search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "priority"

    • மழைநீர், கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நகரமன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ஹேமலதா, துணைத்தலைவர் சுப்பராயன், பொறியாளர் குமார், நகர அமைப்பு ஆய்வாளர் மரகதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் உறுப்பினர்கள் பேசுகையில்,

    ரமாமணி (அ.தி.மு.க): சீர்காழி எரிவாயு தகணமேடை முன்பு நிர்வகித்த வந்த பாபு என்பவருக்கு வழங்கிடவேண்டும்.

    ஏ.பி.எஸ். பாஸ்கரன் (தி.மு.க): சீர்காழி நகராட்சி சார்பில் 16 பேட்டரி வண்டிகள் மற்றும் டாட்டா ஏசி வாகனங்கள் குப்பை அல்ல வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளதா? குப்பைகள் சேகரிக்கப்பட்டு எடை போடுவதை யார் கண்காணிக்கின்றனர்.

    ராஜசேகரன் (தே.மு.தி.க): உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காமல் தமிழக முதல்வரை அவமதிப்பு செய்யும் கர்நாடகா அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    சாமிநாதன் (தி.மு.க): எனது வார்டு பகுதியில் மழைநீர், கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்முருகன் (பா.ம.க): சீர்காழி நகராட்சி கடந்த 50 ஆண்டுகளாக இதே நிலையில் உள்ளது. நகராட்சி தரம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேவதாஸ் (தி.மு.க): எனது பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும். கஸ்தூரிபாய் (தி.மு.க): எனது பகுதியில் கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    தலைவர் துர்கா ராஜசேகரன்: எரிவாயு தகணமேடை அறக்கட்டளை மூலம் நிர்வகித்திட அறிவிப்பு வெளியிடப்படும். தகுதியுடைய அறக்கட்டளையினர் விண்ணப்பம் செய்து ஒப்புதல் பெற்று நிர்வகிக்கலாம். தனிநபர் மேற்கொள்ளமுடியாது. அயோத்திதாஸ் திட்டத்தின் தமிழகம் முழுவதும் ரூ.1000 கோடி நதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் எஸ்.சி, எஸ். டி பகுதி மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து அந்தந்த பகுதியை சேர்ந்த உறுப்பினர்கள் பணிகளை தேர்வு செய்து எழுத்துப் பூர்வமாக கொடுக்க வேண்டும் என்றார்.

    முன்னதாக சீர்காழி நகர மன்ற கூட்ட அரங்கில் சி.சி.டி.வி கேமரா வைப்பதற்கு நகர மன்ற உறுப்பினரிடம் நகர சபை தலைவர் முன் அனுமதி பெறவில்லை. பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் விலை மதிப்பு கூடுதலாக உள்ளது. இந்தப் பணிகள் தரம் இல்லைஎனக்கூறியும், செய்யாத பணிகளை மன்ற பொருளில் வைத்து மக்கள் வரிபணத்தை வீணடிப்பதாகவும் குற்றம் சாட்டி நகர்மன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வை சேர்ந்த ரம்யா, வள்ளி , ரேணுகாதேவி, அ.தி.மு.க.வை சேர்ந்த ரமாமணி, முழுமதி, பாலமுருகன், நித்யா தேவி, சூரிய பிரபா, கலைச்செல்வி, ராஜேஷ் ஆகிய 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    • கடை வழங்க முன்னுரிமை கேட்டு வியாபாரிகள் வெளிநடப்பு செய்தனர்.
    • நாளை முதல் தற்காலிக பஸ் நிலையம் செயல்படும்

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதுப்பிக்க அரசு ரூ.8 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. இந்த நிலையில் பழைய பஸ் நிலையத்தின் ஒரு பகுதி அடைக்கப்பட்டது. இதையடுத்து அய்யப்பன்எம்.எல்.ஏ. தலைமையில் கடைக் காரர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் சமரச கூட்டம் நகராட்சி அலுவ லகத்தில் உசிலம்பட்டி ஆர்.டி.ஒ. ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ. அய்யப்பன், நகராட்சித் தலைவர் சகுந்தலா, நக ராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டித்தாய் ஆகிய அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.

    அப்போது நகராட்சி கமிஷனர் தற்போது உள்ள பஸ் நிலையம் 1½ ஏக்கரில் உள்ளது. கூடுதலாக ஒரு ஏக்கர் விரிவாக்கம் செய்து 2½ ஏக்கரில் 18 பஸ்கள் நிற்கும் வகையில் புதுப்பிக்க அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நாளை முதல் தற்காலிக பஸ் நிலையம் செயல்படும் என தெரிவித்தார்.

    இதையடுத்து புதிதாக கட்டப்படும் பஸ் நிலையத்தில் தற்போது கடை வைத்துள்ள வியா பாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் அது போன்று முன்னுரிமை வழங்க முடியாது எனவும் அதற்கு உத்தரவாதம் தரமுடியாது எனவும் தெரிவித்தனர். இதனால் கடை வியாபாரிகள் கூட்டத்தை புறக்கணித்துச் சென்றனர்.

    தற்காலிக பஸ் நிலையம் உசிலம்பட்டி-தேனி ரோடு ஹவுசிங் போர்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து இன்று முதல் பஸ்கள் இயங்குகின்றன.

