search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police Job"

    • 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமத்தின் மூலம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தேர்வுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 15-ந் தேதியாகும். இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 1-ந் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இலவச பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421 2999152 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு இன்று (புதன்கிழமை) முதல் பதிவு செய்து கொள்ளலாம்.

    இந்த பயிற்சியின் இறுதியில் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ராஜபாளையத்தில் போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் வடகாசிஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது32). இவர் கடந்த 2011-ம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சிக்காக சென்னை சென்றார்.

    ஆனால் பயிற்சி காலத்தில் இசக்கிமுத்து பாதியிலேயே வந்து விட்டார். இதையடுத்து அவரை காவல்துறை பணி நீக்கம் செய்தது.

    இந்த நிலையில் கிடைத்த வேலையை விட்டு விட்டோமே என்ற ஏக்கத்தில் இருந்த இசக்கிமுத்துவிடம் உள்ளாறு கிராமத்தைச் சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவர் மீண்டும் போலீசில் வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு பணம் செலவாகும் என கூறி உள்ளார்.

    இதனை நம்பிய இசக்கிமுத்து 2 தவணைகளில் ரூ.3 லட்சத்தை கருத்தப்பாண்டியனிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர் வேலை வாங்கி தரவில்லை பணத்தையும் திருப்பிதரவில்லை.

    இதுகுறித்து கேட்டபோது தன்னை தரக்குறைவாக திட்டி மிரட்டியதாக இசக்கிமுத்து, தென்மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து கருத்தப்பாண்டியை தேடி வருகிறார். #tamilnews
    கேரளாவில் அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபரின் சகோதரிக்கு போலீசில் வேலை வழங்கப்பட உள்ளது. இதற்காக அவர் பயிற்சி மேற்கொள்ள உள்ளார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ள ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் மது (வயது 32). மனநலம் பாதிக்கப்பட்ட இவரை திருடியதாக கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 16 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்தனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினர் கொலை செய்யப்பட்ட ஆதிவாசி வாலிபரின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் ஆதிவாசி வாலிபரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கினார். அப்போது ஆதிவாசி வாலிபர் மதுவின் தங்கை சந்திரிக்காவுக்கு அரசு வேலை வழங்கப்படும் என உறுதியளித்தார்.


    பின்னர் கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் ஆதிவாசி கிராமங்களில் உள்ள தகுதியான இளைஞர், இளம்பெண்களுக்கு அரசு வேலை வழங்க பட்டியல் தயாரிக்கும்படி பாலக்காடு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் பாலக்காடு மாவட்ட கலெக்டர் பட்டியலை தயார் செய்தார். அப்போது அதில் சந்திரிக்காவின் பெயர் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கேரள அரசு சந்திரிகா உள்பட 74 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க உள்ளது.

    சந்திரிக்காவுக்கு கேரள போலீசில் வேலை வழங்கப்பட உள்ளது. அவர் திருச்சூரில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி மேற்கொள்ள உள்ளார். #Tamilnews

    ×