search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Promotsava ceremony"

    • கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமாலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவம் விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். அதுமட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் விடுமுறை நாட்களும், விஷேச நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவம் நேற்று காலை சுமார் 6 மணியளவில் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சாமிக்கும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், விநாயகர் வீதி உலா நடைபெற்றது

    விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலையிலும், மாலையிலும் விநாயகர் வீதி உலா நடைபெற்றது. இந்த விழா வருகிற 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழா நாட்களில் காலை சாமி வீதியுலாவும், மாலை விநாயகர், சந்திரசேகர் வீதியுலாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையிலான விழா குழுவினர் செய்து உள்ளனர்.

    ×