search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plus 1exam"

    தமிழகம் முழுவதும் இன்று வெளியான பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தஞ்சை மாவட்டம் 90.29 சதவீதம் பெற்று மாநிலத்தில் 25-வது இடத்தில் உள்ளது. #PlusoneResult
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பிளஸ்-1 வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 7-ந்தேதி முதல் ஏப்ரல் 16-ந்தேதி வரை நடந்தது. இதைத் தொடர்ந்து பிளஸ்-1 தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. அதன் படி தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய தேர்ச்சி சதவீதம் தஞ்சையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 12 ஆயிரத்து 889 மாணர்களும், 16 ஆயிரத்து 241 மாணவிகளும் என மொத்தம் 29 ஆயிரத்து 130 மாணவர்கள் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 897 மாணவர்களும், 15 ஆயிரத்து 405 மாணவிகளும் என மொத்தம் 26 ஆயிரத்து 302 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதனால் 85.54 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சியும், 94.85 சதவீதம் மாணவிகள் தேர்ச்சியும் பதிவாகி உள்ளது. மொத்தம் தஞ்சை மாவட்டம் 90.29 சதவீதம் பெற்று மாநிலத்தில் 25-வது இடத்தில் உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மாணவ-மாணவிகள் தங்களது பள்ளிகளுக்கு வந்திருந்தனர். பின்னர் அங்கிருந்த மதிப்பெண் பட்டியல்களை பார்த்தும், இண்டர் நெட்டில் மதிப்பெண்களை பார்த்தும் தெரிந்து கொண்டனர். #PlusoneResult
    ×