என் மலர்
நீங்கள் தேடியது "poison"
- கடந்த 1 மாதத்திற்கு முன்பு செல்வராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து பேசினார்.
- விஷம் குடித்த நிஷாந்த் மயங்கி விழுந்தார்.
களக்காடு:
ஏர்வாடி ரஸ்தா, சேனையர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது50). இவரது மனைவி அம்பிகா (44). செல்வராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்தியபடி இருந்ததால், அவருக்கும் அவரது மனைவி அம்பிகாவிற்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் தகராறு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் அம்பிகாவின் பராமரிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு செல்வராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து பேசினார். அப்போது ஆத்திரத்தில் அவரது மகன் நிஷாந்த் (19) அவரை தாக்கினார். இதையடுத்து தந்தையை தாக்கி விட்டோமே என்று நிஷாந்த் மனம் உடைந்து காணப்பட்டார்.
இதற்கிடையே கடந்த 19-ந் தேதி நண்பர்களை பார்க்க செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்ற நிஷாந்த் விஷம் குடித்தபடி வீட்டிற்கு திரும்பி வந்து, மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதம்அலி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- தீபக் அரசு போட்டி தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார்.
- கடந்த 23-ந் தேதி தீபக் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் தீபக் (வயது 24). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு அரசு போட்டி தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார்.
தற்கொலை
கடந்த 23-ந் தேதி அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தீபக் இறந்தார்.
இது குறித்து கங்கை கொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முத்து செல்விக்கு இளைப்பு நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்து செல்வி விஷம் குடித்து மயங்கினார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சத்திரம் கள்ளிகுளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி முத்து செல்வி (வயது 34). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகள் முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் முத்து செல்விக்கு இளைப்பு நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் களக்காடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் நோயின் தாக்கம் குறையாததால் மனம் உடைந்து காணப்பட்டார்.
கடந்த 27-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்து செல்வி விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகர் கோவில் தனியார் மருத்து வமனைக்கு முத்து செல்வி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
- மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார்.
மதுரை
திடீர்நகரை சேர்ந்த ஜெயராஜ் மகன் சாலமன் ராஜா (40). இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்று மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். இதற்கு மனைவி மறுத்துவிட்டார். இதில் மனமுடைந்த சாலமன் ராஜா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஜெய்ஹிந்த்புரம் முதல் தெருவை சேர்ந்த முகமது இக்பால் மகன் முபிஸ் ரகுமான் (24). இவருக்கு சிறு வயது முதல் உடல் நலக் கோளாறு இருந்தது. மூச்சு திணறலும் இருந்து வந்தது. சம்பவத்தன்று இவர் திடீரென்று ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே வாலிபர் முபிஸ்ரகுமான் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- மைக்கேல் பாளையத்தில் உள்ள தனது தாய்- தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
- பிரீத்திபாவை அவரது தாய் திட்டியதாக கூறப்படுகிறது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன பிரதாஸ். இவர் அந்தியூரில் மளிகை கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பிரீத்திபா (16) என்ற மகள் உள்ளார்.
பிரீத்திபா 10 -ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்காமல் தர்மபுரியில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பிரீத்திபா அந்தியூர் அருகே மைக்கேல் பாளையத்தில் உள்ள தனது தாய்- தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று பிரீத்திபாவை அவரது தாய் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே பிரீத்திபா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரீத்திபா இது போல் ஏற்கனவே ஒருமுறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருந்தார். தற்போது 2-வது முறையாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று பரிதாபமாக இறந்து விட்டார்.
- இரட்டை சகோதரிகளும் தங்களது விபரீத காதலை ஒரே வாலிபருடன் வளர்த்து வந்தனர்.
- காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த இரட்டைசகோதரிகள் மற்றும் மகேஷ் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
திருவள்ளூர்:
திருவாலங்காடு அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய இரட்டை சகோதரிகள் 10-ம் வகுப்பு படித்து முடித்து உள்ளனர். பிளஸ்-1 படிக்க இருந்தனர்.
இவர்கள் இருவரும் உறவினரான அதே பகுதியில் வசித்து வரும் மகேஷ் (22) என்பவரை காதலித்தனர். அவரும் இரட்டை சகோதரிகளை காதலிப்பதாக கூறி இருவரிடமும் நெருங்கி பழகினார். மகேஷ் ஐ.டி.ஐ. படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இரட்டை சகோதரிகளும் தங்களது விபரீத காதலை ஒரே வாலிபருடன் வளர்த்து வந்தனர். இந்த விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகேசையும், இரட்டை சகோதரி மாணவிகளையும் பெற்றோர் கண்டித்து அறிவுரை கூறினர். எனினும் அவர்களது காதல் தொடர்ந்து நீடித்து வந்தது.
இந்நிலையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த இரட்டைசகோதரிகள் மற்றும் மகேஷ் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று மாலை அவர்கள் அப்பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆறு அருகே சென்று கொக்கு மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் இரட்டை சகோதரி மாணவிகளில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு மாணவி மற்றும் மகேஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நிலைமையும் மோசமாக உள்ளது. இச்சம்பவம் திருவாலங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திடீரென அவர் இறந்தது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மருத்துவ பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
லண்டன்:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் அம்ரித் பால் சிங். வாரீஸ் பஞ்சாப் தே என்ற அமைப்பின் தலைவரான இவர் பஞ்சாப்பினை தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்.
