என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Puliambatti weekly market for"
- புஞ்சை புளியம்பட்டியில் வாரச்சந்தை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.
- ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானதாக என வியாபாரிகள் தெரிவித்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் வாரச்சந்தை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது. இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.
இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், தாராபுரம் மற்றும் புளியம்பட்டி சுற்று பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும் வாங்கி செல்வதும் வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களில் கூடிய மாட்டு சந்தையில் ஜெர்சி மாடுகள் ரூ.52 ஆயிரத்துக்கும், சிந்து இன மாடுகள் ரூ.42 ஆயிரத்துக்கும், எருமைகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்றது.
இதில் நாட்டு மாடுகள் ரூ.57 ஆயிரத்துக்கும் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது.
அதேபோல் வெள்ளாடுகள் ரூ.15 ஆயிரம் முதல் மற்றும் செம்மறியாடுகள் ரூ.12ஆயிரம் வரையும் விற்றது.
இதில் மொத்தம் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானதாக என வியாபாரிகள் தெரிவித்தனர்.