என் மலர்
நீங்கள் தேடியது "poison"
- இருவருக்கிடையேயும் சதா வாக்குவாதம் நடந்து வந்துள்ளது.
- சம்பவத்தின் பின் தலைமறைவான பிங்கியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் முசாபர்நகரின் பகேலா கிராமத்தை சேர்ந்தவர் அனுஜ் சர்மா (30 வயது). இரண்டு வருடங்களுக்கு முன்பு பிங்கி (26 வயது) என்பவருடன் அவருக்கு திருமணம் நடந்தது.
இந்நிலையில் வேறொரு ஆணுடன் பிங்கி பேசுவதற்கு கணவர் அனுஜ் சர்மா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கிடையேயும் சதா வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி பிங்கி அனுஜின் காபியில் விஷம் கலந்ததாகக் கூறப்படுகிறது.
அதைக்குடித்ததும் அனுஜின் உடல்நிலை மோசடமைந்தது. அவர் கட்டௌலியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் வேறொரு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் அனுஜின் சகோதரி கொடுத்த புகாரின்பேரில் பிங்கி மீது காலவத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவத்தின் பின் தலைமறைவான பிங்கியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பிங்கிக்கு திருமணத்தின் முன்பே வெவேறு ஆணுடன் பழக்கம் இருந்ததாகவும் அவரின் விருப்பத்துக்கு மாறாக அனுஜ் உடன் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் கிராமத்தினர் கூறுகின்றனர்.
- ஷரோன் ராஜின் நண்பரை விசாரித்தபோது, பெண்ணின் வீட்டில் குளிர்பானம் குடித்ததாக ஷரோன் ராஜ் தெரிவித்ததாக கூறினார்.
- போலீசார் இன்று மாலை அவர்களிடம் விசாரணை நடத்ததினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் ஷரோன் ராஜ் (வயது 23).
இவரது சொந்த ஊர் தமிழக- கேரள எல்லையில் உள்ள பாறசாலை முரியங்கரை ஆகும். அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஷரோன் ராஜ் காதலித்துள்ளார்.
கடந்த 14-ந்தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு தனது நண்பருடன் சென்றுள்ளார். வீட்டிற்குள் அவர் மட்டும் சென்று திரும்பினார்.
சிறிது நேரத்தில் வயிறு வலிப்பதாக கூறிய அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷரோன் ராஜ் கடந்த 25-ந்தேதி பரிதாபமாக இறந்தார்.
அவரது கிட்னி உள்பட உடல் உறுப்புகள் செயல் இழந்திருந்ததால் பாறசாலை போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையில் தனது மகன் சாவில் மர்மம் உள்ளது. அவன் காதலித்த பெண் கொடுத்த குளிர்பானத்தை குடித்த பிறகே ஷரோன் ராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை ஜெயராஜன் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகார் தொடர்பாக பாறசாலைபோலீசார் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அவர்கள் ஷரோன் ராஜின் நண்பரை விசாரித்தபோது, பெண்ணின் வீட்டில் குளிர்பானம் குடித்ததாக ஷரோன் ராஜ் தெரிவித்ததாக கூறினார்.
இதன் அடிப்படையில் அந்த பெண் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக அவர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து இன்று மாலை அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக - கேரள எல்லையில் கல்லூரி மாணவன் ஷரோன் ராஜ் உயிரிழந்த விவகாரத்தில் காதலியே விஷம் கொடுத்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக காதலி கிரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
- கிணற்றின் தண்ணீா் மாதிரி எடுத்து திருப்பூரில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது.
- அதேபகுதியைச் சோ்ந்த சண்முகம், பத்மாவதி தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
வெள்ளகோவில்,ஜன.19-
வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட திருமங்கலத்தில் ஊா்மக்கள் பயன்படுத்தும் பொதுக்கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரில் விஷம் கலந்துள்ளதாக வெள்ளக்கோவில் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம், பத்மாவதி தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் கிணற்றின் தண்ணீா் மாதிரி எடுத்து திருப்பூரில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் கிடைக்கப் பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனா்.
- அரிகிருஷ்ணன் சொந்தமாக 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார்.