சமீபத்தில் இவர் தனது ஆதரவாளர்களுடன் கையில் ஆயுதங்கள் ஏந்தி சென்று போலீஸ் நிலையத்தை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த அம்ரித் பால் சிங்கை போலீசார் தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர் 36 நாட்கள் தப்புவதற்கு உதவியாக இருந்தவர் அவதார்சிங் கண்டா.
அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளியான இவர் இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படக்கூடிய காலிஸ் தான் விடுதலை படையின் தலைவராக இருந்து வந்தார். இங்கிலாந்தில் வசித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த இந்திய தேசிய கொடியை கீழே இறக்கி அவமரியாதை செய்ததோடு காலிஸ்தான் கொடியையும் ஏற்ற முயன்றனர்.
இந்த போராட்டத்தில் அவதார் சிங் கண்டா முக்கிய பங்காற்றினார். இவர் சமீப காலமாக ரத்த புற்று நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர் லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவதார் சிங் கண்டா நேற்று இறந்தார்.
திடீரென அவர் இறந்தது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் அதனால் அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அவதார் சிங் கண்டா சாவில் மர்மம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இறந்த அவதார்சிங் கண்டா வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் சீக்கிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து வெடிகுண்டுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளித்து வந்துள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்களுள் மிக முக்கியமானதாக இவர் விளங்கி வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு கல்வி விசாவில் இங்கிலாந்து சென்ற அவர் பின்னர் அங்கேயே தங்கிவிட்டார்.
- இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 67). இவருக்கு கண்ணம்மாள் (60) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
- கருத்து வேறுபாடு காரணமாக, ராமன் மனைவியை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக மகனுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் கொண்டலாம் பட்டி அருகே நெய்க்கார பட்டியை அடுத்த இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 67). இவருக்கு கண்ணம்மாள் (60) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக, ராமன் மனைவியை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக மகனுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மகனுடன் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக, சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார்.
அவரை குடும்பத்தினர் மீட்டு சேலம் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இவரது மனைவி கண்ணம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கொண்ட லாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருமங்கலம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் விஷம் குடித்து 2 முதியவர்கள் இறந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சேர்ந்த வர் அழகர்சாமி (வயது70). இவரது மனைவி ராம லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். ராமலட்சுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.
இதனால் அழகர்சாமி மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
கள்ளிக்குடியை அடுத்து ள்ள சோளம்பட்டியை சேர்ந்த வர் ராஜூ (62). இவரது மனைவி பாண்டி யம்மாள்.
இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் மனமுடைந்த ராஜூ விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி யசோதை. கடந்த ஒரு மாதமாக பழனிசாமி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மனைவி யசோதை 100 நாள் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். மனவிரக்தியில் இருந்த பழனிசாமி சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து யசோதை கொடுத்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2-வது முறையும் கடித்ததால் விஷம் உடலில் ஏறி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
- ஜசாப்கானின் மரணத்திற்கு காரணமான பாம்பை அவரது குடும்பத்தினர் பிடித்து அடித்து கொன்றனர்.
ஜெய்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள மெக்ரன்கர் கிராமத்தை சேர்ந்தவர் ஜசாப்கான் (வயது 44), தொழிலாளி.
கடந்த 20-ந்தேதி இவரை பாம்பு ஒன்று கணுக்காலில் கடித்துள்ளது. இதற்காக பொக்ரானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 4 நாட்களாக அளித்த சிகிச்சையின் பலனாக அவர் பாம்பு கடியில் இருந்து உயிர் பிழைத்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் மறுநாள் அவரை மீண்டும் ஒரு பாம்பு கடித்துள்ளது. இந்த முறை அவரது மற்றொரு காலில் பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
முதல் முறை பாம்பு கடியில் இருந்து ஜசாப்கான் மீண்ட நிலையில் 2-வது முறையும் கடித்ததால் விஷம் உடலில் ஏறி அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் பாலைவன பகுதிகளில் அதிகமாக காணப்படும் வைபர் என்ற பாம்புகளின் துணை இனமான 'பாண்டி' என்று அழைக்கப்படும் பாம்புகள் தான் ஜசாப்கானை கடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜசாப்கானின் மரணத்திற்கு காரணமான பாம்பை அவரது குடும்பத்தினர் பிடித்து அடித்து கொன்றனர்.
பலியான ஜசாப்புக்கு மனைவி மற்றும் 4 மகள்கள், 5 வயதில் ஒரு மகன் உள்ளனர்.
- அதிகாலை மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் வலைகளிலும் அதிகளவில் பலாசி மீன்கள் சிக்கியது.
- மீனவர்களின் வலையும் சேதம் அடைந்து வருகின்றது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் மீனவர்கள் வலைகளில் உணவிற்கு பயன்படுத்த முடியாத "பலாசி" என்ற பலூன் மீன்கள் தற்போது அதிகளவில் வலைகளில் சிக்கி வருகிறது.
இதனால் மீனவர்களின் வலையும் சேதம் அடைந்து வருகின்றது. இன்று அதிகாலை மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் வலைகளிலும் அதிகளவில் பலாசி மீன்கள் சிக்கியது. பலாசி மீன்கள் விலை போகாததால் அவைகளை கரையோரம் வீசி விடுவார்கள். இந்த மீனின் உடலில் இருக்கும் வெளி முள்ளானது விஷத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. கடற்கரையில் வீசப்படும் மீன்களை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிதித்து பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதை அவ்வப்போது மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.