    • ஒரு நாளைக்கு ரூ. 214 ஊதியம் வழங்கப்–படுகிறது.
    • 6அடி நீளம், 2.5 அடி அகலம் என்ற அளவில் நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்புகள்.

    திருவாரூர்:

    மத்திய அரசின் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுதோறும் 100 நாட்கள் வேலை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    இத்திட்டத்தின்படி குறிப்பிட்ட அளவிலான பணிகளை முடிக்கும் நிலையில் ஒரு நாளைக்கு ரூ.214 ஊதியம் வழங்கப்படுகிறது.

    இப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தேர்வு செய்கிறார்கள்.

    திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளில் வாய்க்கால் தூர்வாருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    ஆறுகளில் இருந்து வாய்க்கால் வழியாகவே பாசன நீர் விவசாய வயல்களுக்கு கொண்டு செல்லப்படும்.

    அதற்கேற்ற வகையில் தடையின்றி பாசனம் மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார இப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    வாய்க்கால்களை தூர் வரும்போது குறிப்பிட்ட இடைவெளிகள் இரண்டடி ஆழத்திற்கு, 6அடி நீளம், 2.5 அடி அகலம் என்ற அளவில் நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்புகள் பணியாளர்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.

    திருவாரூர் மாவட்டத்தில் பெரும்புகழூர், அம்மையப்பன், வண்டாம்பாளை ஆகிய 430 ஊராட்சிகளிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    • பெண்களுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.3.60 லட்சமும் வழங்கப்படும்.
    • மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாட்டில் இறால் உற்பத்தினை அதிகரிக்கவும் மற்றும் புதியதாக இறால் பண்ணை தொழிலில் ஈடுபட விரும்புவோர் பயன்பெறும் வகையில் உவர் நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    உவர் நீர் இறால் வளர்ப்பி ற்காக புதிய குளங்கள் அமைத்தல் திட்டத்தில் 1 ஹெக்டேர் பரப்பிற்கு மொத்த செலவினம் ரூ.8 லட்ச த்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக ரூ.3.20 லட்சமும் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.4.80 லட்சம் வழங்கப்படும்.

    மேலும் இக்குளங்களுக்கு இறால் வளர்க்க உள்ளீடுகள் வழங்கும் திட்டத்தில் மொத்த செலவினம் ரூ.6 லட்சத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக ரூ.2.40 லட்சமும் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.3.60 லட்சமும் வழங்கப்படும்.

    மேற்படி திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பொது பிரிவினருக்கு 6 ஹெக்டேர் மற்றும் பெண்களுக்கு 2 ஹெக்டேர் என மொத்தம் 8 ஹெக்டேர் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேற்படி திட்டங்களில் பெறப்படும் விண்ணப்ப ங்கள் தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.

    எனவே விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் எண்.873/4, அறிஞர் அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னுரிமை அடிப்படையில் விருப்பத்திற்கு ஏற்ற இடம் வழங்க வலியுறுத்தினர்.
    • அலுவலகங்களில் அலுவலக பணியாளர்களுக்கு பொது கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் , வட்டார வளர்ச்சி கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கல்வித் துறை அலுவலகங்களில் அலுவலக பணியாளர்களுக்கு பொது கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு இந்த கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இளநிலை உதவியாளர், தட்டச்சர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணிபுரிந்த 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆனால் இந்த பொது கலந்தாய்வில் முன்னுரிமை அடிப்படையில் தகுதியானவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப உள்ள இடங்களில் பணியிட மாறுதல் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் கேட்ட இடம் வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சிலருக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இடம் வழங்கப்பட்டது.

    எனவே சரியான முறையில் முன்னுரிமை அடிப்படையில் தகுதியானவர்களுக்கு பாராபட்சமின்றி அவர்கள் கேட்கும் இடத்திற்கே பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

    • 10 முக்கிய திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிக்கலாம்.
    • செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    உங்கள் தொகுதியில் முதல-அமைச்சர் திட்டத்தின் கீழ் தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அவற்றில் மிக முக்கியமானது என்று எம்.எல்.ஏ. கருதும் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிக்கலாம்.

    மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின் கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

    அதன்படி, நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது. அதில், நாகப்பட்டினம் தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • விளிம்பு நிலையிலுள்ள மக்களின் உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகி தலைமையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கான அங்கீகார படிவங்கள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்

    நெல்லை:

    விளிம்பு நிலையிலுள்ள மக்களின் உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகி தலைமையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

    இந்த ஆய்வு கூட்டத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட வழங்கல் அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர்கள், கூட்டுறவு துணை பதிவாளர்கள், சமூகநலத்துறை அலுவலர்கள், சத்துணவு திட்ட அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சமூகத்தில் பின் தங்கிய நிலையிலுள்ள திருநங்கைகள், கணவரால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்தவர்கள், நரிக்குறவர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்கி அவர்களது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

    நெல்லை மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர், திருநங்கைகள், கணவரால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்தவர்கள், நரிக்குறவர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்கும் வழிமுறைகள் குறித்து அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் விளம்பரப் பலகைகள் வைக்க மாநில உணவு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நியாய விலைக் கடைகளுக்கு நேரில் வர இயலாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கான அங்கீகார படிவங்கள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, மாநில உணவு ஆணைய உறுப்பினர் கணேசன், இணை பதிவாளர் அழகிரி, மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிக்கண்ணு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×