- போலீசாரின் விசாரணையில் பரமசிவன் ஆடுகளுக்கு விஷம் வைத்தது தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு வடக்கு விலாகத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது47). விவசாயி. இவர் சொந்தமாக 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார்.
விஷம் வைத்து சாகடிப்பு
வழக்கமாக ஆடுகளை காலையில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மாலையில் கொட்டகையில் அடைப்பது வழக்கம்.
வழக்கம் போல நேற்று அரிகிருஷ்ணன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது 3 ஆடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
இது தொடர்பாக அவர் சந்திப்பு போலீசில் புகார் செய்தார். விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த பரமசிவன் (48) என்பவர் ஆடுகளுக்கு விஷம் வைத்தது தெரியவந்தது.
இதைதத்தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். அரிகிருஷ்ணனுக்கும், பரமசிவனுக்கு வயல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே அது தொடர்பான பிரச்சினையில் விஷம் வைத்து ஆடுகள் கொல்லப்பட்டதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த குரங்குகள் வீடுகளில் உள்ளே புகுந்தும், பொது மக்களை விரட்டியும், கடித்தும் வருகின்றன.
- ஒரு குரங்கு இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் மயங்கிய நிலையில் கிடந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.இந்த குரங்குகள் அவ்வப்போது வீடுகளில் உள்ளே புகுந்தும், பொது மக்களை விரட்டியும், கடித்தும் வருகின்றன. நடை பாதையில் பொதுமக்கள் வாங்கிச் செல்லும் தின்பண்டங்களை விரட்டி பிடித்து பறித்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்இந்நிலையில் ஒரு குரங்கு இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் மயங்கிய நிலையில் கிடந்தது. இதை அறிந்த சமூக ஆர்வலர் ஹில்சன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே வேப்பூர் கால்நடை டாக்டர் வசந்த் மற்றும் விருத்தாசலம் வனச்சரகத்தின் வனவர் பன்னீர்செல்வம் மற்றும் வனக்காப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் விரைந்து வந்து அந்த குரங்கிற்கு சிகிச்சை அளித்தனர்.
பின்னர் கால்நடை மருத்துவர் கூறும் போது, குரங்கு விஷம் கலந்த உணவை சாப்பிட்டு உள்ளதாக தெரிவித்தார். இதை அடுத்து மீண்டும் அந்த குரங்கை வனத்துறையினர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று மேலும் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் குரங்கிற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்த சமூக ஆர்வலர் ஹில்சனுக்கு அப்பகுதியினர் பாராட்டு தெரிவித்தனர்.
- உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிமக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- இளம்பெண் நாகலட்சுமி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை ராமநாதபுரம் பாப்பம்மாள் லே-அவுட்டை சேர்ந்தவர் ரங்கசாமி. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நாக லட்சுமி (வயது 34). இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. பின்னர் ரங்கசாமி வெளியே சென்றார்.வீட்டில் தனியாக இருந்த நாக லட்சுமி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து என முடிவு செய்தார்.
அதன்படி நாகலட்சுமி சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். பின்னர் தனது 1½ பெண் குழந்தைக்கும் சாணிப்பவுடரை கொடுத்தார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிபடி 2 பேரும் மயங்கினர். இதனை பார்த்து அக்கம் பக்கத்ததினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து இளம்பெண்ணின் கணவர் ரங்கசாமிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய தனது மனைவி மற்றும் 1½ வயது மகள் ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து ராமநாதபுரம் போலீசார் இளம்பெண் நாகலட்சுமி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியாமல் அவதி அடைந்து வந்தார்
கோவை,
கோவை சேரன் மாநகர் பகுதியை சேர்ந்தவர் விபின்(34). தனியார் நிறுவன ஊழியர்.
இவருக்கும், ரம்யா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் குடும்ப செலவிற்கு போதிய வருமானம் இல்லாமல் விபின் கஷ்டப்பட்டு வந்ததாக தெரிகிறது. அதற்காக அவர் சிலரிடம் பணம் கடனாக வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியாமல் அவதி அடைந்து வந்தார். வாங்கிய கடனை எப்படி திருப்பி செலுத்தப் போகிறோம் என்ற மனவேதனையில் விபினும் அவரது மனைவியும் இருந்து வந்தனர்.
