என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rabies"
- பொதுவாக நாய் கடித்தால் தான் ரேபிஸ் பரவும்.
- தடுப்பூசி எடுத்து கொள்ளாததால் ரேபிஸ் நோய் முற்றி அவர் உயிரிழந்துள்ளார்.
கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்தில் வளர்ப்பு பூனை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூனை கடித்ததால் ஏற்பட்ட ரேபிஸ் தோற்றால் 50 வயதான கங்கிபாய் என்ற பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
2 மாதத்திற்கு முன்பு அப்பெண்ணின் வளர்ப்பு பூனை அவளை கண்டித்துள்ளது. பூனை கடிக்கு தேவையான தடுப்பூசிகளை அவர் எடுத்து கொள்ளாததால் ரேபிஸ் நோய் முற்றி அவர் உயிரிழந்துள்ளார்.
பொதுவாக நாய் கடித்தால் தான் ரேபிஸ் பரவி உயிரிழப்பார்கள். தற்போது பூனை கடித்து ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- முதுகுளத்தூர் அருகே வெறிேநாய் தடுப்பூசி முகாம் நடந்தது.
- 25 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நல்லூர் கிராமத்தில் கீரனூர் கால்நடை மருந்தகம் சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது. நல்லூர் ஊராட்சி தலைவர் தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் நல்லூர், கீரனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 25 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் வெறிநாய் கடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கீரனூர் கால்நடை ஆய்வாளர் முனீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களுக்கு ரேபிஸ் நோய் பற்றிய தகவல்களை எடுத்துரைக்க வேண்டும்.
- உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சியின் சார்பில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசி முன்னிலையில் ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் தலைமையில் பணியாளர்கள் உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.அப்போது ஆணையாளர் எஸ்.வெங்கடேசன் கூறியதாவது, வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி அவசியம் போடுதல் வேண்டும்.
வீட்டில் வளர்க்கும் நாய் அல்லது தெரு நாய் கடித்தாலோ கீறினாலோ உடனடியாக கடித்த இடத்தில் சோப்பினால் கழுவி அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவர் ஆலோசனையின் படி தடுப்பூசிகளை முழுமையாக போட்டு கொள்ள வேண்டும். பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ரேபிஸ் நோய் பற்றிய தகவல்களை எடுத்துரைப்பதன் மூலம் நோயால் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம் என்று கூறினார்.
- திண்டுக்கல் நகர் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் சுற்றி திரிந்து வருகிறது.
- திண்டுக்கல் மாநகராட்சி 42 மற்றும் 44 வது வார்டு பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த 10 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகர் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் சுற்றி திரிந்து வருகிறது. நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் கிழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் நாய் கடிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். மேலும் கவுன்சிலர்களும் நாய்கள் தொல்லை குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் செபாஸ்டின் முன்னிலையில், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் நகர் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சி 42 மற்றும் 44 வது வார்டு பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த 10 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அரசு கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் தகவல்
- பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால் 4 ஆண்டிற்குள் ரேபிஸ் நோய் இல்லாத பகுதியாக புதுவையை மாற்றி விடலாம்.
புதுச்சேரி:
புதுவை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு ரேபிஸ் நோய் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மராத்தான் கடற்கரை சாலையில் இன்று நடந்தது.
பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத் தலைவர் டாக்டர் செல்வமுத்து தலைமை தாங்கினார். புதுவை அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் செழியன் மராத்தானை தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசியதாவது:-
ரேபிஸ் என்பது உயிர் கொல்லி நோய். விலங்குகளிடம் இருந்து மனிதர்களை தாக்ககூடியது. இதற்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு. இதனால் வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு தடுப்பூசி அவசியம் போட வேண்டும்.
தவிர்க்க கூடிய இந்த நோய் மனிதர்களுக்கு ஏற்பட்டால் தடுப்பூசியால் மட்டுமே தடுக்க முடியும். தெரு நாய்கள் பாதிக்கப்பட்டி ருந்தால் பொது மக்கள் பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தி னருக்கு தெரிவிக்க வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒருங்கிணைந்த வகையில் தடுப்பூசி போடப்பட்டு ரேபிஸ் நோய் இல்லாத மாநிலமாக கோவா மாற்றப்பட்டுள்ளது. அந்த மாதிரி இலக்கை நோக்கிதான் புதுவையும் செல்கிறது. நாய்களுக்கு தடுப்பூசி போட பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால் 4 ஆண்டிற்குள் ரேபிஸ் நோய் இல்லாத பகுதியாக புதுவையை மாற்றி விடலாம்.
