search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pollachi youth arrest"

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள சோளனூரில் தனியார் பஞ்சாலை பகுதியில் சவுத் இன்டியன் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது.

    நேற்றுமுன்தினம் இரவு 9.20 மணி அளவில் ஏ.டி.எம். மையத்தில் இருந்து அலாரம் சத்தம் கேட்டது. உடனே பஞ்சாலை காவலாளிகள் அங்கு ஓடிச் சென்றனர்.

    அப்போது ஏ.டி.எம். மையத்துக்குள் இருந்து ஒரு வாலிபர் வெளியே வந்தார். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க வந்ததாகவும், பணம் வராமல் சத்தம் வந்ததாகவும் அவர் கூறினார். இதனால் காவலாளிகள் திரும்பிச் சென்றனர்.

    இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வங்கி மேலாளர் ஸ்ரீகாந்த் மற்றும் அதிகாரிகள் வந்து ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது கைக்குட்டையால் முகத்தை மறைத்தபடி வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, பணத்தை திருட முயற்சி செய்வது தெரிய வந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில், ஏ.டி.எம். மையம் அருகே உள்ள பஞ்சாலையில் வேலை பார்க்கும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த அசோக்குமார்(வயது 23) என்பவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றது தெரிய வந்தது. போலீசார் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற போது அலாரம் சத்தம் கேட்டு, காவலாளிகள் வந்ததால் கைக்குட்டையை எடுத்து விட்டு, ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்தது போல் நாடகமாடி தப்பித்ததாக அவர் ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×