search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "POCSO"

    கள்ளக்குறிச்சியில் போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி, ஜன.28-

    கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் ( வயது23). இவர் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து செய்து கைது செய்தனர்.

    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 35) என்பவர் அங்கு வந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார்.

    இது குறித்து சிறுமியின் தரப்பில் திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற இளையராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    • சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை போச்சோ சட்டத்தில் கைது செய்தனர்
    • இவர் கடந்தாண்டு மே மாதம் பஞ்சப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் சின்னதாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது32). கூலி தொழிலாளியான இவர் கடந்தாண்டு மே மாதம் பஞ்சப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து தான்தோன்றிமலை யூனியன் சமூக நல அலுவலர் தனலட்சுமி கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் முருகேசனை கைது செய்தனர்.


    • பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் தொடர்பு
    • மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜித் (22). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதி பக்கத்து ஊரில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனியே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து, அஜித் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி மாயமானர். மதியழகன் (வயது 23) என்பவர் சிறுமியை ஆசை வார்த்தைகூறி கடத்தி சென்று சென்னையில்பதுங்கியிருப்பதுதெரிந்தது,
    • தனிப்படை போலீஸார், மதியழகனை சுற்றிவளைத்து கைது செய்தனர். சிறுமியையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த பிப்ரவரி மாதம் மாயமானர். இது குறித்து சிறுமியின் தந்தை உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்  அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் மதியழகன் (வயது 23) என்பவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று சென்னையில் பதுங்கியிருப்பது போலீ சாருக்கு தெரியவந்தது. 

    இதனை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த மதியழகனை சுற்றிவளைத்து கைது செய்தனர். சிறுமியையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தார். மதியழகனை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பள்ளி மாணவி ஒருவரை தினமும் பின்தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.
    • புகாரின் பேரில் போலீசார் மாணவியை மீட்டனர்.

    திருப்பூர் :

    சேலம் கெங்கவள்ளி செந்தாரப்பட்டியை சேர்ந்த, கார்த்திக்,(25) டிரைவர். இவர் திருப்பூர்,பெருமாநல்லுார் அருகே கருக்கன்காட்டு ப்புதூரில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் அந்த பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை தினமும் பின்தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். சம்பவத்தன்று பள்ளி மாணவியை திருமண ஆசை காட்டி, கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் அவிநாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் மாணவியை மீட்டனர்.பின்னர் கார்த்திக்கை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • வானூர் அருகே இளம் பெண்ணை கடத்தி சென்ற வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • இந்நிலையில் கம்பெனியில் வேலை செய்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராஜேஷ் அந்தப் பெண்ணை கடத்திச் சென்றுள்ளார்.

    விழுப்புரம்:

    வானூர் அருகே இளம் பெண்ணை கடத்தி சென்ற வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார் விழுப்புரம் மாவட்டம் ரக்காணம் அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் ஏராளமான இறால் பண்ணைகள் உள்ளது . இங்கு ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 33) வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கம்பெனியில் வேலை செய்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராஜேஷ் அந்தப் பெண்ணை கடத்திச் சென்றுள்ளார்  இந்நிலையில் வேலைக்கு சென்ற தனது மகளைக் காணவில்லை என பெண்ணின் தாய் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்சுபெக்டர் சுகன்யா வழக்கு பதிவு செய்து வாலிபர் ராஜேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • கைது செய்யப்பட்டு போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • பெற்றோர்கள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தொரப்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). கொத்தனார், இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டன் நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்த அதே சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.

    • மகள் கிடைக்காததால் இது குறித்து அவரது பெற்றோர் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தனர்.
    • மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வது தவறு என்பதை உணர்த்தி செல்வம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ஆரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சத்துவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 21), யூடியூப் சேனல் மூலம் செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

    செல்வம் பதிவு செய்து வந்த வீடியோக்களை ஆரணி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது மாணவி தினமும் பார்த்து பதில் போட்டு வந்துள்ளார். இதன் மூலம் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது.

    இதனையடுத்து செல்வம் கடந்த 29-ந் தேதி மாணவியை பார்ப்பதற்காக ஆரணிக்கு வந்தார். பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

    தேர்வு எழுத சென்ற மகள் வீடு திரும்பாததால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். மகள் கிடைக்காததால் இது குறித்து அவரது பெற்றோர் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் மாணவியின் செல்போன் மூலம் துப்புதுலக்கினர். அவர் ஜெயங்கொண்டம் அருகே இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாபுதீன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் ஜெயங்கொண்டத்திற்கு விரைந்து சென்று இருவரையும் ஆரணிக்கு அழைத்து வந்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, மாணவியை வாலிபர் தாலி கட்டி திருமணம் செய்தது தெரிந்தது. மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வது தவறு என்பதை உணர்த்தி செல்வம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பள்ளி மாணவியை சமரசம் செய்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    • சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி வெளியூருக்கு அழைத்து சென்று உள்ளார்.
    • சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மங்கலம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஞானபிரகாஷ் (வயது 33) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி வெளியூருக்கு அழைத்து சென்று உள்ளார். இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது சிறுமி ஞானப்பிரகாசுடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கண்டுபிடித்து விசாரணைக்கு அழைத்து வந்த போது சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

    விசாரணையில் ஞானபிரகாஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
    • குற்றம் செய்தவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு வசதியாக சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் போதிய எண்ணிக்கையில் ஏற்படுத்தப்படாதது ஏமாற்றமளிக்கிறது; பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்க இது உதவாது.

    ஒரு மாவட்டத்தில் 300-க்கும் கூடுதலான 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்' குறித்த வழக்குகள் நிலுவையில் இருந்தால், அங்கு இரு சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 300-க்கும் கூடுதலான வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அங்கு கூடுதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் இன்னும் அமைக்கப்படவில்லை.

    தருமபுரி, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், அதன் பின் இரு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்று வரை அந்த நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மனித மிருகங்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்; அப்போது தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைச் செய்ய மற்றவர்கள் அஞ்சுவார்கள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் வழக்குகளை விரைந்து விசாரிக்க வசதியாக சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் சி்றப்பு நீதிமன்றங்களை அமைக்க தாமதிப்பது சரியல்ல. இது குற்றவாளிகள் தப்பிக்கவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதற்கும் மட்டுமே வகை செய்யும்.

    தமிழ்நாடு குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாற வேண்டும். இந்த இலக்கை எட்ட வேண்டுமானால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைய வேண்டும்; குற்றம் செய்தவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் போதிய எண்ணிக்கையில் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
    • 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.

    திருப்பூர் :

    தேனி மாவட்டம், போடி நாயக்கனூரைச் சோ்ந்தவா் பிருத்திவிராஜ் (வயது 40). இவா், திருப்பூா், கருவம்பா ளையம் பகுதியில் குடும்ப த்துடன் தங்கியிருந்து பின்ன லாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

    இந்த நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பிருத்திவிராஜ் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த தாகத் தெரிகிறது. இதுகுறித்து திருப்பூா் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்திருந்தனா். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த பிருத்திராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். 

    ×