புதுவையில் ரேபிஸ் நோயால் மனிதர்கள் பாதிப்பு என்பது இல்லை.இருப்பினும் நாய்களுக்கு ரேபிஸ் நோய் அதிக அளவில் உள்ளது.இதனை தடுக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு டாக்டர் செழியன் தெரிவித்தார்.
மராத்தான் நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்களும் தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.
கடற்கரை சாலை சீகல்ஸ் ஒட்டல் அருகே தொடங்கிய மராத்தான் பழைய வடிசாலை அருகே முடிந்தது.
- தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமங்களில், கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கால்நடை வளர்ப்போரிடம் நோய் பாதிப்பின் தன்மை, சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
உடுமலை:
கேரளாவில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது. இதனைத் தடுக்க கேரள அரசு நோய் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறது. இந்த நோயின் தாக்கம் தமிழகத்தில் பரவ வாய்ப்புள்ளது.
இதனால் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமங்களில், கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கால்நடை டாக்டர், ஆய்வாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய குழுவினர் கல்லாபுரம், மானுப்பட்டி, கோடந்தூர், தளிஞ்சி, ஜல்லிப்பட்டி, செல்லப்பம்பாளையம், வாளவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கால்நடைகளைக் கண்காணிக்கின்றனர்.
மேலும் இனிவரும் நாட்களில் ஏதேனும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனே அருகில் உள்ள கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை பெற கால்நடை வளர்ப்போரிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் கூறியதாவது:-
மாநில எல்லை கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு கிடையாது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்களில் உள்ள கால்நடைகள் கண்காணிக்கப்படுகிறது.
கால்நடை வளர்ப்போரிடம் நோய் பாதிப்பின் தன்மை, சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இருந்தே கேரளாவுக்கு கால்நடைகள் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கால்நடைகள் பெருமளவு கொண்டு வரப்படுவதில்லை. இருப்பினும் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- 2 வயது சிறுமி பிரீத்தி உள்ளிட்டவர்களை தெருநாய் துரத்தி கண்டித்துள்ளது.
- கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேரை நாய் கடித்து தாக்கியதாக அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.
சிங்கை:
விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி பகுதியில் சேக்கிழார் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுமி பிரீத்தி, 6 வயது சிறுவன் மிதில், 13 வயது சிறுவன் சிவசங்கர் ஆகியோரை அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய் துரத்தி சென்று கண்டித்துள்ளது.
மேலும் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 43), காந்திமதி நாதன் (76), வேலம்மாள் (61) ஆகியோரையும் நாய்கள் கடித்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த அந்த நாய் கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேரை கடித்து தாக்கியதாக அப்பகுதி யினர் புகார் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இது சாலையில் செல்லும் சிறுவர்கள் மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரையும் கடித்து வருகிறது. நாய் கடித்து காயமடைந்தவர்கள் எங்கள் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால் சிவந்திபுரம் ஊராட்சி இந்த சம்பவத்தை கண்டுகொள்ளவே இல்லை. எனவே சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டவுன் மண்டல பகுதியில் அதிக அளவு நாய்கள் சுற்றி திரிவதாக புகார்கள் வந்தன.
- பாட்டப்பத்து, அரசன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 20-க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை டவுன் மண்டல பகுதியில் அதிக அளவு நாய்கள் சுற்றி திரிவதாகவும் இதனால் சிறுவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் காலையில் நடமாட அச்சப்படுவதாகவும் மாநகராட்சி கமிஷனருக்கு புகார் மனுக்கள் வந்தன.
இதையடுத்து கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் டவுன் பகுதியில் சுற்றி திரிந்த நாய்கள் இன்று பிடிக்கப்பட்டது.
இதில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உதவியுடன் பாட்டப்பத்து, அரசன்நகர், கிருஷ்ணபேரி, பெரியதெரு, நடுத்தெரு, குற்றாலம்ரோடு, ஆசாத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர்.
- 5 கால்நடை மருத்துவமனைகளும், 15-க்கும் மேற்பட்ட கால்நடை மருந்தகங்களும், 5-க்கும் மேற்பட்ட கால்நடை உதவி மருத்துவமனைகளும் உள்ளன. இவை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடு, மாடு கோழி நாய் உள்பட விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- இந்த நிலையில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் உள்பட ஒன்றியங்களில் சில வாரங்களாக வெறிநாய் தடுப்பூசி இல்லை. ஊசி போட நாயுடன் வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 5 கால்நடை மருத்துவமனைகளும், 15-க்கும் மேற்பட்ட கால்நடை மருந்தகங்களும், 5-க்கும் மேற்பட்ட கால்நடை உதவி மருத்துவமனைகளும் உள்ளன.
