search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Podanur"

    போத்தனூர் அருகே மதுக்கடையில் தகராறில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை போத்தனூர் அருகே உள்ள ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மகன் ஜான் பிரிட்டோ (வயது 28). பெயிண்டர். இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

    நேற்று இரவு ஜான் பிரிட்டோ தனது நண்பரான பிரவீன் என்பவருடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் அங்கு இருந்த போத்தனூரை சேர்ந்த காட்வின்ராஜ், மில்டன், குட்டி ஆகியோருக்கும், ஜான் பிரிட்டோவுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். ஜான் பிரிட்டோ தாக்கியதில் காட்வின்ராஜூக்கு வயிறு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் அங்கு இருந்தவர்கள் 2 கும்பலையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஜான் பிரிட்டோவை அவரது நண்பர் பிரவீன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது ஆத்திரம் அடைந்த காட்வின்ராஜ், மில்டன், குட்டி ஆகியோர் இவர்களது மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து விரட்டி வந்தனர். ஜான் பிரிட்டோ மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வீட்டுக்குள் செல்ல முயன்ற போது விரட்டி வந்த கும்பல் அவரை வயிறு மற்றும் மார்பில் கத்தியால் குத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர். இதில் நிலைகுலைந்த ஜான் பிரிட்டோ ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது வீட்டில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜான் பிரிட்டோவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜான் பிரிட்டோ பரிதாபமாக இறந்தார்.

    இந்த தகவல் கிடைத்ததும் போத்தனூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஜான்பிரிட்டோவை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய காட்வின்ராஜ், மில்டன், குட்டி ஆகியோரை தேடி வந்தனர்

    இந்தநிலையில் ஜான் பிரிட்டோ தாக்கியதில் படுகாயம் அடைந்த காட்வின் ராஜ் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது.மேலும் தலைமறைவாக உள்ள மில்டன், குட்டி ஆகியோரை போத்தனூர் போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

    போத்தனூர் அருகே சாக்கடைக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை போத்தனூர் அருகே உள்ள மெட்டூரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ஆறுமுகம் (வயது 21). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சிம்சன் (18).இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள லேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று இரவு 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் குனியமுத்தூர்- மாச்சாம் பாளையம் ரோட்டில் வேகமாக சென்றனர். மோட்டார் சைக்கிளை ஆறுமுகம் ஓட்டிச் சென்றார்.ஞானபுரம் அருகே சென்ற போது ரோட்டின் நடுவில் இருந்த வேகத்தடையை ஆறுமுகம் கவனிக்காமல் சென்றார். வேகத்தடையில் ஏறி இறங்கிய மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த சாக்கடை கால்வாய்க்குள் பாய்ந்தது.

    இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த சிம்சனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை சிம்சன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போத்தனூர் அருகே கத்திமுனையில் வாலிபரை மிரட்டி காரை வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை இடையர் பாளையத்தை சேர்ந்தவர் ஆசிக் (வயது 23).

    இவர் தனது காரில் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது காரை வழிமறித்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி ஆசிக்கின் கார் மற்றும் அவரிடம் இருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி போத்தனூரை சேர்ந்த சயித் பக்ருதீன்(40), சயித் அலி(25), யாசர் மூசாபத் (23), ஆசிஸ் ரகுமான்(22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கார், ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் சயித்பக்ருதீன், சயித் அலி, யாசர் மூசாபத் ஆகியோர் அதேபகுதியில் ஒரு கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் பூஜை பொருட்களை திருடியதும் தெரியவந்தது. இந்த வழக்கில் ஜாகிர் உசைன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×