என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "public rally"
- உங்களிடம் பேச வேண்டும் என இளம்பெண் ஒருவர் டவர் மீது ஏறினார்.
- இதைக் கண்ட பிரதமர் மோடி இளம்பெண்ணின் செயலால் அதிர்ச்சியடைந்தார்.
ஐதராபாத்:
119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், செகந்திராபாத்தில் பாஜக ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் இளம்பெண் ஒருவர் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் திடீரென டவர் மீது வேகமாக ஏறினார். இதையடுத்து, அந்த இளம் பெண்ணை பிரதமர் சமாதானப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர், அங்கிருந்த மின்விளக்கு டவரின் மீது ஏறி பிரதமரிடம் பேச முயன்றார். இளம்பெண் டவர்மீது ஏறுவதைக் கண்ட பிரதமர் மோடி, தயவுசெய்து கீழே இறங்குங்கள் என பதைபதைப்புடன் கேட்டுக் கொண்டார். உங்களிடம் நான் பேசுகிறேன் என பிரதமர் கூறியதை அடுத்து, அப்பெண் டவரில் இருந்து கீழே இறங்கினார். இதனால் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தெலங்கானா மாநிலம் உதயமானதும் முதல் முதலமைச்சர் தலித் எனக்கூறிய கேசிஆர், பிறகு அந்த நாற்காலியை தானே பிடுங்கிக் கொண்டார். சுதந்திரத்திற்கு பிறகு அத்தனை அரசியல் கட்சிகளும் மடிகா சமூக மக்களை மோசம் செய்தன. தலித்களுக்கு 3 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்ன பிஆர்எஸ் கட்சி அதை நிறைவேற்றவில்லை, அம்பேத்கரை தோற்கடித்த கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியால்தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படாமல் போனதாகவும் குற்றம் சாட்டினார்.
- 2023 இறுதிக்குள் 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற போகிறது
- மகாலஷ்மி திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்
இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவிருக்கிறது. தற்போதைய ஆளும் பா.ஜ.க.வின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 25-க்கும் மேற்பட்ட கட்சிகள், "இந்தியா கூட்டணி" எனும் பெயரில் எதிர்கட்சிகள் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் இந்த வருட இறுதிக்குள் சட்டீஸ்கர், ம.பி., மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில சட்டசபைகளுக்கான தேர்தலும் நடைபெறவிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று தெலுங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் துக்குகுடா நகரில் விஜயபேரி சபாவில் ஒரு மிக பெரும் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார்.
அக்கூட்டத்தில் அவர் அம்மாநில மக்களுக்கு பல சலுகைகளை அறிவித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
தெலுங்கானா மக்களுக்கு 5 உத்திரவாதங்களை வழங்குகிறேன். அவை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும். மகாலஷ்மி திட்டம் எனும் திட்டத்தின்படி தெலுங்கானாவில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும். சமையல் கியாஸ் ரூ.500 தொகையில் வழங்கப்படும். தெலுங்கானா மாநில அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். தெலுங்கானாவில் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைக்க காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என நான் விரும்புகிறேன்.
இவ்வாறு சோனியா காந்தி அறிவித்தார்.
தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- இக்கூட்டணியின் இரண்டு சந்திப்புகள் பாட்னாவிலும், பெங்களூரூவிலும் நடைபெற்றது
- கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் மக்களவை தேர்தலை சந்திப்போம்
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.
ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள், இந்தியா (I.N.D.I.A.) எனும் பெயரில் ஒரு பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளன.
இக்கூட்டணியின் முதல் சந்திப்பு கூட்டம் கடந்த ஜூன் 23 அன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது.
இந்நிலையில் இக்கூட்டணியின் அடுத்த சந்திப்பு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தற்போது நடைபெற்றது.
கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள், கூட்டு செயல் கமிட்டிகள் அமைத்தல், கூட்டணியின் இலச்சினையை மக்களிடம் அறிமுகப்படுத்துதல், கூட்டணியின் கொள்கைகள் மற்றும் குறைந்தபட்ச செயல் திட்டங்கள் வகுத்தல், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டிய வியூகம், எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவையாக இருப்பதாலும், தலைவர்களுக்கிடையே கருத்து மோதல்கள் தோன்றாமலிருக்கும் வகையிலும், தேர்தலுக்கு கூட்டணியை வழிநடத்த 13-பேர் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டியை இக்கூட்டணி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சி. வேணுகோபால், தேசியவாத காங்கிரஸை சேர்ந்த சரத் பவார், தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர் பாலு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபிஷேக் பானர்ஜி, சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த லல்லன் சிங், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சாடா, ஜனதா முக்தி மோர்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஜாதவ் அலி கான், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.ராஜா, தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மெஹ்பூபா முப்தி ஆகியோரை உள்ளடக்கிய 13-பேர் கொண்ட குழு ஒருங்கிணைக்கும் பணியை கவனிக்கும்.
"வேற்றுமைகளை மறந்து மக்களவை தேர்தலுக்காக ஒன்றாக பணியாற்ற உறுதியெடுத்துள்ளோம். நாடு முழுவதும் மக்கள் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணிகள் நடத்த உள்ளோம்," என்றும் எதிர்கட்சி கூட்டணி அறிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்