என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » puliyankudi robbery
நீங்கள் தேடியது "Puliyankudi robbery"
புளியங்குடி அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியை சேர்ந்தவர் சங்கிலியாண்டி. ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி நாகம்மாள் (வயது60). இவரது மகன்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். இங்கு சங்கிலியாண்டியும், நாகம்மாளும் தனியாக வசித்து வந்தனர்.
நாகம்மாள் தனது 30பவுன் தங்க நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக உணவு வைக்கும் ஹாட் பாக்ஸில் போட்டு பீரோவுக்கு கீழ் உள்ள பாத்திரங்களுடன் சேர்த்து வைத்துள்ளார். நேற்று பகலில் அவர் சமையல் செய்து கொண்டிருக்கும் போது பாத்திரத்தை எடுக்கும் சத்தம் கேட்டது. உடனடியாக நாகம்மாள் வீட்டின் முன் அறைக்கு வந்தார்.
அப்போது ஒரு வாலிபர் ஹாட்பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை திருடி கொண்டிருந்தார். நாகம்மாளை பார்த்ததும் நகைகளை எடுத்து கொண்டு ஓடினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த வாலிபர் தப்பியோடி விட்டார். திருட்டு போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
தனது வீட்டில் திருடிய வாலிபர், பக்கத்து வீட்டை சேர்ந்த சுவாமி என்ற விஜயகுமார் போல் இருந்ததாக நாகம்மாள் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் கூறினார். இந்த திருட்டு சம்பவம் குறித்து புளியங்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அது தொடர்பாக வழக்குப்பதிந்து சுவாமி என்ற விஜயகுமாரை (28) தேடினார்கள். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். வெளியூருக்கு ஏதேனும் அந்த வாலிபர் தப்பி செல்லலாம் என்று கருதிய போலீசார் பஸ் நிலையங்களில் கண்காணித்து வந்தனர். அப்போது விஜயகுமார் வெளியூர் செல்வதற்காக தென்காசி பஸ் நிலையத்திற்கு வந்தார்.
அவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் நகைகள் எதுவும் இல்லை. இதையடுத்து அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது நாகம்மாள் வீட்டில் நகைகளை கொள்ளையடித்தை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் அந்த நகைகளை தென்காசி குளக்கரையில் உள்ள புதரில் வீசியதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று தேடினர். அப்போது அங்கு திருட்டு போன 30 பவுன் தங்க நகைகளும் சிதறிக்கிடந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதிக்கு வேறுயாரும் வராததால் கொள்ளை போன நகைகளை போலீசார் மீட்டனர். பின்பு விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளை நடந்த சில மணி நேரத்திலேயே போலீசார் துரிதமாக செயல்பட்டு திருட்டில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தது மட்டுமின்றி நகைகளையும் மீட்டு விட்டனர்.

×

X