search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • “நம்ம சிங்கம்புணரி” செல்பி பாயிண்ட்டை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஏற்பாடு செய்திருந்தார்.
    • இங்கு ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் குடும்பத்துடன் ஆர்வமாக செல்பி எடுத்து செல்கின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த சேவுக பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி பிரமோற்சவ திருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஆனால் இந்த ஆண்டு வைகாசி மாதத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால் ஆனி மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. இத்திருவிழாவின் முதல்நாளான இன்று கொடியேற்றம் காப்புக்கட்டுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வந்து ஒரே நேரத்தில் தேங்காய் உடைப்பார்கள்.

    இந்த திருவிழாவையொட்டி மாவட்டத்திலேயே முதன்முறையாக சிங்கம்புணரி மணியம்மாள் அறக்கட்டளை சார்பில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஏற்பாட்டில் "இது நம்ம சிங்கம்புணரி" என்ற பெயரில் அலங்கார விளக்குகளுடன் பிரம்மாண்டமான செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் குடும்பத்துடன் ஆர்வமாக செல்பி எடுத்து செல்கின்றனர்.

    • ராகுல் காந்தியில் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியில் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை 44-வது வார்டு சார்பாக மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வார்ட்டு தலைவர் ஹேம லதா முத்துப்பாண்டியன் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் உணவு பரிமாறப்பட்டது.

    இதில் மாவட்ட துணை தலைவர் மலர் பாண்டியன், பகுதி தலைவர் சுந்தர், மாவட்ட செயலாளர் காசி ராஜன் மற்றும் நிர்வாகிகள் சூரிய நாராயணன், நாஞ்சில், பால் சோசப், மகேஸ்வரன், கண்ணன், வார்டு தலைவர் வேல்முருகன், அப்பாஸ் அலி, மாநில பேச்சாளர் சிதம்பர பாரதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.

    • அரசு ஆஸ்பத்திரியிலும் டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது கிடையாது.
    • அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சென்றால் டாக்டர்கள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வளா்ந்து வரும் பகுதியாக மாறி வருகிறது. திருமருகலில் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இதன் கட்டுப்பாட்டில் திட்டச்சேரி, ஏனங்குடி,கணபதிபுரம், திருக்கண்ணபு ரம்,திருப்பத்தாங்குடி உள்ளிட்ட ஊா்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. தற்போது எல்லா இடங்களிலும் மருத்துவா்கள் நியமிக்கப்பட்டு செயல்படுகிறது. இருப்பினும் இரவு நேரத்தில் எந்த அரசு மருத்துவமனையிலும் மருத்துவா்கள் தங்கி சிகிச்சை அளிப்பது கிடையாது.

    குறிப்பாக இரவு நேரங்களில் பாம்பு,தேள் போன்ற விஷ பூச்சிகள் கடித்து பாதிக்கப்பட்ட வா்களும்,விஷம் அருந்தி உயிருக்கு போராடுபவா்களும் இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் மருத்துவா்கள் பணியில் இருப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா். அங்கு இரவுப் பணியில் இருக்கும் செவிலியா்கள் முதல் உதவி மட்டும் செய்துவிட்டு உடனடியாக நாகப்பட்டினம் அல்லது திருவாரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி விடுகின்றனா்.

    எனவே, இப்பகுதிகளில் இரவு நேரத்திலும் முழு சிகிச்சை கிடைக்கும் வகையில் இரவு நேரப்பணியில் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்களிடம் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலால் உதவி ஆணையர் அழகிரிசாமி தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு அலுவலர் முதலியப்பன், மாவட்ட பேரிடர் ஆலோசனை குழு உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பன்னீர்செல்வம், டவுன் லயன்ஸ் சங்க தலைவர் சின்னதுரை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். ஆசிரியர் சக்கரபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • லாரியில் கழிவுகளை கொட்ட வந்தவர் நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என தெரியவந்தது.
    • லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மதுக்கரை அருகே கருஞ்சானி கவுண்டன்பாளையம் உள்ளது. இங்குள்ள காலி இடத்தில் கேரள மாநிலத்தில் இருந்து லாரியில் பிளாஸ்டிக் கண்ணாடி கழிவுகளை சிலர் கொட்ட முயன்றனர். இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லாரியை சிறை பிடித்தனர்.

