search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Parade"

    • வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நடந்தது
    • தமிழக - ஆந்திர எல்லைகளில் போலீசார் கண்காணிப்பு தீவிரம்

    வேலூர்:

    குடியரசு தினவிழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நிலையில் வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 26-ந்தேதி காலை குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

    கலெக்டர் குமார வேல்பாண்டி யன் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். சிறப்பாக பணிபுரிந்த போலீசார் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது.

    இந்நிலையில், வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் குடியரசு தின விழாவையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடந்தது. இதில் போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.

    அதேபோல், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகையும் நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆந்திர எல்லையான பொன்னை, சைனகுண்டா, கிறிஸ்டியான் பேட்டை ஆகிய சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமித்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • காரைக்கால் கடற்கரை சாலையில் புதுச்சேரி விடுதலை நாள் இன்று கொண்டாடப்பட்டது.
    • அமைச்சர் சந்திரபிரியங்கா தேசியக் கொடியை ஏற்றி போலீசார் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கடற்கரை சாலையில் புதுச்சேரி விடுதலை நாளையொட்டி, அமைச்சர் சந்திரபிரியங்கா தேசியக் கொடியை ஏற்றி போலீசார் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

    ×