search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police"

    • உத்தரபிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    • முஸ்லிம் பெண்களிடம் போலீசார் புர்காவை கழற்ற கூறுகின்றனர்.

    மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் 9 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலையில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் வாக்குப் பதிவில், இஸ்லாமிய வாக்காளர்களை போலீசார் வாக்களிக்க விட மறுப்பதாக உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு புகார் அளித்தார்.

    முஸ்லிம் பெண்களிடம் புர்காவை கழற்ற கூறியும் முஸ்லிம் ஆண்களிடம் தேவையின்றி ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை போலீசார் கேட்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வந்தது.

    இதனையடுத்து, முஸ்லிம் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்த 7 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • லிங்கேஸ்வரன் பரங்கிமலை ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
    • காவல் வாகனத்தில் சீருடை அணியாமல் லிங்கேஸ்வரன் மது அருந்தும் வீடியோ இணையத்தில் வெளியானது.

    சென்னையில் கைதிகளை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் அமர்ந்து மது அருந்திய சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    லிங்கேஸ்வரன் பரங்கிமலை ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கைதியை சிறையில் விட்டு விட்டு திரும்பியபோது, காவல் வாகனத்தில் சீருடை அணியாமல் லிங்கேஸ்வரன் மது அருந்தும் வீடியோ இணையத்தில் வெளியானது.

    உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் லிங்கேஸ்வரன் மது அருந்தியது உறுதியான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • அமரன் படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்சிப்படுத்தியிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
    • திரையரங்குகளை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தனர்.

    சென்னையில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமரன் படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்சிப்படுத்தியிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதனால், திரையரங்குகளை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்த நிலையில் காவல்துறை போலீஸ் பாதுகாப்பு போட்பபட்டுள்ளது.

    சென்னை ராயப்பேட்டை வெஸ்ட் கோஸ்ட் சாலையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கத்தில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டுள்ளது.

    இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள உட்லாண்ட்ஸ் திரையரங்கம், சத்யம் சினிமாஸ் திரையரங்கிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல், அமரன் திரைப்படத்தின் தயாரிப்பாளராக நடிகர் கமல்ஹானின் ஈசிஆர் இல்லத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • 250 கிராம் உருளைக் கிழங்கை யாரோ திருடிவிட்டதாக போலீசாரிடம் விஜய் வர்மா புகாரளித்தார்.
    • விஜய் வர்மா பேசியதை போலீசார் வீடியோ எடுத்துள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் மன்னபுர்வாவில் வசிக்கும் விஜய் வர்மா என்பவர், மது அருந்திவிட்டு சமைத்து சாப்பிடுவதற்காக வைத்திருந்த 250 கிராம் உருளைக் கிழங்கை யாரோ திருடிவிட்டதாக போலீசாருக்கு செல்போன் மூலம் புகாரளித்தார்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் நடந்ததை அவர் கூறியுள்ளார். இதனை போலீசார் வீடியோ எடுத்துள்ளனர்.

    உருளைக்கிழங்கு காணவில்லை என்று போலீசாரிடம் விஜய் வர்மா சீரியசாக பேச, சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல், "என்ன மது அருந்தினீர்கள்?" என போலீசார் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

    • தர்மேந்திர சிங் என்ற இளைஞர் குடிக்க தண்ணீர் கேட்டபோது, போலீசார் அவரை ஆசிட் குடிக்க வைத்துள்ளனர்.
    • இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட தர்மேந்திர சிங் என்ற இளைஞர் குடிக்க தண்ணீர் கேட்டபோது, போலீசார் அவரை ஆசிட் குடிக்க வைத்ததால் ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தர்மேந்திர சிங்கின் சகோதரர், "அக்டோபர் 14 அன்று 2 தரப்பினர் சண்டையிட்டு கொண்டிருந்தனர். அந்த சண்டையை தர்மேந்திர சிங் தடுக்க சென்றார். ஆனால் போலீசார் தர்மேந்திர சிங்கை கைது செய்தனர். போலீஸ் லாக்-அப்பில் தர்மேந்திரா தண்ணீர் கேட்டபோது, போதையில் இருந்த போலீசார் அவரை ஆசிட் குடிக்க வைத்துள்ளனர். இதனால் எனது சகோதரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆசிட் குடிக்க வைப்பதற்கு முன்பு தர்மேந்திர சிங்கை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

