search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private Doctors Strike"

    தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திண்டுக்கல்:

    மத்திய அரசு அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன.

    இதனால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும் 25 உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மற்ற 20 பேர் நியமன உறுப்பினர்கள் ஆவார்கள்.

    இதனால் மாநில உரிமை பறிபோகின்றது. மேலும் தனியார் மருத்துவ கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.எனவே தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆஸ்பத்திரிகள் அடைக்கப்பட்டு இருக்கும். பிரசவ மற்றும் அவசர சிகிச்சைகள் மற்றும் மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்தனர். தேனி மாவட்டத்தில் 850-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர். #tamilnews
    ×