search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ponneri accident"

    பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த கேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (56). இவர் பொன்னேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்தார்.

    கேசவபுரத்தில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு பொன்னேரி-மீஞ்சூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது மின்னல் வேகத்தில் வாலிபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பிரேமா மீது பயங்கரமாக மோதியது.

    இதில் சில அடி உயரம் தூக்கி வீசப்பட்ட அவர் அருகில் இருந்த சாலை தடுப்பு சுவரில் மோதி சிறிது தூரம் தள்ளி விழுந்தார். இதே போல் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளும் தரையில் தீப்பொறி பறக்க உரசியபடி சுமார் 20 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டு விழுந்தது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பிரேமா சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    நெஞ்சை பதறவைக்கும் இந்த விபத்து காட்சி அருகில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

    விபத்து குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடந்தி வருகிறார்கள்.
    பொன்னேரி அருகே இன்று காலை நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதியதில் டேங்க் உடைந்து டீசல் கொட்டியது.
    பொன்னேரி:

    எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் கம்பெனிக்கு நிலக்கரி ஏற்றிக் கொண்டு இன்று அதிகாலை லாரி புறப்பட்டது.

    காலை 4 மணியளவில் அந்த லாரி பொன்னேரி அருகே வேன்பாக்கத்தில் வந்தது. அரசு பள்ளி அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் லாரியின் முன் பகுதி தடுப்பு சுவரில் சொருகி நின்றது. விபத்து நடந்ததும் லாரியில் இருந்த டிரைவரும், கிளீனரும் தப்பி ஓடி விட்டனர்.

    இதற்கிடையே லாரி மோதிய வேகத்தில் அதன் டீசல் டேங்க் உடைந்தது. அதில் இருந்த டீசல் வெளியேறி சாலையில் ஓடியது.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் டீசல் மீது மண்ணை தூவினர். இதனால் லாரி தீப்பிடிக்காமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    இதற்கிடையே விபத்து பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பள்ளி அருகே வேகத்தடை இல்லை, சாலை விரிவாக்கப்பணி முடியாமல் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.

    பொன்னேரி போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
    பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ரேஷன் கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த கீரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (32).

    இவர் ஆலாரு கிராமத்தில் உள்ள ரே‌ஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை பணி முடிந்து வீடு திரும்ப புறப்பட்டார்.

    அப்போது அவருடைய நண்பர் மகேஷ் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தார். அதில் சுபாஷ் ஏறிக் கொண்டார். இருவரும் கீரப்பாக்கம் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

    போளூர் அருகே உள்ள ஓரி காலனியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் மோட்டர் சைக்கிளில் சென்றவர் கைகாட்டாமல் திடீர் என்று திரும்பினார்.

    அப்போது, மகேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மகேசும், பின்னால் உட்கார்ந்து இருந்த ரே‌ஷன் கடை ஊழியர் சுபாசும் கீழே விழுந்தனர். இதில் மகேஷ் லேசான காயத்துடன் தப்பினார்.

    சுபாஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காலும் முறிந்தது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்த ரே‌ஷன் கடை ஊழியர் சுபாசுக்கு மனைவியும், 3 வயதில் ஒரு மகனும், 6 மாதத்தில் ஒரு மகனும் உள்ளனர்.

    விபத்து குறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவி மற்றும் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த திருஆயர்பாடியை சேர்ந்தவர் காசி (52). பொன்னேரியில் பேக்கரி கடை வைத்து இருந்தார். இவரது மகள் ஆனந்தி (17). வேண்பாக்கத்தில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இன்று காலை காசி வழக்கம்போல் மகள் ஆனந்தியை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார். எல்.என்.ஜி. கல்லூரிக்கு அருகே வந்த போது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே காசி பலியானார். படுகாயம் அடைந்த ஆனந்தி உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை கைது செய்தனர்.

    விபத்து நடந்த கல்லூரி அருகே வேகத்தடை இல்லை. இதேபோல் மாணவி படிக்கும் பள்ளி அருகேயும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதிகளில் தொடர்ந்து விபத்து நடந்து வருகிறது. மேலும் பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு நிலக்கரி ஏற்றிச்செல்லும் லாரிகள் அதிவேகத்தில் செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    விபத்தில் தந்தை-மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    பொன்னேரி அருகே பள்ளி செல்ல தாயுடன் நின்றபோது வேன் மோதி சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள ஆலாடு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு பிரியன், பிரியதர்ஷினி, பிரகதி என்கிற ஐஸ்வர்யா (வயது 4) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். 3 பேரும் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். பிரகதி யூ.கே.ஜி. படித்து வந்தார்.

    குழந்தைகள் 3 பேரையும் வழக்கமாக கல்பனா அரசு பஸ்சில் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார். இன்று காலை அவர் வழக்கம் போல் குழந்தைகளுடன் பள்ளி செல்வதற்காக அதே பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.

    அப்போது சோழவரத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அந்த வேன் திடீரென பஸ்சுக்காக்கா காத்திருந்த கல்பனா மற்றும் அவர்கள் குழந்தைகள் மீது மோதியது. இதில் வேனின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை பிரகதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கல்பனாவும், அவரது மற்ற 2 குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பிரகதி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்பனா அலறி துடித்தது பரிதாபமாக இருந்தது. விபத்து பற்றி அறிந்ததும் கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    ஆத்திரம் அடைந்த அவர்கள் வேனின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள். மேலும் வேன் டிரைவர் கோளூரை சேர்ந்த நந்தகுமாரை சரமாரியாக தாக்கினர். இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

    விபத்து ஏற்படுத்திய டிரைவரை கிராம மக்கள் பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

    ×