இவை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடு, மாடு கோழி நாய் உள்பட விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முக்கியமாக மாடுகளுக்கு சினை ஊசி போடுதல், கோமாரி தடுப்பூசி, வயிற்றில் உள்ள புழுக்களை நீக்க மருந்து, வெறி நாய் கடி தடுப்பூசி ஆகியவை குறிப்பிட்ட இடைவெளியில் போடப்படுகிறது.
இந்த நிலையில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் உள்பட ஒன்றியங்களில் சில வாரங்களாக வெறிநாய் தடுப்பூசி இல்லை. ஊசி போட நாயுடன் வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
சிறப்பு முகாமில் வெறிநாய் தடுப்பூசி அனைத்தும் போடப்பட்டுவிட்டது என்றும், இனிமேல் வந்தால் தான் தடுப்பூசி போடப்படும் என்றும் கூறுவதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே தேவையான தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முதுகுளத்தூரில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
- கால்நடை உதவி மருத்துவர்கள் வினிதா, சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதுகுளத்துார்
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் ஷாஜகான் தலைமை தாங்கினார்.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன், உதவி இயக்குநர் சிவக்குமார், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் நேருகுமார், தலைமையாசிரியர் சந்தனவேல், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் மங்களநாதன் முன்னிலை வகித்தனர்.முகாமில் மாணவர்களிடம் வெறிநோய் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர்கள் வினிதா, சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- முகாமில் 50-க்கும் மேற்பட்ட நாய் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- வெறிநோய் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் பள்ளி மாணவர்களுடன் நடைபெற்றது.
பாபநாசம்:
பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் காஸ்மியா மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பில் வெறிநாய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன் தலைமை வகித்தார். பாபநாசம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மாவட்ட கவுன்சிலர் பாத்திமா ஜான் ராயல் அலி, ஒன்றிய கவுன்சிலர் ரஜியா சுல்தானா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சம்பந்தம் வரவேற்று பேசினார்.
முகாமில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பாபநாசம் ஒன்றிய கால்நடை மருத்துவர்கள் மணிச்சந்திரன், ஏஞ்சலா சொர்ணமதி, சங்கமித்ரா, சௌந்தரராஜன், அபிமதி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மதியழகன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர்.
இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட நாய் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் வெறிநோய் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் பள்ளி மாணவர்களுடன் நடைபெற்றது.
முகாமில் மாவட்ட பிரதிநிதி தமிழ்வாணன், ஒன்றிய துணை செயலாளர் கலிய–மூர்த்தி, பெரிய பள்ளிவாசல் செயலாளர் யூசுப் அலி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அசரப்அலி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்–பாளர் மணி–கண்டன், துணை அமைப்பாளர் மணி–மாறன், வட்டார வளர்ச்சி அலு–வலர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன், ஐயப்பன், ராஜகிரி காஸ்மியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்க தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் ராஜகிரி ஊராட்சி செயலாளர் ஜெய்குமார் நன்றி கூறினார்.
- நாய் போல் குரைத்த நபருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- அறிகுறி ஏற்பட்ட பின்பு நோயாளிக்கு லாரிங்கோஸ்பாம் ஏற்படும்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தை அடுத்த கட்டாக், உடய்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்பியூரா. தொழிலாளி. இவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாய் கடித்தது.
நாய் கடிக்காக ராஜேஷ்பியூரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறவில்லை. இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்த போது திடீரென நாய் போல் குரைக்க தொடங்கினார்.
இதை கேட்டதும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பின்பு அவர் மேல் சிகிச்சைக்காக கட்டாக்கில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நாய் கடித்ததும் உடனடியாக அவர் சிகிச்சை பெறாததே இதற்கு காரணம் என்றனர்.
மேலும் நாய் போல் குரைத்த நபருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஹைட்ரோபோபியா என்போம். இந்த அறிகுறி ஏற்பட்ட பின்பு நோயாளிக்கு லாரிங்கோஸ்பாம் ஏற்படும். இதன்காரணமாக தொண்டை வறண்டுவிடும். அப்போது அவரது குரல் நாய் குரைப்பது போல மாறும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்