என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Puthadagal"
- ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வாங்கி தருகிறார்.
- புத்தாடைகளை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கபாண்டியன். தனது சட்டமன்ற ஊதியத்தின் மூலம் கொரோனா நிவாரண நிதி, மாணவர் களுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி போன்றவற்றை வழங்கி வருகிறார்.
அதன்படி கடந்த 6 ஆண்டுகளாக தீபாவளியை முன்னிட்டு ராஜபாளையம் பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருது நகரில் உள்ள லைட் ஆப் லைப் குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தனது ஊதியம் மூலம் புத்தாடைகளை வாங்கி தந்து வருகிறார்.
இந்த ஆண்டு 7-வது முறையாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கண்ட 3 காப்பகத்தில் உள்ள 231 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. புத்தாடைகளை வாங்கித் தந்தார். இதற்காக அவர் அந்த குழந்தைகளை ராஜபாளையத்தில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தைகள் விரும்பி தேர்வு செய்த புத்தா டைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தனது 3 மாத ஊதியமான ரூ. 3 லட்சத்து 15 ஆயிரத்தை செலவு செய்து வாங்கி கொடுத்தார்.புத்தாடைகளை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.
இது குறித்து தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரவற்ற குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து தந்தார். அதேபோல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஆதரவற்ற குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்.
ஆதரவற்ற குழந்தைகள் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடுவதற்காக தொடர்ந்து 7 ஆண்டுகளாக புத்தாடை எடுத்து கொடுத்து வருகிறேன். குழந்தைகளை நேரடியாக கடைக்கு அழைத்து சென்று அவர்கள் விரும்பும் உடைகளை எடுத்து கொடுப்பது, அவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதை போல எனக்கும் மன நிறைவை தருகிறது. தீபாவளி அன்று காப்பகத்துக்கு நேரடியாக சென்று இனிப்பு, பட்டாசு கொடுத்து அவர்களுடன் தீபாவளி கொண்டாட உள்ளேன் என்றார். ஆதரவற்ற குழந்தை களுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. புத்தாடைகளை வாங்கி கொடுத்ததை தொகுதி மக்கள் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்