என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pothanur Railway Station"
- நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தேடி அலையும் அவல நிலை உள்ளது.
குனியமுத்தூர்
1862-ம் ஆண்டு கோவை மாவட்டத்திலேயே முதன்முதலாக தொடங்கப்பட்ட ெரயில் நிலையம் போத்தனூர் ெரயில் நிலையம் ஆகும். தென்னிந்தியாவின் பழமை வாய்ந்த ெரயில் நிலையங்களில் 3-வது இடத்தில் உள்ளது.
அத்தகைய பழமையும் பெருமையும் வாய்ந்த ெரயில் நிலையத்தை, தற்போது பொதுமக்கள் எங்கே இருக்கிறது? என்று தேடி அலையும் அவல நிலை உள்ளது.
ெரயில் நிலையத்தின் நுழைவு பகுதியில் உள்ள பெயர் பலகை மரக்கி ளைகளால் மூடப்பட்டு காணப்படுகிறது. இதனால் போத்தனூர் ெரயில் நிலையம் என்ற எழுத்து யார் கண்ணிலும் தெரிய வாய்ப்பில்லை.
போத்தனூர் ெரயில் நிலையத்தில் நுழைவுப் பகுதி பக்கத்தில் சென்றால் கூட கண்ணில் தெரியாத சூழ்நிலை உள்ளது.
இதனால் பயணிகள் விசாரித்து, விசாரித்து வர வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே போத்தனூர் ெரயில் நிலையத்தின் முகப்பு பகுதியை புதுமைப்படுத்தி, மரக்கிளைகளை வெட்டி புதுப்பொலிவு பெற செய்ய வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவை ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் தற்போது தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
- 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ெரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
கோவை
கோவை போத்தனூர் ெரயில் நிலையத்தில் இருந்து கேரளா மற்றும் வடமாநிலங்களுக்கு அதிகளவு ரயில்கள் சென்று வருகிறது. கோவைக்கு வராத ரெயில்கள் கூட போத்தனூர் ரெயில் நிலையங்களுக்கு வந்து செல்லும்.
போத்தனூர் ெரயில் நிலையத்தில் 5 பிளாட்பாரம் உள்ளது. கோவை அடுத்தபடியாக இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள், ரெயில்வே போலீசார் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரெயில் நிலையத்தை கடந்த சில நாட்களாக சுத்தம் செய்யாமல் கிடக்கிறது. ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. குப்பைகள் அகற்றப்படாததால் துர்நாற்றமும் வீசி வருகிறது.
இதனால் ரெயில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் மிகவும் சிரமத்துகுள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-
போத்தனூர் ெரயில் நிலையத்திற்கு தினமும் தூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மிக பெரிய ரெயில் நிலையமான கோவை ரெயில் நிலையத்துக்கு வராத ரெயில்கள் கூட இங்கு தான் வந்து செல்கிறது. இந்த நிலையில் ரெயில் நிலையம் முழுவதும் குப்பை குவியலாக உள்ளது.
ரெயிலுக்காக வந்து காத்திருக்கும் பயணிகள் துர்நாற்றத்தால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். ரெயிலுக்காக வந்து செல்லும் எங்களாளேயே இங்கு அமர முடியவில்லை. ரெயில்வே பணியாளர்கள் நிலை பரிதாபமாக உள்ளது.
மேலும் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் ஒரு கடை மட்டும்தான் இயங்கி வந்தது. தற்போது அதும் மூடப்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் வாங்க கூட முடியவில்லை. முதியவர்கள், சிறுவர்கள் மிகவும் சிரமத்துகுள்ளாகி வருகின்றனர். எனவே ரெயில்வே நிர்வாகம் குப்பைகளை அகற்றி ஒரு கடையாவது திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோவை ெரயில் நிலையத்தில் 6 பிளாட்பாரங்கள் உள்ளன. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ெரயில்கள் வந்து செல்கின்றன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ெரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். காலை முதல் இரவு வரை எப்போதும் ெரயில் நிலையம் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில் ெரயில் நிலைய பிளாட்பாரங்களில் தற்போது தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இவை, திடீெரன ெரயில் பயணிகளை துரத்தி அவர்களை அச்சுறுத்துகின்றன.
இந்த நாய்களை ெரயில்நிலையத்தில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்