    பின்னர் லாரியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் டிரைவர் நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது55).

    லோடுமேன்கள் உக்கடத்தை சேர்ந்த ஹக்கீம் (33), கபீர் (49), உபைது (39) சுந்தராபுரத்தை சேர்ந்த இஸ்மாயில் (34) என்பது தெரியவந்தது.

    இது குறித்து பொதுமக்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொது மருத்துவமனைக்கு மக்கள் தங்களது சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
    • சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அப்பகுதியில் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் உள்ள திருவோணம் அரசு மேம்படுத்தப்பட்ட பொது மருத்து வமனைக்கு நாளொன்றுக்கு சராசரியாக 200 முதல் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் தங்களது சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    மேலும் அந்த மருத்துவ மனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்படும்.

    கர்ப்பிணி பெண்கள் ஏராள மானவர் வந்து தங்களது உடல்நிலை பரிசோதனை செய்து கொண்டும் குழந்தைகள் பிறக்கும் நிலை உள்ளது.

    இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இருந்து கந்தர்வகோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருவோணம் அரசு மருத்துவமனை முன்பு அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடையை நெடுஞ்சாலை துறை சாலை விரிவாக்கம் செய்வதற்காக அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அப்பகுதியில் நிழற்குடை அமைக்கப்படாமல் இருப்பதால் மருத்துவ மனைக்கு செல்லும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் நிழற்குடை இன்றி வெயிலிலும் மழையிலும் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய நிழற்குடை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வ லர்கள், கோரி க்கை விடுத்துள்ளனர்.

    • ஆணையாளர் தலைமையில் சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டு பகுதிகளில்சொத்து வரி, குடிநீர் வரி, திடக்கழிவு மேலாண்மை கட்டணம் போன்ற இதர வரிகள் பொதுமக்களால் செலுத்தப்பட்டு வருகிறது.

    மேற்கண்ட வரிகள் குறித்து பொதுமக்கள், வியாபாரிகள், தொழிற்கூடஉரிமையாளர்கள் ஆகியோர் வழங்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில்ஆணையாளர் தலைமையில் துணை ஆணையர், உதவி ஆணையர், துப்புரவுஅலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் கொண்ட குழுஅமைக்கப்பட்டுள்ளது. மேற்படி குழுவின் கூட்டம் பிரதி மாதம் இரண்டாம் மற்றும் நான்காம் வியாழக்கிழமைகளில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி கடந்த (8.6.2023) அன்று நடைபெற்ற கூட்டத்தில் நான்குமண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டுகளிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விதிமுறைகளுக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    எனவே பொதுமக்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காம் வியாழக்கிழமைகளில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெறும் கட்டண குறைதீர்க்கும் கூட்டத்தில் தங்களது மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.மேலும் தகவல்களுக்கு 9843174448 என்ற செல்போன் எண்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • தகவல் அறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
    • மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.

    இந்த பாலத்தின் வழியாக தஞ்சை-திருச்சி மார்க்கத்தில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் சென்று வந்தன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்வதால் மாவட்டத்தில் போக்குவரத்து அதிகம் உள்ள பாலங்களில் இது முதன்மையானதாக விளங்கியது.

    இந்நிலையில் இன்று அதிகாலை இந்த உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் திடீரென சரிந்து விழ தொடங்கியது.

    சிறிது நேரத்தில் மளமளவென பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து, உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் சம்பவம் நடந்த இடத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தான் பாலம் சரிந்து விழுந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் செங்கிப்பட்டி போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கட்சியினர் கலைந்து சென்றனர். மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் பாலம் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததால் திருச்சி, கந்தர்வக்கோட்டை செல்லும் வாகனங்கள் அனைத்தும் செங்கிப்பட்டி பிரிவு சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.

    முன்னதாக சம்பவ இடத்தை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

    • சுமார் 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • ஊராட்சி நிர்வாகத்திடம் கட்டிட அனுமதி பெறாமல் இயங்கி வரும் இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வேண்டும் .

