search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM Post"

    • பிரதமர் ஆவது என் வாழ்வின் குறிக்கோள் அல்ல என்றார்.
    • நம்பிக்கைக்கும், எனது அமைப்புக்கும் விசுவாசமாக இருக்கிறேன் என தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் பதவிக்கான போட்டியில் ஒரு அரசியல் தலைவர் என்னை ஆதரிக்க முன்வந்தார். ஆனால் அவரது அந்த லட்சியத்திற்கு நான் செவி சாய்க்கவில்லை.

    எனக்கு ஒரு சம்பவம் நினைவிருக்கிறது. நான் யாரையும் பெயரிட மாட்டேன். நீங்கள் பிரதமராகப் போகிறீர்கள் என்றால் நாங்கள் ஆதரவு அளிப்போம் என அந்த நபர் கூறினார்.

    நீங்கள் ஏன் என்னை ஆதரிக்க வேண்டும், உங்கள் ஆதரவை நான் ஏன் எடுக்கவேண்டும் என்று கேட்டேன். பிரதமர் ஆவது என் வாழ்வின் குறிக்கோள் அல்ல. எனது நம்பிக்கைக்கும் எனது அமைப்புக்கும் நான் விசுவாசமாக இருக்கிறேன், அதற்காக நான் சமரசம் செய்யப் போவதில்லை என தெரிவித்தார்.

    இந்த உரையாடல் எப்போது நடந்தது என்பதை நிதின் கட்கரி குறிப்பிடவில்லை.

    பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார்? என்பது குறித்து தந்தி டி.வி. நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. #ThanthiTVOpinionPoll #Modi #Rahul
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) மே மாதத்துக்குள் தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்தலில் தமிழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்.

    இந்த சூழ்நிலையில் ஜூலை 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் தந்தி டி.வி. கருத்து கணிப்பு நடத்தியது. 8,250 பேர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் தெரிவித்த பதில்கள் பல்வேறு புதிய தகவல்களை அளிக்க கூடியவையாக இருந்தன.

    தற்போது தேர்தல் நடந்தால், பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார்? என்று மக்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதில் கணிசமானவர்கள் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களிடையே ராகுலுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதாவது பிரதமர் பதவிக்கு மோடியை ராகுல் காந்தி முந்துகிறார் என்ற அதிரடி தகவலை மக்கள் தெரிவித்தனர்.

    இன்றைய தேதியில் தேர்தல் நடைபெற்றால் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மற்றும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு? என்றும் மக்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

    அ.தி.மு.க. வாக்குகளில் சிறிதளவு டி.டி.வி.தினகரனுக்கு செல்லும் என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் ரஜினி, கமல், பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க. மற்றும் சிறிய கட்சிகள் 4-ல் 1 பங்கு வாக்குகளைப் பிரிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.


    இப்போது பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தினால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாக்குகள் சிதறும் சூழ்நிலையில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்போம் என்பது பெரும்பாலான மக்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.

    பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, நீட் தேர்வு போன்ற கொள்கைகளில் மத்திய அரசு மீது மக்களின் அதிருப்தி போன்ற பல அதிர்ச்சிகரமான தகவலை பொதுமக்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

    மக்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் “தந்தி” டி.வி.யின் இந்த கருத்து கணிப்பு விவரங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் “மக்கள் யார் பக்கம்” என்ற சிறப்பு நிகழ்ச்சியில் காணலாம். #ThanthiTVOpinionPoll #Modi #Rahul
    வருகிற 2019-ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் இன்று கூறியுள்ளார். #AkhileshYadav
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது, பிரதமராக வேண்டும் என்ற நோக்கமோ அல்லது கனவோ எனக்கு இல்லை.  மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் சாலை மற்றும் மெட்ரோ ஆகியவற்றை அமைப்பது என்ற கனவுடன் இருக்கவே நான் விரும்புகிறேன்.

    வருகிற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் எனது தொண்டர்கள் இணைந்து பணியாற்றும்படி நான் கேட்டுகொண்டுள்ளேன். மத்தியில் எதிர்க்கட்சிகள் அதிகாரத்தினை பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். #AkhileshYadav
    ஆந்திரப்பிரதேசத்தின் நலனுக்காக பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை மறுத்துள்ளேன் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். #ChandrababuNaidu #PMPost
    ஐதராபாத்:

    தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டு கூட்டம் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேச கட்சி தலைவரும், மாநில முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர்கள், சந்திரபபு நாயுடுவை வருங்கால பிரதமர் எனக்கூறி கோஷங்கள் எழுப்பினர்.
    இதையடுத்து, சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

    பிரதமர் பதவி மீது எனக்கு விருப்பம் இல்லை. ஏற்கனவே பிரதமராகும் வாய்ப்பு வந்தபோது மாநில நலனுக்காக அதை மறுத்துள்ளேன்.

    இப்போது சிலர் பாஜக- காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் நான் அதை 22 ஆண்டுகளுக்கு முன்னர் செய்து காட்டியுள்ளேன். 1996ல் பிரதமராகும் வாய்ப்பு வந்தது. மாநில நலனுக்காக அதை மறுத்த நான், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவே கவுடாவை பிரதமராக ஆதரவு அளித்தேன்.

    இதேபோல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு இல்லாமல் சி மத்தியில் எந்த கட்சியும் ஆட்சி செய்யமுடியாது.

    திருப்பதி கோவிலின் நகைகள் எனது வீட்டில் இருப்பதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். முதலில் திருப்பதி கோவில் நகை பட்டியலில் இல்லாத வைரம் இப்போது பட்டியலில் இடம்பிடித்தது எப்படி?

    அலிபிரியில் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் இருந்து திருப்பதி பெருமாள் என்னை காப்பாற்றி மறுபிறவி கொடுத்துள்ளார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். திருப்பதி தேவஸ்தானம் விவகாரத்தில் பாஜக எந்த நாடகத்தையும் நடத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். #ChandrababuNaidu #PMPost
    வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவி காலியாக இல்லை என காங். தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். #RahulGandhi #RamVilasPaswan
    பாட்னா:

    லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான ராம் விலாஸ் பஸ்வான், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு துறை மந்திரியுமாக இருந்து வருகிறார். இவர் பீகார் மாநிலத்தின் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைத்தால் பிரதமர் பதவியை ஏற்க தயார் என பேசியுள்ளார்.



    பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியால் 2019 பாராளுமன்ற தேர்தலிலும் மோடியே பெரும்பான்மை பெற்று மீண்டும் பிரதமர் பதவி ஏற்பார். எனவே, வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவி காலியாக இல்லை. 

    அப்படி இருக்கும்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எப்படி பிரதமராக வரமுடியும்? மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும். மோடி இரண்டாவது தடவை பிரதமராக பதவி வகிப்பார் என தெரிவித்துள்ளார். #RahulGandhi #RamVilasPaswan
    ×