    லக்னோவில் போலீஸ் காவலில் மோகித் பாண்டே என்ற நபர் உயிரிழந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விக்கிரவாண்டி அருகே கார் மோதிய விபத்தில் காவலர் சத்தியமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
    • சாலை விபத்தில் இறந்த சத்தியமூர்த்தியின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

    விக்கிரவாண்டி அருகே த.வெ.க. மாநாடு பாதுகாப்புக்கு சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் சத்தியமூர்த்தி குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவந்த சத்தியமூர்த்தி (வயது 27) (PC 1347) என்பவர் கடந்த 26.10.2024 அன்று இரவு சுமார் 8.00 மணியளவில் அரசியல் கட்சி ஒன்று நடத்திய மாநாட்டின் பாதுகாப்பு பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யூர், அகரம் மேம்பாலம் அருகில் எதிர்பாராதவிதமாக கார் ஒன்று மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னை இராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (29.10.2024) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    காவலர் சத்தியமூர்த்தி அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். காவலர் சத்தியமூர்த்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • போலீசார் தாக்கியதில் பல வழக்கறிஞர்கள் காயம் அடைந்தனர்.
    • போலீசார் தாக்கியதற்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கூடியிருந்த வழக்கறிஞர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்களை போலீசார் தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    வழக்கறிஞர்களை எதற்காக போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர் என்பதற்கான முழு விவரங்கள் தெரியவில்லை.

    முதற்கட்ட தகவலின்படி ஜாமின் மனு தொடர்பாக நீதிபதிக்கும் வழக்கறிஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து வழக்கறிஞர்கள் பலர் நீதிமன்றத்திற்குள் கூடியுள்ளனர். இதனால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நீதிபதி போலீசாரை அழைத்துள்ளார். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர் என்று சொல்லப்படுகிறது.

    போலீசார் தாக்கியதில் பல வழக்கறிஞர்கள் காயம் அடைந்தனர். போலீசார் தாக்கியதற்கு எதிராக வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் வந்துள்ளனர்
    • தொண்டர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரவு 7 மணிக்கு முன்பாக மாநாட்டை விரைந்து முடிக்க வேண்டும்

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெற உள்ளது. பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு  முழுவதும் இருந்து மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதுவரை மாநாட்டுக்கு மொத்தம் 8 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டம் அதிகம் உள்ளதால் மாநாட்டை முன்கூட்டியே முடிக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    தொண்டர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரவு 7 மணிக்கு முன்பாக மாநாட்டை விரைந்து முடிக்க வேண்டும் என கட்சித் தலைமைக்கு காவல்துறை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    • கவுகாத்தி நீதிமன்றத்தில் பொதுநல மனு நிராகரிக்கப்பட்டது.
    • ஒரே ஆண்டில் 171 என்கவுன்டர்கள் என்பது கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல

    அசாமில் ஒரே வருடத்தில் போலீசாரால் 171 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. கடந்த 2021-22 காலக்கட்டத்தில் அசாம் போலீசால் 171 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. 

    இந்த என்கவுன்டர்கள் குறித்து விசாரணை நடந்த வேண்டும் என்றும் கவுகாத்தி நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பொதுநல மனு நிராகரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விவகாரம் உச்சநீதிமன்றத்துக்குச் சென்ற நிலையில் நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வின் முன் தற்போது விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், ஒரே ஆண்டில் 171 என்கவுன்டர்கள் என்பது கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல, காவல்துறை குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிவைக்கின்றனரா? தங்களது அதிகார வரம்பை மீறுகின்றனரா? என்பதை அசாம் போலீஸ் விளக்க வேண்டும் என்றும் என்கவுன்டர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

    • குறுக்கே பசுமாடு வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளது.
    • இந்த விபத்தில் லாரியின் பின்னால் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்த பெண் ஒருவரும் காயமடைந்தார்.

