search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plates"

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
    • இரும்பு தகடுகள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே மரக்கான்சாவடியில் கடந்த சில தினங்களுக்கு முன் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை வழிமறித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அனந்தநல்லூர் காலனி தெருவை சேர்ந்த செல்வம் மகன் ரஞ்சித் (வயது 34), தேவதாஸ் மகன் சந்தோஷ் குமார் (24), துரைராஜ் மகன் விஜய் (19) ஆகியோர் என்பதும், நாகை- விழுப்புரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியையொட்டி அனந்தநல்லூர் பெரிய வாய்க்காலில் கட்டப்பட்டு வரும் பால பணிகளுக்கு பயன்படுத்த வைத்திருந்த இரும்பு தகடுகளை 3 பேரும் திருடி வாஞ்சூர் பகுதியில் உள்ள இரும்புக்கடையில் விற்பதற்காக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரும்பு தகடுகள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற திருமண விருந்தில் உணவு பரிமாறுவதற்கு உணவுத்தட்டுகள் இல்லாததால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலியானார்.
    லக்னோ:

    நம் நாட்டில் திருமணம் என்பது வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. இந்த நிகழ்வினை அனைத்து உறவினர்களையும் அழைத்து மிக கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.

    பொதுவாக திருமண நிகழ்வுகளில் உறவினர்களிடையே சில சலசலப்புகள் ஏற்படுவதும் இயல்பான ஒன்றே. ஆனால், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் திருமண விருந்தில் உணவுத்தட்டுகள் இல்லாததால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரை பறிகொடுத்துள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம், விக்ராம்பூர் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற திருமண விருந்தில் கலந்து கொள்வதற்காக பலர் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு உணவு பரிமாறுவதற்கு உணவுத்தட்டுகள் இல்லாமல் போனதால் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு சண்டையாக மாறியதில், விஷால் எனும் இளைஞர் பலியானார். மேலும் 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவுத்தட்டுக்காக ஏற்பட்ட சண்டையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×