search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pochampalli robbery"

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அடுத்தடுத்து 2 செல்போன் கடைகளில் கொள்ளையடித்த சென்னையைச் சேர்ந்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் போச்சம்பள்ளி வடமலம்பட்டி பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இதே பகுதியில் ஊத்தங்கரையை சேர்ந்தவர் மணிமாறன். என்பவரும் செல்போன் கடை வைத்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி இவர்கள் இருவரும் வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் செல்போன் கடைகளின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பின்னர் 2 கடைகளிலும் இருந்து மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

    இது குறித்து செல்போன் கடைகாரர்கள் போச்சம்பள்ளி போலீசாருக்கு தெரிவித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மணிமாறன் கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை 3.30 மணியளவில் மர்ம கும்பல் காரில் வந்து கடையின் கதவை உடைக்க முயற்சி செய்தார். கதவை உடைக்க முடியாததால் கதவில் கயிறை கட்டி, அதனை காரிலும் கட்டி இழுத்தனர். அப்போது கதவு உடைந்ததும் கடைக்குள் புகுந்து செல்போன்களை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்றனர். இந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இதையெடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மகேஸ்குமர் உத்தரவின்பேரில், பர்கூர் டி.எஸ்.பி. தங்கவேல் அறிவுறுத்தலின்படி, போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் தனிப்படை அமைத்து சி.சி.டி.வி கேமராவின் பதிவுகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடிவந்தனர்.

    இந்த நிலையில், திருடப்பட்ட செல்போன்கள் சென்னை கண்ணகி நகரை அடுத்த பெரியார் நகரை சேர்ந்த சயாத்து என்பவரது மகன் சலாவூதின் (வயது 35) என்பவர் விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து சலாவூதின் கைது செய்யப்பட்டு அவரிடம், போச்சம்பள்ளி கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் எங்கு உள்ளனர். போச்சம்பள்ளியில் காரில் வந்த நபர் யார்? காரில் ஒருவர் மட்டும் இருந்தாரா? அல்லது கூட்டாக வந்தனரா? என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்ட சலாவூதினிடம் தொடர்ந்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். #arrest

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம நபர்கள் வழிப்பறி கொள்ளையும், வீடு புகுந்து நகை திருடி சென்ற சம்பவம் நடந்த வண்ணம் இருந்தது.

    போச்சம்பள்ளி அருகே கன்னந்தூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் கார்த்திகேயன் (எ) கார்த்தி (வயது22). இவர் முள்ளம்பட்டி பகுதியில் பஸ்சுக்காக காந்திருந்த வாலிபர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து தப்பி ஓட முயன்றார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் கார்த்திகேயனை சுற்றி வளைத்து பிடித்து பாரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் கார்த்திக்கேயன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் கார்த்திகேயன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாதமங்கலம் கிராமத்தில் ராதாகிருஷ்ணன் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகளை திருடியது தெரியவந்தது. இதே போல் மேல்சாமாண்டபட்டியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் வீட்டில் 10 பவுன் நகை திருடியது தெரியவந்தது.

    இதே போன்று இவர் பல்வேறு இடங்களில் வீட்டின் கதவை உடைத்து நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்தும், ரோட்டில் தனியாக செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    போலீசார் கார்த்திக்கேயன் வீட்டில் சோதனை நடத்தியதில் கோழிகள் அடைத்து வைத்திருக்கும் கூண்டில் 17 பவுன் நகைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைதான கார்த்திகேயனை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவின் பேரில் மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் பேரிலும் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட கார்த்திகேயன் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்திகேயனிடம் குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நகலை ஒப்படைத்னர்.

    ×