search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power off"

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியபோது, 6 மின்கம்பங்கள் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் பெண்ணாடம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் அந்த பகுதிகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சூறாவளி காற்றினால் பெண்ணாடம்-கொள்ளத்தன்குறிச்சி சாலையில் வள்ளலார் அறநிலையம் அருகே 100 ஆண்டு பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது.

    இதனால் அந்த பகுதியில் இருந்த 6 மின்கம்பங்கள் சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் செல்ல வழியில்லாமல் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.
    ×