search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police treatment"

    தூத்துக்குடி கலவரத்தில் காயம் அடைந்த 44 போலீசார் நெல்லையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    நெல்லை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் ஏராளமான வாகனங்கள் தீக்கரையாக்கப்பட்டன. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியானதுடன், ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    அதுபோல போராட்டம் நடத்தியவர்கள் கல்வீசி தாக்கியதில் ஏராளமான போலீசாரும் காயம் அடைந்தனர். போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் காயம் அடைந்த அனைவரும் தூத்துக்குடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து காயம் அடைந்த போலீசார்களை நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற உத்தரவிடப்பட்டது. நேற்று நடந்த கலவரத்தில் 10 பெண் போலீசார் உள்பட 44 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    இவர்களில் தலையில் பலத்த காயம் அடைந்த எட்டயபுரம் எஸ்.பி.சி.ஐ.டி. போலீஸ் ஏட்டு ஜெய்சங்கர் பாளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேரி ஜகிர்தா (41), சகாய ராபின் (26), சோபியா (25), நித்யா (25), சபுரா பானு (30), கிரேஸ் மரியம்மாள் (36), பிரியா (33), செல்வராணி (43), அஜிதா (40), ஆகிய 10 பெண் போலீசாரும், அருண் கிறிஸ்டோபர் (26), அருண்குமார் (26), மணிரத்னம் (25), மனோ (27), சத்திய மூர்த்தி (27) உள்பட 33 போலீசார் காயம் அடைந்து பாளை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதில் இன்று காலை 20 போலீசார் சிகிச்சை முடிந்து தங்கள் பணிக்கு திரும்பினர். 10 பெண் போலீசார் உள்பட 23 போலீசாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×