என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » prohibited items
நீங்கள் தேடியது "Prohibited items"
பாளை மத்திய ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா என்பது குறித்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
நெல்லை:
பாளை மத்திய ஜெயிலில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு பீடி, சிரெட், செல்போன், கஞ்சா உள்ளிட தடைசெய்யப்பட்ட பொருட்கள், புழக்கத்தில் உள்ளதா? என்று போலீசார் அவ்வப்போது அறிவிப்பில்லாமல் தீடீர் சோதனை நடத்துவார்கள்.
அதே போன்று இன்று அதிகாலை பாளை மத்திய ஜெயிலில் அதிரடி சோதனை நடத்த மாநகர போலீசார் கமிஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் துணை கமிஷனர் சுகுனாசிங் மேற்பார்வையில் உதவி கமிஷ்னர் விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராமையா, காளியப்பன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிகாலை பாளை மத்திய ஜெயிலுக்கு சென்றனர்.
அங்கு ஒவ்வொரு பிளாக்காக சென்று சோதனை நடத்த போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். பின்னர் காலை 6 மணி முதல் 7 .30 வரை அதிரடி சோதனை நடந்தது. கைதிகள் தங்கும் அறை, குளியல் அறை, கழிவறை மற்றும் மைதானத்தில் உள்ள சந்தேகப்படும் இடங்களில் இந்த சோதனை நடந்தது.
அதை போல் முக்கிய கைதிகளிடமும். சோதனை நடத்தினார்கள் சுமார் 1 .30 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஜெயிலின் சுற்றுப்புறங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர்கள் ஆய்வு செய்து விட்டு திரும்பினர் பாளை ஜெயிலில் சோதனை நடந்த போது ஜெயிலின் வெளிப்புறமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. #tamilnews

×

X