search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajpath"

    • டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க பிரதான சாலை ராஜ்பாத் என அழைக்கப்படுகிறது.
    • இந்த ராஜபாதை கர்த்தவ்யா பாத் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான சுமார் 3 கி.மீ. நீளமுள்ள சாலை ராஜ்பாத் எனப்படும் ராஜபாதை என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் குடியரசு தினவிழா, சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில், ராஜ்பாத் என்ற பெயரை கர்த்தவ்யா பாத் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.

    சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் ராஜபாதையை மேம்படுத்தி, அழகுபடுத்தும் அனைத்துப் பணிகளும் திட்டமிட்டப்படி வேகமாக நடந்து வருகின்றன.

    புதிய பாராளுமன்ற கட்டிடம், மத்திய அரசு செயலகம், பிரதமர், துணை ஜனாதிபதி உள்ளி்ட்டோருக்கான குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது சென்ட்ரல் விஸ்டா திட்டம்.

    டெல்லி ராஜபாதை முதல் இந்தியா கேட் வரையிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.

    வரும் 8-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள நிலையில், ராஜபாதையின் பெயர் கர்த்தவ்யா பாதை என மாற்றப்பட்டுள்ளது.

    டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகள், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. #RepublicDay #TableauxShowcase
    புதுடெல்லி:

    நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு, தேசியக்கொடியை ஏற்றிவைத்து, ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

    பின்னர் மறைந்த லான்ஸ் நாயக் நசீர் அகமது வாணிக்கு அசோக் சக்ரா விருதினை, அவரது மனைவி மற்றும் தாயிடம் ஜனாதிபதி வழங்கினார்.

    இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படை வீரர்கள் மற்றும் பல்வேறு படைப்பிரிவுகளின் வீரர்கள் கம்பீரமாக அணிவகுத்து வந்தனர். முதல் முறையாக பாவனா கஸ்தூரி என்ற பெண் அதிகாரி தலைமையில் ராணுவ வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.  அதிநவீன டி90 பீஷ்மா ரக டாங்கி மற்றும் கே 9, வஜ்ரா-டி பீரங்கிகள் உள்ளிட்டவை அணிவகுப்பில் பங்கேற்றன.

    ராணுவ அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை விளக்கும் வகையிலான, அலங்கார வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது. 



    இதில் தமிழகத்தின் அலங்கார ஊர்தியும் இடம்பெற்றது. மதுரையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்த அலங்கார ஊர்தியில், மகாத்மா காந்தியின் தமிழக வருகையை குறிக்கும் வகையில் அவரது சிற்பம் அமைக்கப்பட்டிருந்தது. மதுரையில் உள்ள ஏழைகளை பார்த்து, அவர்களைப் போன்றே எளிய உடைக்கு காந்தி மாறிய தகவலும் இந்த ஊர்தியில் இடம்பெற்றிருந்தது. இதுதவிர,  மதுரை மீனாட்சியம்மன் கோவில், உழவர்கள் எளிய ஆடையுடன் ஏர் உழும் காட்சியும் தத்ரூபமாக வடிக்கப்பட்டிருந்தது. இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. #RepublicDay #TableauxShowcase

    ×