இதனால் வாழ்க்கையில் விரட்டியடைந்த விபின் மற்றும் அவரது மனைவி ரம்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
சம்பவத்தன்று விபினும், அவரது மனைவி ரம்யாவும் விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தனர்.
அப்போது அங்கு வந்த விபினின் தாயார் 2 பேரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது கணவருக்கு போன் செய்து வரவழைத்தார்.
பின்னர் அக்கம்பக்க த்தினர் உதவியுடன் கணவன்- மனைவி இருவரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விபின் பரிதாபமாக இறந்தார். ரம்யாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே வாலிபர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம் நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி மகன் ஜெயபாண்டி(31). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயபாண்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜெயபாண்டியின் தாய் பாண்டியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரையூர் போலீஸ் சரகம் கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய மனைவி பொன்னுத்தாய். இவர்களுக்கு ஈஸ்வரன் என்ற மகன் உள்ளார். பொன்னுத்தாய் கடந்த ஐந்து வருடங்களுக்கு உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் யாருமில்லாத போது பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பொன்னுத்தாயின் மகன் ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நாய்கள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை.
- வீடுகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தன.
பல்லடம் :
பல்லடம் மாணிக்காபுரம் ரோடு பகுதியில், சுற்றித்திரிந்த தெரு நாய்களை சம்பவத்தன்று மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- நன்றி என்ற சொல்லுக்கு உதாரணமாக விளங்கிவரும் நாய்களை பல்லடத்தில் விஷம் வைத்து கொன்றது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த நாய்கள் இந்த பகுதியில் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. அவைகள் இங்குள்ள வீடுகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தன. புதியவர்களை கண்டால் மட்டுமே குரைக்கும். அவைகள் இதுவரை யாரையும் கடித்ததில்லை. இந்த நிலையில் கொடூரமனம் படைத்தவர்கள் இங்கு சுற்றிச் திரிந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்று ள்ளனர்.
இது குறித்து விலங்குகள் நல வாரியம் மற்றும் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளோம். விஷம் வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- அக்கம்- பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
- டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
பல்லடம் :
பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி(வயது 72). இவர் அவரது மகள் கலாமணியுடன் வசித்து வந்தார். இதற்கிடையே சம்பவத்தன்று வேலைக்குச் சென்ற கலாமணி வேலை முடிந்து வீடு திரும்பிய போது, அவரது தாயார் லட்சுமி வாயில் நுரை தள்ளியபடி வீட்டிற்குள் கிடந்துள்ளார். இதனால் அலறி துடித்த அவர், அக்கம்- பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து கலாமணி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை உத்தப்ப நாயக்கனூர் சுப்பிரமணியன் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் பாணி பூரி வியாபாரம் செய்து வந்தார். ராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இதனால் அவர் பலரிடமும் கடன் வாங்கி செலவழித்து வந்துள்ளார். அதனை அவரது மனைவி ராணி கண்டித்தார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ராஜா, உத்தப்பநாயக்கனூர்- வத்தலகுண்டு ரோட்டில் உள்ள தோட்டம் ஒன்றில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தப்ப நாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் விஷம் குடித்து தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- 4 ஆயிரத்து 543 பேர் குணமடைந்தனர் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது
மதுரை
சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர், மதுரை அரசு மருத்து வமனை நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்விகள் எழுப்பி யிருந்தார். அதற்கு மருத்துவ மனை நிர்வாகம் பதில் அளித்தது. அதில் மதுரை மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு 2 ஆயிரத்து 380 பேரும், 2022-ம் ஆண்டு 2 ஆயிரத்து 550 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 930 பேர் விஷம் குடித்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 2021-ம் ஆண்டு 180 பேரும், 2022-ம் ஆண்டு 207 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
அதாவது 2 ஆண்டுகளில் மட்டும் 387 பேர் விஷம் குடித்து இறந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் விஷம் குடித்தோருக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக பிரிவு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அங்கு மருத்துவ குழுவினரின் துரித சிகிச்சை காரணமாக 4 ஆயிரத்து 543 பேர் குணமடைந்தனர் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.