search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prime Minister's Cup"

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • அனைத்து ஊராட்சி பகுதியில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் இப்போட்டியில் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது,

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொது பிரிவினர் பங்கேற்கும் வகையில் நடைபெறவுள்ளது. மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

    இந்த போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு குழு 21 துறைகள் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகள் இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொது பிரிவினர் அதிக அளவில் பதிவு செய்து பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்கள் மற்றும் நகராட்சிகள், தேசிய நாட்டு நலப்பணிகள் மற்றும் நேருயுகவேந்திரா குழுக்கள் அமைத்து போட்டிகள் குறித்த விளம்பர பதாகைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து ஊராட்சி பகுதியில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் இப்போட்டியில் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறை அரசு அலுவலர்களும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் மற்றும் முழு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ×