search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • ஐந்தாம்கட்டளை ஊராட்சி சொக்கநாதன் பட்டியில் போதிய குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
    • இப்பகுதியில் போர் மூலம் ஏற்றப்படும் குடிநீர் தொட்டி மூலம் இப்பகுதிகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்தால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியம் ஐந்தாம்கட்டளை ஊராட்சி சொக்கநாதன் பட்டியில் போதிய குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆற்று நீர் குடிநீர் தொட்டி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் மக்களின் பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லை. எனவே இப்பகுதியில் போர் மூலம் ஏற்றப்படும் குடிநீர் தொட்டி மூலம் இப்பகுதிகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்தால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது. மேலும் சொக்கநாதன் பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளியில் கழிவறைகள் வசதிகள் உள்ளன . தற்போது தண்ணீர் பற்றாக்குறையினால், கழிவறைகளில் பயன்படுத்துவதற்கு கூட தண்ணீர் இல்லாமல் பள்ளி குழந்தைகளும் ஆசிரியர்களும் சிரமப்பட்டு வருகின்றனர் என இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து கடையம் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலரிடம் அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து மனு அளித்தனர்.

    • சாலையின் நடுவே குறுக்காக பள்ளம் தோண்டி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் -நாஞ்சிக்கோட்டை சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கருணாவதி நகர் பஸ் நிறுத்தம் அருகில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி பாதியிலே நிறுத்தப்பட்டு முழுமையாக முடியாத நிலையில் உள்ளது. மேலும் சாலையின் மேற்கு பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலை கிழக்குப் பகுதிக்கு இணைக்கும் வகையில் சாலையின் நடுவே குறுக்காக பள்ளம் தோண்டி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இதனால் அந்த வழியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பணியை விரைந்து முடிக்க கோரி ஏற்கனவே கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கை நிறைவேறாததால் இன்று காலை தஞ்சை- நாஞ்சிக்கோட்டை சாலையில் திடீரென பொதுமக்கள் திரண்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தொடர்ந்து நடத்தி உடனடியாக முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இது குறித்து தகவல் அறிந்த தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
    • சித்தேரியில் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க கூடாது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி - கொக்கலாடி கிராமமக்கள் தாசில்தாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்கலாடி கிராமத்தில் உள்ள சித்தேரியில் மண் அள்ளு வதற்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.

    எனவே, சித்தேரியில் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தூத்துக்குடி மாநகராட்சி 36-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற்றது.
    • விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை, கால்வாய் வசதிகள் அமைத்து தரப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

    அதன்படி மாநகராட்சி 36-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற்றது. கக்கன் பூங்கா அருகே உள்ள சுப்பையா 2-வது தெரு மற்றும் 3-வது குறுக்குத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டு ள்ளது.

    அதை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன். இந்த பகுதிக்கு தி.மு.க. ஆட்சி வந்த பிறகு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை, கால்வாய் வசதிகள் அமைத்து தரப்படும். குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், செயற்பொறியாளர் பாஸ்கர், பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் சேகர், கவுன்சிலர் விஜய லட்சுமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், அரசு வக்கீல் ஆனந்த காபிரியேல்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளார் பிரபு, வட்டச்செயலாளர் செல்வராஜ், வட்டப்பிரதிநிதி துரை, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் மற்றும் பாஸ்கர், மணி, அல்பட், மகேஸ்வரசிங், மாநகராட்சி ஆணையரின் நேர்முக உதவியளார் துரைமணி, அரசுதுறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்
    • 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஓன்றியம், பனையூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், திருக்கோவில்களில் நிலையான மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை ரூ.4,000 மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், "மக்களை தேடி மருத்துவம்", "இல்லம் தேடிக் கல்வித்திட்டம்", "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்", "புதுமைப்பெண் திட்டம்", "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டம், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்தி ட்டங்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான திட்டங்கள், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதனை பனையூர் ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    • இடுக்கி மாவட்டம் மூணாரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக நிரம்பி வருகின்றன.
    • கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேரள வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வேலை மற்றும் பல்வேறு பொருட்கள் வாங்குவதற்காக கேரள மக்கள் தினமும் உடுமலைக்கு வருகின்றனர்.

    தற்போது கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. இதனால் பண்டிகைக்காக தேவையான பொருட்களை வாங்குவதற்காக கேரள மக்கள் உடுமலையில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக உடுமலை உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கடை வீதிகளில் கேரள மக்கள்-வியாபாரிகள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை வாங்கி வருகின்றனர்.

    கேரள மாநிலம் மறையூர், காந்தலூர், மூணாறு செல்லும் பஸ்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக 9/6 செக்போஸ்ட் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்காக தனியார் ஜீப்புகளில் பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். இடுக்கி மாவட்டம் மூணாரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக நிரம்பி வருகின்றன. அங்குள்ள ஓட்ட ல்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஓணம் பண்டிகை விருந்துக்காக காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், வெல்லம், பூக்கள் உள்ளிட்டவற்றை வாங்கி விற்பனை செய்வதற்காக மாநில எல்லையோரம் கடை வைத்துள்ள வியாபாரிகள் உடுமலையில் குவிந்து, மூட்டை மூட்டையாக பொருட்களை வாங்கி சென்றனர். ஓணம் பண்டிகை கொண்டாட கேரள மாநிலம் செல்வதற்காக குவிந்த பொது மக்களால் உடுமலை பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேரள வாழ் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செட்டித்தோப்பு பகுதியில் பழமை வாய்ந்த வெள்ளக்குளம் உள்ளது.
    • அந்த குளத்தில் தான் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குளித்து செல்வார்கள்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோ ட்டை அடுத்த அதிராம்பட்டினம் செட்டி த்தோப்பு பகுதியில் பழமை வாய்ந்த வெள்ளக்கு ளம் உள்ளது.

    இந்நிலையில், இந்த வெள்ளக்குளம் பல ஆண்டுக ளாக தூர்வாரப்ப டாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த குளத்தில் தான் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குளித்து செல்வார்கள்.

    ஆனால், தற்போது அந்த குளம் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் நலன் கருதி, குளத்தை உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தமிழக மக்கள் முன்னே ற்ற கழக நகர செயலாளர் வைத்தீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் முகாம் நடந்தது.
    • இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அம்மாபேட்டை:

    பாபநாசம் அடுத்த அம்மாபேட்டையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.

    முகாமை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் மெலட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அஜந்தன், தன்னார்வலர் ராமு, மருத்துவ குழுவினர் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.
    • தண்ணீர் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சியில் 15 வார்டுகளில் சுமார் 15,000 பேர் வசித்து வருகின்றனர் .இப்பகுதி பொதுமக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நாள்தோறும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தலைஞாயிறு பேரூராட்சிக்கு ஒவ்வொரு நாளும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் தர வேண்டும்.

    ஆனால் தற்போது 4 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வருகிறது. வரும் குடிநீரை வைத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள்தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது பல நாட்கள் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதால் தண்ணீர்வராமல் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் முழு கொள்ளளவான 15 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள மக்களுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கும் .

    இது குறித்து பலமுறை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் பேரூராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு போக்குவதற்காக பேரூராட்சித் தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சை யன்,செயல் அலுவலர் சரவணன் ஏற்பட்டின் பேரில் வேளாணிமுந்தல், பழையாற்றங்கரை, லிங்கத்தடி, ஓரடியம் புலம் ஜீவாநகர், பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பல இடங்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து தலைஞாயிறு பொதுமக்களுக்கு குடிநீரை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இறந்தவரின் உடலை சாலையோரம் தகனம் செய்ய பொதுமக்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
    • மாயானம் செல்லும் வழி சேறும், சகதியுமாக இருப்பதை கண்டித்து கிராம மக்கள் சாலையோரம் தகனம் செய்ய முயற்சி

    அரியலூர்

    செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் காலனித்தெருவை சேர்ந்தவர் ஆச்சிக்கண்ணு(வயது 70). இவர் வயது முதிர்வு காரணமாக நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உடலை தகனம் செய்ய மயானத்திற்கு விறகுகளை கொண்டு செல்ல முயன்றபோது, மயானத்துக்கு செல்லும் பாதையில் முழங்கால் அளவுக்கு சேறும், சகதியுமாக இருந்துள்ளது. இதைக்கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செந்துறை - இலைக்கடம்பூர் சாலையின் ஓரத்தில் இறந்தவரின் உடலை தகனம் செய்ய விறகுகளை அடுக்கினர்.இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற செந்துறை தாசில்தார் பாக்கியம் விக்டோரியா, செந்துறை போலீசார், வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் பிரபாகரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா அழகு துரை ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதையை சீரமைத்து தந்தால் மட்டுமே, இறந்தவர் உடலை மயானத்துக்கு கொண்டு செல்வோம். இல்லையென்றால் இங்குதான் தகனம் செய்வோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

    மேலும் கடந்த ஒரு ஆண்டாக கிராம மக்கள் அந்த சாலையை சீரமைக்க பல முறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு மேலும் உங்கள் வார்த்தையை நம்ப மாட்டோம் என்று கூறி அரசு அதிகாரிகளிடம், கிராமமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அங்கு 3 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தற்காலிகமாக மயான பாதை சீரமைக்கப்பட்டது. பின்னர் இறந்தவரின் உடலை உறவினர்கள் மயானத்துக்கு கொண்டு சென்று தகனம் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மின்கம்பம் சேதமடைந்து சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. இந்த மின்கம்பத்தின் வழியாக சென்ற மின் வயர்களும் சேதமடைந்தது.
    • மின்வாரிய ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சேதமடைந்த மின்கம்பம் மற்றும் மின் வயர்களை அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்தனர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆர்.எஸ். வழித்தடத்தில் குட்டைமுக்கு பகுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    மின்கம்பம் சேதம்

    இதில் மின்கம்பம் சேதமடைந்து சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. இந்த மின்கம்பத்தின் வழியாக சென்ற மின் வயர்களும் சேதமடைந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிபாளையம் போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்தனர். சாலையில் மின்கம்பம் விழுந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சேதமடைந்த மின்கம்பம் மற்றும் மின் வயர்களை அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்தனர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

    20 மணி நேர மின்தடை

    இதனிடையே மின் கம்பம் உடைந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அப்பகுதி இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் தவித்தனர்.

    இதையடுத்து நேற்று காலையில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர். பின்னர் மாலை 6 மணியளவில் மின்கம்பம் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் சுமார் 20 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது.

    • வீடுகள் தோறும் அவசியம் கழிவறை அமைக்க வேண்டும்.
    • அனைத்து விதமான திட்டங்களையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பத னிருப்பு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை ஒட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முத்துக்குமரன் தலைமை வகித்தார்.

    பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சித் துணைத் தலைவர் அனிதா பார்த்திபன் வரவேற்றார்.

    சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகா பாரதி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறை களை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார் .

    அப்போது கிராமத்தை சேர்ந்த இளம் பெண் சாலை விரிவாக்க பணியின் போது தமது வீடு இடமாற்றம் செய்யப்பட்டதால் கழிப்பிட வசதி இல்லை என தெரிவித்தார்.

    அதேபோல் அல்லிவிளாகம் பகுதியில் விவசாய நிலங்களை காட்டு ப்பன்றிகள் சேதப்படுத்து வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    பின்னர் கலெக்டர் பேசுகையில், இந்த ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செய்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    வீடுகள் தோறும் அவசியம் கழிவறை அமைத்திட வேண்டும் கழிவறை வசதி இல்லாத வர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி அணுகி நிதி உதவி பெறலாம்.

    தமிழக அரசு செயல்படுத்தக்கூடிய அனைத்து விதமான திட்டங்க ளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி இயக்குனர் மஞ்சுளா மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குனர் சேகர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், திமுக பிரமுகர் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    முன்னதாக கிராம சபை தீர்மானங்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமுத்து வாசித்தார்.

    வேளாண்மை துறை மற்றும் சுகாதாரத் துறை மூலம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மூலம் வழங்கப்பட்டது.

    ×