search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • கொடிக்கம்பம் நட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • அனைத்து கட்சி கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் பஸ் நிலையம் அருகே கலையரங்கம் உள்ளது. இதன் அருகே தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி, பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று அந்த இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடிக் கம்பம் நடுவதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சி நிர்வாகிகள் செய்தனர். இதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அந்தப்பகுதியில் உள்ள அனைத்து கட்சி கொடிக்கம்பங்களையும் அகற்றி கொள்வதாக கட்சி நிர்வாகிகள் முடிவெடுத்தனர். மேலும் அந்த இடத்தில் யாரும் கொடிக்கம்பம் நடுவதில்லை என முடிவு செய்து ஏற்கனவே நடப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அந்தந்த கட்சி நிர்வாகிகளே அகற்றிக்கொண்டனர்.

    • அரியலூர் இருக்கையூர் கிராம பொதுமக்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க தாசில்தார் அலுவலகம் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
    • ஆக்கிரமிப்பில் உள்ள பொது இடத்தை மீட்டு தர பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை என்று குற்றச்சாட்டு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள இருக்கையூர் கிராமத்தில் 23 ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 1975-ம் ஆண்டு இலவச வீட்டு மனை மற்றும் பொது பயன்பாட்டிற்காக 1 ஏக்கர் 63 சென்ட் இடம் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1986-ம் ஆண்டு மேற்கண்ட 23 குடும்பத்தினருக்கும் இலவச தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. அதில் அவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த 23 பேரில் ஒருவர் தனது இடத்துடன் சேர்த்து பொதுஇடமான 41 சென்ட் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பொது காரியங்களுக்காக இவ்விடத்தை பயன்படுத்த முயலும்போது பிரச்சினை ஏற்பட்டு வருகிறதாம். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லையாம்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இப்பகுதி மக்கள் இதனை கண்டித்தும், ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத்தரக்கோரியும் தங்களின் ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டையை ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாரிடம் ஒப்படைக்க உடையார்பாளையம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது அவர்களிடம் உடையார்பாளையம் தாசில்தார் ஆனந்தவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்துவோம் என கூறி கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் அருகே தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், அமைச்சர் கள், மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகள் ஆகியவைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை 200 -க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏளாளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    நாளை (செவ்வா ய்க்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    எனவே கிராம சபை கூட்டத்திற்கு மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அயன்பாப்பாகுடி கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுத்து தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • மாரி, பாக்கியம், செந்தில் ஆகியோர் மனு கொடுத்தனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் பகுதியில் மிகப்பெரிய கண் மாயாக அயன் பாப்பாக்குடி கண்மாய் விளங்கு–கிறது. இந்த கண்மாயில் தேக்கப்ப–டும் நீர் விவசாயம் மற்றும் இப்பகுதி நிலத்தடி நீர் உயர்வுக்கு காரணமாக விளங்குகிறது.

    இந்த கன்மாய்க்கு திருப்ப ரங்குன்றம் தென்கால் கண்மாயிலிருந்து உபரி நீர் வருவது உண்டு. இந்த நிலையில் தற்போது மதுரை பழங்காநத்தம், முத்துப்பட்டி, ஜெய்ஹிந்த்புரம், எம்.கே.–புரம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் இந்த கண்மாயில் கலக்கிறது. மேலும் இந்த கண்மாயின் மடை திறக்கப்பட முடியாத நிலையில் உள்ளது.

    இந்த கண்மாயில் இருந்து நீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரப்படாமல் புல் புதராக மண்டிக்கிடக்கிறது. இதனால் கண்மாயில் நீர் பெருகி அருகே உள்ள குடி யிருப்பு பகுதிகளில் கழிவு நீர் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மலேரியா, டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாய நிலையும் இருக்கிறது.

    எனவே மதுரை மாவட்ட கலெக்டர் கண்மாயை ஆய்வு செய்து கண்மாய் கரைகளை பலப்படுத்தி நீர் வெளியேறும் கால்வாயை தூர்வாரி தர வேண்டும். மேலும் கண்மாய்க்குள் கலக்கும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என அவனியாபுரம் பொதுமக்கள் சார்பில் கவுன்சிலர்கள் கருப்புசாமி, அய்யனார் ஆகியோர் தலை மையில் மாரி, பாக்கியம், செந்தில் ஆகியோர் மனு கொடுத்தனர்.

    • சாலைகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன.
    • இவை சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்திச் சென்று பயமுறுத்துகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் கோட்டை சாலை, பரமத்தி சாலை, கடைவீதி, மோகனூர் சாலை, திருச்சி சாலை, துறையூர் செல்லும் சாலைகள் உள்ளன.

    தெரு நாய்கள்

    இந்த சாலைகளில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இதுதவிர இலகு ரக, கனரக வாகனங்களும் சென்று வருகின்றன.

    இந்நிலையில், இந்த சாலைகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்திச் சென்று பயமுறுத்துகின்றன.

    மேலும், வாகனங்கள் வரும்போது, திடீரென குறுக்கே பாய்வதால் பலர் விபத்துகளில் சிக்குகின்றனர்.

    இதனால் பலருக்கு கை, கால்கள் முறிவதும், சில உயி ரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அண்மையில் பரமத்தி சாலையில் இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் நாய் குறுக்கே சென்றதால் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

    எனவே சாலையில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுருத்தி வருகின்றன.
    • யானையினை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் சமயபுரம், சுக்கு காபிக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.

    இந்த வனப்பகுதிகளில் காட்டுயானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, புள்ளிமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

    இவை அவ்வப்போது உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுருத்தி வருகின்றன.

    இதனிடையே குடியிருப்பு பகுதியில் ஒரு காட்டு யானை சுற்றி வருகிறது. அத்துடன் ஒரு குட்டி யானையும் சுற்றுகிறது. இந்த யானையானது நடந்து செல்லாமல் மின்னல் வேகத்தில் செல்கிறது. அதனுடன் செல்லும் குட்டி யானை சிட்டாக நடமாடி வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் பெரிய யானைக்கு மின்னல் என்றும், சின்ன யானைக்கு சிட்டு என்றும் பெயர் வைத்து அழைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மின்னல் மற்றும் சிட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி சுக்கு காபிக்கடை பகுதிக்குள் நுழைந்தது.

    அங்குமிங்கும் சுற்றி திரிந்த காட்டு யானைகள், அங்குள்ள பாலாஜி என்ப வரது வீட்டு சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. மேலும் வீட்டின் அருகே நிறுத்தப்ப ட்டி ஆட்டோ வையும் சேதப்படுத்தியது.

    இதில் ஆட்டோவின் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. வீடு மற்றும் ஆட்டோவை சேதப்படுத்தி விட்டு யானை அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

    இதை பார்த்த வீட்டு உரிமையாளர் உடனடியாக சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை குடியிருப்பு பகுதியை விட்டு வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதா வது:-

    இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த மின்னல், சிட்டு காட்டுயானைகள் எங்களது பகுதிக்குள் புகுந்து வீட்டின் சுற்றுச்சு வரை இடித்து தள்ளியதோடு, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

    காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் நாங்கள் அச்சத்துடனேயே வசித்து வருகிறோம்.

    மேலும் தூக்கமின்றி நிம்மதி இழந்து தவித்து வருகிறோம். எனவே வனத்துறையினர் ஒற்றைக்காட்டு யானையினை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சில தினங்களாக மேகமூட்டம் ஏற்பட்டு மாலையில் மேகம் கலைந்து செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது
    • இரவு 7 மணியளவில் பெய்ய தொடங்கிய சாரல் மழை சுமாா் அரை மணி நேரம் பெய்தது.

    தாராபுரம்

    தாராபுரம் பகுதியில் சில தினங்களாக மேகமூட்டம் ஏற்பட்டு மாலையில் மேகம் கலைந்து செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் வெளுத்து வாங்கியது. மாலையில் 3 மணிக்கு மேல் கருமேகம் சூழ்ந்து ஜில்லென குளிர்காற்று வீச தொடங்கியது. சிறிது நேரத்தில் சூறாவளி காற்றுடன் மழை மெல்ல தொடங்கி சிறிது நேரத்தில் கனமழையாக பொழிந்தது.

