search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "QUET Exam"

    • நடப்பு கல்வி ஆண்டில் முதுநிலை படிப்புக்கான கியூட் தேர்வை 6.07 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.
    • கியூட் முதுநிலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.

    இதற்கிடையே, கியூட் இளங்கலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை கடந்த 16ம் தேதி வெளியிட்டது.

    நடப்பு கல்வி ஆண்டுக்கான முதுநிலை படிப்புக்கான கியூட் தேர்வை 6.07 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில் 3.05 லட்சம் பெண்கள் அடங்குவர்.

    இந்நிலையில், கியூட் முதுநிலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று மாலை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா மற்றும் இந்தியாவுக்கு வெளியே என மொத்தம் 489 மையங்களில் கியூட் தேர்வு நடத்தப்பட்டது.
    • கியூட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.

    நடப்பு கல்வி ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான கியூட் தேர்வை தேசிய தேர்வு முகமை கடந்த ஜூலை மாதம் 15 முதல் ஆகஸ்ட் 30 வரை ஆறு கட்டங்களாக நடத்தியது. இந்தியாவில் 259 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே ஒன்பது நகரங்களிலும் என 489 மையங்களில் கியூட் தேர்வு நடத்தப்பட்டது.

    இதற்கிடையே, கியூட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெளியாகவில்லை.

    இந்நிலையில், கியூட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று அதிகாலை வெளியிட்டுள்ளது.

    தேர்வு முடிவுகளை மாணவர்கள் cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் 'CUET UG 2022 முடிவுகள்' என்ற இணைப்பைக் கிளிக் செய்து விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    ×