search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police van"

    அவினாசி அருகே போலீஸ் வாகனம் கவிந்து விபத்துகுள்ளானதில் ஒருவர் பலியானார். 4 போலீசார் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
    திருப்பூர்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் 20 வயது பெண் காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக கேரள சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 4 பேர் பெண்ணின் உறவினர்கள் இருவரை அழைத்துக் கொண்டு நேற்றிரவு போலீஸ் வாகனத்தில் ஐதராபாத் புறப்பட்டனர்.

    இந்த வாகனம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வந்து கொண்டிருந்த போது ஆலம்பாளையம் பகுதியில் மேம்பால தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பெண்ணின் உறவினர் ஹரி நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு உறவினர் வினு கோபால் மற்றும் போலீஸ்காரர்கள் ராஜேஷ், விநாயகம், அருண், அனில்குமார் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவினாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    குன்னூர்– மேட்டுப்பாளையம் சாலையில் தாறுமாறாக ஓடிய போலீஸ் வேன் சுவரில் மோதி நின்றது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
    குன்னூர்:

    தமிழகம் முழுவதும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டு இருந்ததால், சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் சந்திரபோஸ் தலைமையிலான அதிரடிப்படை போலீசார் 33 பேர் அடங்கிய மீட்புக்குழு ஊட்டிக்கு வந்திருந்தது. பின்னர் ரெட் அலார்ட் விலக்கி கொள்ளப்பட்டது. இதையடுத்து ஊட்டியில் முகாமிட்டு இருந்த அதிரடிப்படை போலீசார் நெல்லைக்கு பாதுகாப்பு பணிக்காக அழைக்கப்பட்டனர். அதன்பேரில் நேற்று காலை 8 மணிக்கு இன்ஸ்பெக்டர் சந்திரபோஸ் தலைமையிலான போலீசார் ஒரு வேனில் ஊட்டியில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டனர்.

    குன்னூர்– மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர். நகர் அருகே சென்றபோது திடீரென வேனின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. மேலும் பிரேக் பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து சாலையோரத்தில் இருந்த ஒரு சுவரில் மோதி நின்றது. அதில் இன்ஸ்பெக்டர் சந்திரபோஸ், டிரைவர் சிவக்குமார் ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும் வேனின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. உடனே சக போலீசார் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். விபத்து குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×