search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway Safety Commissioner"

    • சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது
    • நாங்குநேரி ரெயில் நிலையத்துக்கும், மேலப்பாளையம் ரெயில் நிலையத்துக்கும் இடையே 24½ கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது முடிவடைந்து உள்ளது.

    நெல்லை:

    சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் சென்னை- நெல்லை இடையே முழுமையாக மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி சமீபத்தில் முடிவடைந்து ரெயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

    பணிகள் நிறைவு

    நெல்லை-நாகர்கோவில் இடையே உள்ள பகுதியில் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டம் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் நாங்குநேரி முதல் வள்ளியூர் வழியாக ஆரல்வாய்மொழி வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    மீதமுள்ள நாங்கு நேரி- நெல்லை மற்றும் நாகர்கோ வில்- ஆரல்வாய்மொழி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில் நாங்குநேரி ரெயில் நிலையத்துக்கும், மேலப்பாளையம் ரெயில் நிலையத்துக்கும் இடையே 24½ கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது முடிவடைந்து உள்ளது.

    ஆய்வு

    இதற்காக மேலப்பா ளையம் ரெயில் நிலையம் கிராசிங் வசதியுடன் கூடிய 3 பிளாட்பாரங்கள், 4 தண்டவாளங்களுடன் கூடிய ரெயில் நிலையமாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து பெங்களூரு தெற்கு பகுதி ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அனந்த் மதுக்கூர் சவுத்ரி இன்று நெல்லை வந்தார். அவருடன் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் வந்திருந்தார்.

    பின்னர் மேலப்பா ளையம் ரெயில் நிலையம் சென்று அங்கு நடைபெற்றுள்ள பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு நாங்குநேரி ரெயில் நிலையம் வரை புதிதாக அமைக்கப்பட்டு உள்ள இரட்டை ரெயில் பாதையில் மோட்டார் டிராலியில் சென்று ஆய்வு நடத்தினார்.

    சோதனை ஓட்டம்

    தொடர்ந்து இன்று மாலையில் நாங்குநேரியில் இருந்து தொடங்கி சந்திப்பு ரெயில்நிலையம் வரையிலும் 110 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்கின்றனர்.

    இதனையொட்டி நாங்குநேரியில் இருந்து சந்திப்பு ரெயில் நிலையம் வரை பொதுமக்கள் யாரும் சோதனை ஓட்டம் நடக்கும்போது வரவேண்டாம் என்று ரெயில்வே துறை எச்சரித்துள்ளது.

    பரங்கிமலை ரெயில் விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் கே.ஏ.மனோகரன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். #Parangimalai #trainaccident
    சென்னை:

    கடந்த மாதம் 24-ந்தேதி சென்னை பரங்கிமலையில் புறநகர் மின்சார ரெயிலில் பயணம் செய்த 5 பேர் ரெயில் பாதை இடையே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் மீது மோதி கீழே விழுந்து உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் கே.ஏ.மனோகரன், விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்து முதல் கட்ட தகவல்களை திரட்டினார். விபத்தை நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுடனும் விசாரணை நடத்தினார். இதையடுத்து, இந்த விபத்து குறித்து முதல்கட்டமாக 26 பக்கங்கள் கொண்ட அறிக்கையை லக்னோவில் உள்ள ரெயில்வே தலைமை பாதுகாப்பு கமிஷனரிடம் அவர் தாக்கல் செய்தார்.

    அதில் கே.ஏ.மனோகரன் கூறியிருப்பதாவது:-

    பரங்கிமலை ரெயில் நிலையத் தில் பொறியியல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சரியில்லை. பயணிகள் பயணம் செய்த விதத்திலும் தவறு இருக்கிறது. இதனால் விபத்து நடந்துள்ளது. ரெயில் பெட்டிக்கு வெளியே தொங்கிக் கொண்டு பயணம் செய்த பயணிகள், பக்கவாட்டு சுவற்றில் மோதி கீழே விழுந்தபோது மற்ற பயணிகளையும் பிடித்து இழுத்துள்ளனர்.

    இந்த ரெயிலில் 1,168 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால், சம்பவத்தன்று சுமார் 2 ஆயிரத்து 200 பயணிகள் பயணித்திருக்கக் கூடும் என்று ரெயில்வே வணிகத்துறை கணக்கிட்டு உள்ளது.

    ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்பதற்காக வேகம் குறைக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பயணிகள் ரெயில் பெட்டிக்கு வெளியே தொங்கிக் கொண்டு பயணம் செய்த காரணத்தால், இரண்டு ரெயில் பாதைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்த விபத்து காரணமாக ரெயிலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. சில பெட்டிகளில் மின் சாதனங்கள் சேதமடைந்த வகையில் ரூ.294 மட்டும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.

    விபத்துகளை தவிர்க்க பரிந்துரைகள்

    வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க அவர் தெரிவித்துள்ள பரிந்துரைகள் வருமாறு:-

    * கூட்ட நேரங்களில் பயணிகள் நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரெயில்களின் இருக்கைகள் கூடுதல் பயணிகளை ஏற்றுவதற்கு வசதியாக மெட்ரோ ரெயில்களில் இருப்பது போல் நீளவாக்கில் அமைக்க வேண்டும்.

    * ரெயில் பாதைகளை கடப்பதாலும், ரெயிலில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதாலும் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

    * பிரதான ரெயில் நிலையங் களிலும், நடைபாதைகளிலும் பயணிகள் கூட்டத்தை சமாளிக் கவும், பயணிகள் ரெயில் பெட்டிகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைத் தடுக்கவும் ரெயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

    * படிகளில் பயணம் செய்பவர்களிடம் அபராதம் வசூலிப்பது தீவிரப்படுத்தப்பட வேண்டும். கடுமையாக்கப்பட வேண்டும்.

    * புறநகர் ரெயில்களில் தானாக கதவு மூடிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

    * விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்த பயணிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஏனெனில் அவர்கள் உண்மையான பயணிகள். அவர்களின் பாதுகாப்பு ரெயில்வேயின் பொறுப்பு.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 
    ×