என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pongal prize"
- ஆலங்குடி மேலாத்துாரில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது
- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பொது மக்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கினார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலாத்தூர் ஊராட்சி நீர் பாசன சங்கம் சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரும் விராலிமலை தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கினார்.விழாவில் நீர் பாசன சங்க தலைவர் குமார், மேலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சோபா புஷ்பராஜ், ஆலங்குடி ஊராட்சி மன்ற திருவரங்குளம் முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, கரம்பக்காடு ஜெமீன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குழ.சண்முகநாதன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- பொங்கல் பரிசு வழங்கவே தி.மு.க. அரசு யோசிக்கிறது என முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
- வீடுகளுக்கே நேரடியாக வந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
சிவகங்கை
சிவகங்கையை அடுத்துள்ள நாட்டரசன் கோட்டையில் சொத்துவரி, பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க நகரசெயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்று பேசுகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு கொரோனா காலத்தில் கூட பொது மக்களுக்கு பொங்கல் பரிசு, உதவி தொகைகளை வழங்கியது. வீடுகளுக்கே நேரடியாக வந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
தற்போதைய தி.மு.க. அரசு பொங்கல் பரிசு வழங்கவே யோசித்து வருகிறது. இன்னும் முடிவு செய்யவில்லை. பொதுமக்கள் இந்த அரசை வீட்டிற்கு அனுப்ப தயாராகுங்கள் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, சிவாஜி, கருணா கரன், அருள்ஸ்டிபன் உள்ளிட்ட பலர் பேசினர்.
நிர்வாகிகள் மாரியப்பன், செல்வம், கவுன்சிலர் சின்ன மருது, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர்ராமநாதன், அவைத்தலைவர் பாண்டி, கேபி.முருகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சசிகுமார், பாபு, மாவட்ட பாசறை துணைச்செயலாளர் சதிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, பொங்கல் பரிசுக்கான நிதி தொடர்பாக அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வழங்கியது தொடர்பான நிதி கணக்கில் தவறு உள்ளது. மொத்தம் உள்ள 2.01 கோடி ரேசன் கார்டுகளுக்கும் தலா 1.000 ரூபாய் வழங்கினால்கூட, 2010 கோடி ரூபாய் தான் ஆகும்.
இதற்காக பட்ஜெட்டில் ரூ.1,985 கோடி ஒதுக்கிய நிலையில், துணை பட்ஜெட்டில் பொங்கல் பரிசுக்காக ரூ.2019.11 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாடு குறித்து கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே, வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத் தொடரில் திமுக எம்எல்ஏக்கள் முதல் முறையாக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. #DMKWalkout #TNAssembly
மதுரை மாநகர் தெற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம் முனிச் சாலையில் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
மக்கள் நலம் பேணும் அரசாக அ.தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது. மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான ஆட்சி தந்து வருகிறார்.
ஏழை-எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1000 வழங்கியது அ.தி.மு.க. அரசு.
இதன் மூலம் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி மேலும் அதிகரித்துள்ளது. அ.தி.மு.க.வின் செல்வாக்கும் அதிகரித்து வருவதால் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த அரசுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்கள். இதனை மக்கள் நம்பமாட்டார்கள்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்வராகி விட வேண்டும் என்று துடிக்கிறார். ஆனால் அவரது ஆசை நிறைவேறாது. மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது.
மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் தங்கம், துரைப்பாண்டியன், எம்.எஸ்.பாண்டியன், கிரம்மர் சுரேஷ், திரவியம், சோலை ராஜா, பரவை ராஜா, கலைச்செல்வன், சண்முவள்ளி, முத்து கிருஷ்ணன், நல்லுச்சாமி, அரியநாச்சி, பார்த்தசாரதி, சக்தி விநாயகர் பாண்டியன், பிரிட்டோ, ஜெயரீகன், எம்.டி.ரவி, சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #MinisterSellurRaju #ADMK
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.
இதனால் வெள்ளை ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது என தெரியவந்தது. ஏற்கனவே வெள்ளை அட்டை வைத்துள்ள பலர் பணம் பெற்றுள்ள நிலையில் கிடைக்காத சிலர் வேதனை பட்டு வந்தனர்.
இந்நிலையில், ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. தேவைபட்டால் சுப்ரீம் கோர்ட்டை அணுகி அ.தி.மு.க. நிவாரணம் தேடலாம் என மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். #Pongalgift #MadrasHC
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி ரூ. 1000 ரொக்கப் பணம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீள கரும்பு ஆகியவற்றுடன் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 7-ந்தேதி தொடங்கிய இந்தப்பணி இன்று 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. ரேசன் கடைகளில் மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் வந்து ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், ரூ.1000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. கோவையை சேர்ந்த டேனியல் இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு, அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் வருமானம் உள்ளிட்ட எந்த ஒரு பாகுபாடின்றி, ரூ.1000 பணத்தை பொங்கல் பரிசாக வழங்குகிறது.