    சாலையில் கிடந்த தக்காளிகளுக்கு இரவு முழுவதும் உ.பி. போலீஸ் காவல் இருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 18 டன்கள் தக்காளிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த லாரி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதி அருகே நெடுஞ்சாலையில் குறுக்கே பசுமாடு வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளது.

    இதனால் வண்டியிலிருந்த தக்காளிகள் அனைத்தும் சாலையில் சிதறின. இந்த விபத்தில் லாரியின் பின்னால் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்த பெண் ஒருவரும் காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

    மேலும் இரவு நேரம் என்பதால் சாலையில் கிடந்த தக்காளிகளைச் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் விடியும் வரை காத்திருக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தட்டுப்பாடு காரணமாக தக்காளி விலை கிலோ ரூ.100 வரை விற்கப்படும் நிலையில் தக்காளிகள் திருடுபோகும் அபாயம் இருக்கிறது. எனவே சாலையிலேயே தக்காளிகளுக்கு இரவு முழுவதும் போலீசார் காவலாக நின்றிருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • வீட்டுக்கு திரும்பாத நிலையில் பெற்றோர் அவரை தேடி வந்துள்ளனர்.
    • இளைஞர்கள் 3 பேர் சிறுமியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்

    பெண்களுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் குற்றங்கள் அவர்களை மனிதர்களாக அன்றி இன்னும் இந்த சமூகம் போகப் பொருளாகவே பார்க்கிறது என்பதை நிரூபிப்பதாக உள்ளது. இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும் அதையே சுட்டிக்காட்டுகிறது.

    நேற்று [திங்கள்கிழமை] அதிகாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சின்ஹாட் சாலையில் மோசமான நிலையில் கிடந்துள்ளார். லாலுளாய் [Laulaai] கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமி கிராமத்தில் அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு தனது வீட்டில் இருந்து உடல் உபாதையை கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார்.

    வெகு நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பாத நிலையில் பெற்றோர் அவரை தேடி வந்துள்ளனர். அப்போதே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையில் கிடந்த அவர் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.

    வீட்டை விட்டு அதிகாலை வெளியே வந்த சிறுமி தனியாக இருப்பதைப் பார்த்த அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் சிறுமியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி இறந்துவிட்டதாக நினைத்து அவளின் கை கால்களைக் கட்டி சாலையில் வீசிச் சென்றுள்ளனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக போக்ஸோ வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரித்து வருகிறது. லோஹியோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடல்நிலை சீரடைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. 

    • வழிப்போக்கர்கள் போலீசில் தெரிவித்ததை அடுத்து சிறுமி மீட்கப்பட்டார்
    • சிறுமியின் நிலையறிந்து உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்தினர்

    பெண்களுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் குற்றங்கள் அவர்களை மனிதர்களாக அன்றி இன்னும் இந்த சமூகம் போகப் பொருளாகவே பார்க்கிறது என்பதை நிரூபிப்பதாக உள்ளது. இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும் அதையே சுட்டிக்காட்டுகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு மகாராஷ்ட்டிராவில் ஜல்னா நகரத்தில் உள்ள சாந்தாஞ்ஹிரா சாலையில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு  உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். அவரை பார்த்த வழிப்போக்கர்கள் போலீசில் தெரிவித்ததை அடுத்து சிறுமி மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மிகவும் மோசமானதாக உள்ளதால் அங்கிருந்து மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஒருவன் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்துவிட்டு சாலையில் வீசிச் சென்றுள்ளான். சிறுமியின் நிலையறிந்து உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்திய பின்னர் குற்றவாளி மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வரையும் போலீஸ் கைது செய்துள்ளது.

    ×