    மழை மாலையில் 4மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை சூறாவளி காற்றுடன் பெய்தது. இந்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.குறிப்பாக அலங்கியம் சாலையில் மழை நீர்தேங்கியது. அந்த சாலையில் வாகனங்கள் மெதுவாக சென்றன.

    அதே போல் மூலனூர், போளரை, கரையூர் பகுதியிலும் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் கால்நடைகளுக்கு போதுமான புற்கள் காடுகளில் வளர தொடங்கி விடும் என்றும், இதனால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் மிதமான வெயில் இருந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயில் குறைந்து இதமான காலநிலை நிலவியதுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் உஷ்ணத்தில் தவித்த மக்கள் உற்சாகமடைந்தனா்.

    பின்னா் இரவு 7 மணியளவில் பெய்ய தொடங்கிய சாரல் மழை சுமாா் அரை மணி நேரம் பெய்தது. 

    • கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக நாள்தோறும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.
    • கிராமங்களில் தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடிநீர் வழங்கப்படுவதில்லை.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்புற கிராமங்களுக்கு திருமூர்த்தி அணையின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக நாள்தோறும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் குடிநீர் திட்டத்தில் நிலவுகின்ற பல்வேறு குளறுபடிகள் காரணமாக கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

    இதனால் ஆவேசம் அடையும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.அந்த வகையில் நேற்று ஆர். வேலூர் ஊராட்சியில் பூலாங்கிணறு குடிநீர் திட்டத்திற்கு வால்வு பொருத்துவதற்கு அதிகாரிகள் வருகை தந்தனர். ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் வால்வு பொருத்தக் கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சீரான முறையில் குடிநீர் வழங்குமாறும் தெரிவித்தனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

    கிராமங்களில் தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடிநீர் வழங்கப்படுவதில்லை. பழைய பட்டியலில் உள்ள எண்ணிக்கைக்கு தகுந்தவாறு குடிநீர் வழங்குகிறார்கள்.அது மட்டுமின்றி குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டுள்ள பழைய வால்வை அகற்றிவிட்டு அளவு சிறியதாக உள்ள வால்வை பொருத்துகிறார்கள்.

    இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்று தெரிவித்தனர்.

    • கை, காலில் வீக்கம் அடைந்த மாணவருக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.
    • பெற்றோர் விசாரித்த போது ஆசிரியர் மோகன் பிரம்பால் தாக்கியதாக கூறினார்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகையில் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தற்காலிக ஆசிரியராக மோகன்(36) என்பவர் வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை ஆசிரியர் மோகன் பிரம்பால் அடித்ததாக தெரிகிறது. இதில் கை, காலில் வீக்கம் அடைந்த மாணவருக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார். இதுபற்றி யாரிடமும் கூறவேண்டாம் என்று மாணவரிடம் ஆசிரியர் மோகன் சொன்னதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே நேற்றுகாலை மாணவனின் கை, காலில் வீக்கம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்த போது ஆசிரியர் மோகன் பிரம்பால் தாக்கியதாக கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மோகனி டம் விசாரித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவா தத்தில் அவர்கள் ஆசிரியர் மோகனை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் ஆசிரியர் மோகனை மீட்டனர். தாக்குதலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து மோகன் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வகுப்பில் பாடம் நடத்தும் போது மாணவர் குறுக்கிட்டு சந்தேகம் கேட்டதாலும் அறிவியல் பாடத்தில் குறிப்பு எடுக்க சொன்னபோது புரியவில்லை என்று கூறியதாலும் மாணவரை ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இது தொடர்பாக பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் வைலட்மேரி இசபெல்லா தலைமையில் கல்வி அதிகாரிகள் நேற்று நள்ளிரவு வரை கிராமமக்கள் மற்றும் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இன்று 2-வது நாளாக பள்ளியில் விசாரணை நடந்து வருகிறது. விசார ணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 525 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.
    • நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரருக்கு தெரிவிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக் கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையேற்று பேசியதாவது:-

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை. குடும்ப அட்டை பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 525 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பத்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலு வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • பொதுமக்களிடையில் இருந்து 579 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர்உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 579 மனுக்களை பெற்று கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சி யில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, துணை கலெக்டர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×