ஏற்கனவே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை முடிக்காத நிலையிலும், அதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படும் சூழ்நிலையிலும், இது போல அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ரொக்கப்பரிசு வழங்கினால், அது தேவையில்லாத நிதி சுமையை அரசுக்கு ஏற்படுத்தும்.
நலத்திட்டங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கலாம். அதுகூட பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட வேண்டும். அதற்காக அனைவருக்கும் ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்குவதை ஏற்க முடியாது.
மேலும், தமிழக அரசுக்கு வரி உள்ளிட்ட பிற வகைகளில் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 616 கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால், செலவு உள்ளிட்டவை ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடியாக உள்ளது.
இதுபோக தமிழக அரசு ரூ.43 ஆயிரத்து 962 கோடி கடன் வாங்கியுள்ளது. எனவே, அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்க தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
ஏழை, பணக்காரர் என்று வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படுவதை ஏற்க முடியாது.
அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்கப்படுகிறது. அதே நேரம், வறுமைக்கோட்டிற்கு கீழ்உள்ள ரேசன் அட்டைத்தாரர்களுக்கு இந்த தொகையை அரசு தொடர்ந்து வழங்கலாம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்பத்துக்கும் ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதில் ஐகோர்ட்டு தலையிட முடியாது என்று கூற முடியாது. கொள்கை முடிவு எடுத்தாலும் எதற்காக அனைருக்கும் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது? இதற்கு என்ன காரணம்? அரசின் நோக்கம்தான் என்ன?
ஆளும் கட்சியின் நிதியில் இருந்து இதுபோல ரூ.1000 ரொக்கப்பரிசு பொங்கலுக்கு வழங்கினால் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். அப்படி தாராளமாக பணத்தை வழங்கலாம். ஆனால், அரசின் நிதியில் இருந்து பணத்தை கொடுத்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கேள்வி எழத்தான் செய்யும்.
ஏன் என்றால், இது பொதுமக்களின் வரிப்பணம். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் இந்த வரிப் பணத்தை அரசு விருப்பம் போல் செலவு செய்ய முடியாது. பணக்காரர்கள், ஏழைகள் என்று வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் ரொக்கப்பரிசு என்பதை ஏற்க முடியாது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரொக்கப்பரிசை அரசு வழங்கலாம். அதற்காக பணக்காரர்களுக்கு இந்த பரிசு எப்படி வழங்க முடியும்? ரூ.1000 தவிர மற்ற பரிசு பொருட்களை அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் வழங்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவு காரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு கிடைப்பது தடைப்பட்டுள்ளது. தமிழக அரசு இதில் அடுத்து என்ன முடிவு எடுக்கும்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Pongal #PongalGift #MadrasHC #TNGovt
பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு உள்ளிட்டவை அடங்கிய பரிசுத்தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
முதற்கட்டமாக தலைமை செயலகத்தில் 10 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆயிரம் ரூபாயுடன், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதையடுத்து சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருவல்லிக்கேணியில் உள்ள டி.யு.சி.எஸ். அலுவலகத்தில் பொங்கல் பரிசுதொகுப்பு தயார் செய்யும் பணியில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான ஏ.ஜி.சந்திரசேகர் இதனை மேற்பார்வையிட்டு வருகிறார்.
ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை தனித்தனி காகித பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வருகிறது. ‘பேக்கிங்’ செய்யப்பட்ட பொருட்கள் வேன்கள் மூலம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அதேபோல பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்பு தேனாம்பேட்டை டி.யு.சி.எஸ். அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து வேன்கள் மூலம் ரேஷன் கடைகளுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. பச்சரிசி, சர்க்கரை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன.
டி.யு.சி.எஸ். மேலாண்மை இயக்குனர் ஏ.ஜி.சந்திரசேகர் கூறும்போது, “டி.யு.சி.எஸ். நிர்வாகம் சார்பில் 25 சதவீத பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பணிகள் அந்தந்த ரேஷன் கடை ஊழியர்களிடம் விடப்பட்டிருக்கிறது. ஒரு தொகுப்பு தயாரிக்கும் பணிக்கு 60 காசுகள் வீதம் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது” என்றார்.
ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல் தேதி வாரியாக ரேஷன் கார்டு எண்கள் அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. சில ரேஷன் கடைகளில் தெருக்கள் அடிப்படையில் தேதி வாரியாக பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் கூட்ட நெரிசல் இன்றி தங்களுக்கு உரிய தேதியில் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்