என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "powercut"

    • முன் அறிவிப்பு இன்றி திடீர் மின்னிறுத்தம் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்
    • பகல் 10 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை தொடர்ந்து பவர்கட்

     வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் பகளூர் துணை மின் நிலையத்திலிருந்து விநியோகிக்கப்படும் மின்சாரம் வேலாயுதம்பாளையம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கந்தம்பாளையம் வரை சாலை விவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் ஆங்காங்கே மின்கம்பங்கள் மாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நேற்று பகல் 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை திடீரென மின்னிருத்தம் செய்யப்பட்டது. இதனால் வேலாயுதம்பாளையம், மலை நகர், புகழி நகர், ரவுண்டானா, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 11.00 மணி மாலை 5.00 மணி வரை மின்சாரம் நிறுத்தப் பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    • கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்நிறுத்தம்
    • மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதாக உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு

    கந்தர்வகோட்டை,

    மின்தடை கந்தர்வகோட்டை பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொ றியாளர் அறிவிப்பு.புதுக்கோட்டை மா வட்டம் ஆதனக்கோட்டை, புதுப்பட்டி ,பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 28-ந் தேதி வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் ஆதனகோட்டை, மின்னாத்தூர் ,கணபதிபுரம், பெருங்களூர் ,தொண்டைமான் ஊரணி ,வாராப்பூர் அண்டக்குளம், மண விடுதி, சோத்துப் பாலை ,சொக்கநாத பட்டி, மாந்தான்குடி ,,காட்டு நாவல், மட்டையன்பட்டி ,மங்கல த்துப்பட்டி, கந்த ர்வகோட்டை, அக்கட்சி ப்பட்டி, பல்லவரா யன்பட்டி, கல்லாக்கோ ட்டை, சங்கம் விடுதி, மட்டங்கால், வேம்பன் பட்டி ,சிவன் தான் பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி ,நம்புறான் பட்டி, மோகனூர், பகட்டுவான் பட்டி, பல்லவ ராயன்பட்டி, அரவம்பட்டி ,வடுகப்ப ட்டி ,பிசானத்தூர் துருசுப்பட்டி, மெய்குடி பட்டி, வெள்ளாள விடுதி, சங்கம் விடுதி,ஆகிய பகுதிகளு க்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செய ற்பொறியாளர் அறிவித்து ள்ளார்.

    • சேவூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையப்பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்:

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சேவூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையப்பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை சேவூர், அசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைபுதூர், பாப்பான்குளம், வாலியூர், தண்ணீர் பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சைத்தாமரைக்குளம், சாவக்கட்டுப்பாளையம், சாலைப்பாளையம், நடுவச்சேரி, கருக்கன்காட்டுப்புதூர், தளிஞ்சிபாளையம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சைத்தாமரைக்குளம், பிச்சாண்டம்பாளையம், ஒட்டப்பாளையம், ஓலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை (5-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை (5-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை நல்லாம்பட்டி, பொன்னகரம், காவேரிநகர், எம்.ஆர்.எப்.நகர், மாருதிநகர், சமத்துவபுரம், வேடபட்டி,யாகப்பன்பட்டி, மருதாசிபுரம், ஞானநந்தகிரிநகர், எம்.ஜி.ஆர்.நகர், மொட்டணம்பட்டி ரெயில்வேகேட், அந்தோணிநகர், மேட்டுப்பட்டி, சாமிக்கண்ணு தோட்டம்,

    பாரதிநகர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    உடுமலை:

    உடுமலையை அடுத்த கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: கிளுவங்காட்டூா், எலையமுத்தூா், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, குமரலிங்கம், அமராவதி நகா், கோவிந்தாபுரம், அமராவதி நகா் செக்-போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூா் மற்றும் ஆலாம்பாளையம்.

    கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை 8-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 2மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு மற்றும் குடிமங்கலம்.

    • புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புனல்குளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
    • மாதாந்திர பணிகள் நடைபெற போவதால் மின் விநியோகிகம் இருக்காது என்று அறிவிப்பு

    கந்தர்வகோட்டை, 

    கந்தர்வகோட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புனல்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் புனல்குளம் ,தெற்கு வாசல் பட்டி ,மஞ்சப்ேபேட்டை,தச்சன் குறிச்சி ,விராலிப்பட்டி ,நத்தமாடிப்பட்டி ,சோழகம்பட்டி ,கோமாபுரம் ,கொத்தம்பட்டி |சமுத்திரப்பட்டி ,நொடியூர் |அரியாணி பட்டி, புதுநகர் |,முதுகுளம் ,குளத்தூர் நாயக்கர் பட்டி நடுப்பட்டி சேவியர் குடிகாடு , ஆத்தங்கரை பட்டி, கீ ராத்தூர் ,பருக்கை விடுதி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் வின்சன் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடைபடும்.
    • துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 11-ந்தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தந்தை பெரியார்நகர் மற்றும் முருகம்பாளையம் மின் பாதைகளில் மின் வினியோகம் தடைபடும்.

    இதனால் முருகம்பாளையம், பாரக்காடு, சூரியநகர்,கோடீஸ்வரா நகர், கருவேலங்காடு, சிவசக்திநகர், தந்தை பெரியார் நகர், ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என்று திருப்பூர் மின் செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் குரும்பலூர்-நக்கசேலம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மங்கூன் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் குரும்பலூர், பாளையம், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புதுஆத்தூர், லாடபுரம், மேலப்புலியூர், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புது அம்மாபாளையம், டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என்று பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    • துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அவினாசி:

    அவினாசி மின் வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    செங்கப்பள்ளி துணை மின் நிலைய பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூலுவபட்டி மற்றும் பெருமாநல்லூர் தெற்கு பகுதி அலுவலகங்களுக்கு உட்பட்ட குருவாயூரப்பன் நகர், படையப்பா நகர், வாவிபாளையம், கூலிபாளையம், நெட்டகட்டிபாளையம், காளிபாளையம், கிளன்மார்க்கன்மில் பகுதி, ஆதியூர் பிரிவு, தான்டா கவுண்டன் புதூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கே.சாத்தனூர், திருவெறும்பூரில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

    திருச்சி, 

    திருச்சி கே.சாத்தனூர், திருவெறும்பூர் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கே.சாத்தனூர் துணைமின் நிலையத்தை சார்ந்த கே.கே.நகர், ஆர்.பி.எஸ். நகர், இந்தியன் பேங்க் காலனி, வயர்லெஸ் ரோடு, காஜாமலை காலனி, செம்பட்டு பகுதி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, குடித்தெரு, கிருஷ்ணமூர்த்தி நகர், பாரதி நகர், சுந்தர் நகர், காமராஜ் நகர், அய்யப்ப நகர், ஜே.கே.நகர், எல்.ஐ.சி. காலனி, சுந்தோஷ் நகர், பழனி நகர், ஆனந்த் நகர், முல்லை நகர், கே.சாத்தனூர், ஓலையூர், வடுகப்பட்டி, இச்சிகாமாலைப்பட்டி, பாரி நகர், மன்னார்புரம் ஒரு பகுதி, காஜா நகர், சிம்கோ காலனி, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகள்.இதேபோல் திருவெறும்பூர் துணை மின் நிலையத்தை சார்ந்த திருவெறும்பூர், பத்தாளப்பேட்டை, நவல்பட்டு, டி.நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், கிருஷ்ணசமுத்திரம், புதுத்தெரு, வேங்கூர், மேலகுமரேசபுரம், அண்ணா நகர், சூரியூர், எம்.ஐ.இ.டி., திருவெறும்பூர் தொழிற்பேட்டை, சோழமா நகர், பிரகாஷ் நகர், பர்மா காலனி, நேரு நகர், போலீஸ் காலனி, பாரத்நகர், குண்டூர், மலைக்கோவில், கிளியூர், கக்கன்காலனி, கூத்தைப்பார், பூலாங்குடி, பழங்கனாங்குடி, காவேரி நகர், அண்ணா நகர் 100 அடிரோடு ஆகிய இடங்களில் காலை 9.45 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினி–யோ–கம் இருக்–காது.
    • துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    அவினாசி:

    அவினாசி மின் வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கப்பள்ளி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட செங்கப்பள்ளி, ஜோதி நகர், சரவணாபுரம், கே.பி.ஆர். மில் பகுதி, பியூர்டிராப் கம்பெனி பகுதி, கருடா நகர் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபோல் பல்லடம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகர், அம்மாபாளையம், பனப்பாளையம் ஆகிய ஊர்களில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    • காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • 21-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

    காங்கயம்:

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 21-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்:-

    ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம் மற்றும் முருகன்காட்டு வலசு.

    பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம் மற்றும் கண்ணம்மாபுரம். 

    ×