.

    ×