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உள்ளிட்டோர் கடந்த 93 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம், காத்திருப்பு போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து இரும்பு உருக்காலை கடந்த 2 மாதங்களாக செயல்பட தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லடம் தாசில்தார் அலுவலகம் முன்பு அனுப்பட்டி, பணிக்கம்பட்டி, ஆறாகுளம், அய்யம்பாளையம், புளியம்பட்டி, கரடிவாவி உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சுமார் 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி கூறியதாவது:-

    90 நாட்களுக்கும் மேலாக தொடரும் பொதுமக்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலரும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இரும்பு உருக்கு ஆலைக்கு அனுமதி வழங்கி உள்ளனர். ஊராட்சி நிர்வாகத்திடம் கட்டிட அனுமதி பெறாமல் இயங்கி வரும் இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வேண்டும் . சட்ட விரோதமாக செயல்படும் ஆலைக்கு அனுமதி அளித்த அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றார்.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுடன் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால் இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் காத்திருப்பு போராட்டத்தை முன்னிட்டு பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்ட கலெக்டர் நேரில் வந்து தங்களிடம் பேச வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இதையடுத்து அவர்களிடம் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • மதுரை அருகே ரெயில் நிலைய மேம்பாடு கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.
    • ரெயில்வே திட்ட மேலாளர் பாலச்சந்தர், துணைத்திட்ட மேலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் கருத்து கேட்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில் நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பான பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., ெரயில்வே திட்ட மேலாளர் பாலச்சந்தர், துணைத்திட்ட மேலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் கலந்துகொண்டு பொது மக்களிடம் கருத்து கேட்டனர். இதில் ரெயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், தி.மு.க. பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, நிஷா கௌதம ராஜா, முத்துச்செல்வி சதீஷ், செல்வராணி ஜெயராமச்சந்திரன், அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், தொழிற்சங்கம் பாலு, சங்கங்கோட்டை சந்திரன், சரவணன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழைய சாலையை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும்.
    • சாலை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் தேர் ஓடும் வீதிகள்,கோயிலை சுற்றியுள்ள வீதிகள், தியாகிசாமிநாதர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதில் நகர்புரத்தில் சுமார் 1கோடியே 54 லட்சம் மதிப்பில் 37 சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    சீர்காழி பழைய பேருந்துநிலையம் பகுதியில் முக்கிய சாலையான பாரத வங்கி அருகே சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    சாலை அமைப்பது குறித்து விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்காமல்பழைய சாலைகள் அகற்றப்படாமல், அதன் மீது புதிய தார் சாலை தரமற்ற முறையில் அமைப்பதாக குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், புதிய சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதுடன், பணியை மேற்கொண்டவர்களிடம் விளக்கம் கேட்டனர்.

       இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக அப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பழைய சாலையை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும், தரமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் அப்பகுதியில் மட்டும் சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.

    • பனைக்குளம் ஊராட்சியில் குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஊராட்சியில் வளர்ந்து வரும் பகுதிகளான அர்ரக்மான் பள்ளி வாசல், பொன்குளம் பகுதியில் குறைந்தழுத்த மின்சாரம் வருவதால் மின் சாதனப் பொருட்கள் சேதமடை வதாகவும் சீரான மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சீரான மின்சார சப்ளை வராததால் இரவு நேரங்க ளில் கைக்கு ழந்தைகள், கர்ப்பிணிகள், முதி யோர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் கொசுக்கடியிலும், புழுக்கம் காரணமாகவும் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர்.குறைந்த அழுத்த மின்சாரத்தால் வீடுகள், மற்றும் கடைகளில் பயன்படுத்தக்கூடிய பேன், மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு விடுகிறது.

    இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறுவதோடு இது சம்மந்தமாக பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சீர் செய்யவில்லை.கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த குறைந்தழுத்த மின்சாரம் மேலும் அவதிக்குள்ளாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதிக்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்திட சம்மந்தப்பட்ட துறையின் மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×