search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pr.Pandian"

    • கர்நாடகாவை சேர்ந்தவருக்கு ஜல் சக்தி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டிற்கு அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நீராதாரங்களை தடுக்கும் விதமாக தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் இருந்து உபரி நீரை பெற்று தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பூம்புகார் முதல் மேட்டூர் அணை வரை பேரணியாக சென்றனர்.

    நேற்றிரவு சேலம் வந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான குழுவினருக்கு விவசாயிகள் வரவேற்பு அளித்தனர்.

    அப்போது பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், தமிழ்நாட்டிற்கு அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நீராதாரங்களை தடுக்கும் விதமாக தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. இதனை தடுக்க தமிழக முதல்வர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநிலங்களுக்கு இடையே பேசி நீராதார பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும், ஆனால் அதனை வைத்து மோடி அரசியல் செய்கிறார். தற்போது கர்நாடகாவை சேர்ந்தவருக்கு ஜல் சக்தி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மோடி விவசாயிகளை புறக்கணித்து செயல்பட்டதால் தமிழ்நாடு, உத்திரபிரதேசம், பஞ்சாப் உள்பட பல இடங்களில் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஆட்சி அமைக்கும் தகுதியை அவருக்கு மக்கள் வழங்கவில்லை என்றார். தொடர்ந்து மேட்டூருக்கு அவர்கள் புறப்பட்டு சென்றனர். இன்று அதிகாலை 1 மணியளவில் மேட்டூரை சென்றடைந்தனர்.

    இதற்கிடையே அனுமதி இல்லாமல் பேரணியாக சென்றதாக சேலம் சூரமங்கலம் போலீசார் பி.ஆர்.பாண்டியன் உள்பட 70 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ×