என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pushpaladha Vidya Mandir School"
- இந்த தேர்வில் மாணவிகள் எந்திரா, ஷிவானி கிருத்திகாவும் 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
- சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன், முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.
நெல்லை:
பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் சி.பி.எஸ்.இ.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் ெதாடர்ந்து 11-வது ஆண்டாக மாணவர்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த தேர்வில் மாணவிகள் எந்திரா, ஷிவானி கிருத்திகாவும் 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இதில் எந்திரா தமிழ், கணிதம், அறிவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், ஷிவானி கிருத்திகா தமிழ், கணித பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இதேபோல் மாணவி ஸ்ரேயா மதுபாலா 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பர்ஹின், நித்யஸ்ரீ, ஸ்ருதி ஜெனி, ஜீனஸ் ஜெயந்தி ஆகிய 4 பேரும் 492 மதிப்பெண்கள் பெற்றுள்ள னர். இவர்கள் 4 பேரும் தமிழில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், சமூக அறிவியலில் நித்ய ஸ்ரீ 100க்கு 100-ம், அறிவியல் பாடத்தில் ஸ்ருதி ஜெனியும், கணிதத்தில் பர்ஹின் 100 மதிப்பெண்களும், பெற்றுள்ளனர்.
பள்ளி அளவில் தமிழில் 36 மாணவர்களும், கணித பாடத்தில் 9 மாணவர்களும், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 2 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் 15 மாணவர்களும், இந்தியில் ஒரு மாணவனும் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் 120 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக தமிழில் 67 பேரும், ஆங்கிலத்தில் 102 பேரும், கணிதத்தில் 103 பேரும், அறிவியலில் 108 பேரும், சமூக அறிவியலில் 62 பேரும், இந்தியில் 12 பேரும் ஏ1 தரத்தை பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன், முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.