search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajat Sharma"

    • டிவி விவாதத்தின்போது காங்கிரஸ் பெண் தலைவர் குறித்து அவதூறு வார்த்தைகள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு.
    • இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பு- ரஜத் சர்மா.

    மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளில் செய்தி தெலைக்காட்சிகள் விவாதங்கள் நடத்தின. இந்தியா டி.வி.யும் விவாதம் நடத்தியது. இந்த விவாதத்தை ரஜத் சர்மா தொகுத்து வழங்கினார். அப்போது இழிவான வார்த்தையை பயன்படுத்தியதாக காஙகிரஸ் கட்சி தலைவர் ராகிணி நாயக் குற்றம்சாட்டினார். மேலும் டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் ரஜத் சர்மா காங்கிரஸ் தலைவர்கள் ராகிணி நயக், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பவன் கெரா ஆகியோருக்கு எதிராக 100 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு தொடரந்துள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கருத்துதெரிவிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.

    இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்கள் கேட்கப்பட்டது. உத்தரவு சேம்பரில் உள்ளது என நீதிபதி தெரிவித்தார்.

    ராகிணி நாயக் குற்றச்சாட்டுக்கு ரஜத் சர்மா வழக்கறிஞர் பதில் அளிக்கையில் "விவாதம் ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளன்று நடைபெற்றது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் ஜூன் 10 மற்றும் 11-ந்தேதியில் இது தொடர்பாக டுவீட் செய்துள்ளனர். உண்மையான வீடியோவில் இல்லாத வார்த்தைகள் சேர்க்கப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

    எந்த அவதூறு பேச்சும் இல்லை. லைவ் ஷோ வெளியான ஆறு நாட்களுக்குப் பிறகு காங்கிரஸ் பெண் தலைவருக்கு எதிராக டி.வி. தொகுப்பாளர் அவதூறாக பேசியதாக டுவீட் செய்துள்ளனர். 11-ந்தேதி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி இது தொடர்பாக தெரிவித்துளளனர். ஜூன் 4-ந்தேதி இது தொடர்பாக ராகிணி ஏதும் தெரிவிக்கவில்லை. அந்த நாளில் இது தொடர்பாக கேட்கவில்லை" என்றார்.

    டெல்லி கிரக்கெட் சங்க தலைவருக்கான தேர்தலில் மூத்த பத்திரிகையாளர் ராஜத் ஷர்மா வெற்றி பெற்றுள்ளார். #DDCA #RajatSharma
    டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தலைவருக்கான பதவிப் போட்டியில் மூத்த பத்திரிகையாளரான ராஜத் ஷர்மா முன்னாள் கிரிக்கெட் வீரரான மதன் லாலை 517 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ராஜத் ஷர்மா 1531 வாக்குகளும், மதன் லால் 1004 வாக்குகளும் பெற்றனர். அத்துடன் ராஜத் ஷர்மா அணி 12 பதவிகளும் வெற்றி வாகை கூடியது.

    துணைத் தலைவருக்கான போட்டியில் பிசிசிஐயின் பொறுப்பு தலைவரான சிகே கண்ணாவின் மனைவி ஷாஷி ராகேஷ் பன்சாலிடம் தோல்வியடைந்தார். ராகேஷ் பன்சால் 1364 வாக்குகளும், ஷாஷி 1086 வாக்குகளும் பெற்றனர். சிகே கண்ணாவின் மனைவி தோல்வியடைந்ததன் மூலம் சுமார் 30 ஆண்டுகள் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் சிகே கண்ணா செலுத்தி வந்த ஆதிக்கம் முடிவிற்கு வருகிறது.



    செயலாருக்கான பதவியில் வினோத் திஹாரா வெற்றி பெற்றார். துணைச் செயலாளர் பதவியில் ராஜன் மன்சண்டா வெற்றி பெற்றார்.
    ×