search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Company"

    • நிலுவையில் உள்ள அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • உதவிக் குழுக்கான கடனுதவிக்கான காசோலையினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா, அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் ஆகியோர் வழங்கினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா, அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், கிருஷ்ணசாமி , தமிழரசி, தளபதி , நாகைமாலி ,பாலாஜி , ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றுது. இக்கூட்டத்தில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் 2014-2015 முதல் 2021-2022 ஆம் ஆண்டிற்கான (பொதுத்துறை நிறுவனங்கள்) உள்ள தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் , தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் , தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    நிலுவையில் உள்ள பத்தி அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் இவ்ஆய்வுக் கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாட்கோ திட்டத்தின் மூலம் 4 பயனாளிகளுக்கு

    ரூ.8,93,565 லட்சம் தாட்கோ மானிய கடனுதவியுடன், ரூ. 32,44,258 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ. 2.50 கோடி மகளிர் சுய உதவிக் குழுக்கான கடனுதவிக்கான காசோலையினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா, அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் ஆகியோர் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவன குழு சிறப்பு பணி அலுவலர் ராஜா, கூடுதல் கலெக்டர் (வருவாய்)சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, தஞ்சாவூர் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×